Latest Updates
-
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் இட்லி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூன் 2026: ஜூன் மாத முதல் நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா?
உங்கள் ராசிக்கான காதலர் தின ஸ்பெஷல் மெசேஜ் என்னன்னு டாரட் ரீடர் ரக்ஷனா சொல்றத பாருங்க...
Valentines Day 2026: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காதலர் தினம் வந்துவிட்டது. ஆரோக்கியமான காதல் என்பது பட்டாம்பூச்சிகளுடன் தொடங்குவதில்லை; அது உணர்ச்சிபூர்வமான தயார்நிலை மற்றும் நிலைத்தன்மையுடன் தொடங்குகிறது.
மேலும் காதல் என்பது ஒரு சுகமான மற்றும் அற்புதமான உணர்வு. இப்படியான காதலைக் கொண்டாடும் காதலர் தினத்தன்று காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அன்புக்குரியவரிடம் மனதில் உள்ள காதலை பலவழிகளில் வெளிப்படுத்துவார்கள்.

ஒவ்வொரு நாளும் இந்த பிரபஞ்சம் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை புரிய வைக்கவோ அல்லது தெரியப்படுத்தவோ செய்யும். அந்த வகையில் டாரட் ரீடரான ரக்ஷனா அவர்கள் டாரட் கார்டு வாயிலாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான காதலர் தின சிறப்பு மெசேஜை தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்துள்ளார். நீங்கள் உங்கள் ராசிக்கான காதலர் தின சிறப்பு மெசேஜை அறிய விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் நிறைய கொடுப்பார்கள். அதுவும் ஒருவரை பிடித்துவிட்டால் அளவில்லாமல் நிறைய கொடுப்பார்கள். இந்த காதலர் தினத்தில் இவர்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், ஏதோ ஒரு இடத்தில் மன்னிப்பு அல்லது ஆச்சரியம் அல்லது ஒரு நேர்மையான கருத்தை எதிர்பார்க்கிறார்கள். அதுவே சிங்கிளாக இருந்தால், இவர்களுடன் இருக்கும் யாரோ ஒருவர் இவர்களுக்கு ஒரு பலமாக இருப்பதோடு, ஒரு நம்பிக்கையையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தினத்தில் இந்த ராசிக்காரர்கள் நன்றி சொல்ல வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நடிப்பவர்களை பிடிக்காது. இவர்களுக்கு மிகவும் பிடித்தது என்றால் இவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நபர் தான். இந்த பாதுகாப்பு உணர்வு தான் ஒரு உறவில் இவர்களுக்கு ஒரு அதிக நம்பிக்கையை கொடுக்கும். அதுவே இவர்கள் சிங்கிளாக இருந்தால், ரொம்பவும் அமைதியாகவும், உணர்வுகளில் மிகவும் முதிர்ச்சியடைந்தவர் போன்றும் இருப்பார்கள். மொத்தத்தில் இந்த காதலர் தினத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்கள் காதலுக்காக அவசரப்படாமல், பொறுமையாக இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தற்போது சற்று குழப்பமான மனநிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு மனதிற்கு தெளிவை தரக்கூடிய ஒரு உரையாடல் தேவைப்படுகிறது. ஏனெனில் பொதுவாக இவர்கள் எளிதில் குழம்பக்கூடியவர்கள். எனவே யார் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களையே இவர்கள் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதுவே சிங்கிளாக இருந்தால், இவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் நபர்களை ரொம்பவும் பிடிக்கும். யார் ஒருவர் உணர்ச்சி ரீதியான இணைப்பை தருகிறார்களோ, அவர்கள் மீது இவர்கள் நிறைய பாசத்தை காட்டுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அன்பு தான் எல்லாமே. இவர்களுக்கு எந்த இடத்தில் ஒரு உணர்ச்சி ரீதியான அரவணைப்பு கிடைக்கிறதோ, யார் ஒருவர் "நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்று ஒரு உறுதியை தருகிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். சிங்கிளாக இருப்பதே ஒரு பலமாக நினைக்கிறார்கள். மற்றவர்களுடன் இருந்து கஷ்டப்படுவதை விட, தனியாகவே இருந்து கொள்கிறேன் என்று நினைப்பதையே பலமாக இவர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் உணர்ச்சிரீதியாக காயமடைந்துள்ளார்கள். இந்த காதலர் தினத்தில் அதிலிருந்து வெளிவந்து, ஒரு சிறப்பான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கம்பீரமாக வெளியே தென்பட்டாலும், இவர்கள் அன்புக்காக ஏங்குவது நிறைய பேருக்கு தெரியாது. மேலும் இந்த ராசிக்காரர்கள் தான் நேசிக்கும் நபர் தன்னை எப்போதும் பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். சிங்கிளாக இருந்தால், மற்றவர்களின் கவனத்தை பெற நினைப்பார்கள். எளிதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, அதைக் கொண்டாடுவார்கள் மற்றும் இதுவே இவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த காதலர் தினத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னைத் அடக்குபவர்களைப் பிடிக்காது. தன் கூடவே இருந்து, தனக்கு பிடித்த மாதிரி இருப்பவரையே ரொம்ப பிடிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அளவுக்கு அதிகமாக யோசிப்பார்கள். சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே இவர்களை சந்தோஷப்படுத்திவிட முடியும். அதுவே இவர்கள் சிங்கிளாக இருந்தால், தன்னைச் சுற்றி யார் ஒருவர் மிகவும் பாதுகாப்பாக உணர வைக்கிறார்களோ, அவர்களை நோக்கியே இவர்களின் பயணம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஒருவித குழப்பத்துடனேயே இருப்பார்கள். இந்த குழப்பத்தில் இருந்து வெளிவந்து தெளிவாக இருக்க வேண்டுமானால், அதற்கு அவர்கள் ஒரு உறவில் இருக்க வேண்டியது முக்கியம். சிங்கிளாக இருந்தால், இந்த நேரம் உணர்ச்சி பிணைப்புடன் யாரெல்லாம் அருகில் உள்ளார்களோ, அவர்களை எப்போதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் அவர்களின் நம்பிக்கை. அதாவது குறிப்பிட்ட நபர்கள் தன்னை சுற்றி இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால், அவர்களை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அரவணைப்பு அதிகம் தேவை. இந்த அரவணைப்பு கொடுக்கும் ஒரு உறவு தான் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும். மேலும் இவர்களுக்கு எந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்றால், உண்மை பேசக்கூடிய உறவு தான். அதுவே சிங்கிளாக இருந்தால், இவர்கள் ஆழமான மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பு உள்ள உறவையே தேடுவார்கள். உண்மையும், அரவணைப்பும் உள்ள ஒரு உறவையே தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட உறவு கிடைத்தால் மட்டுமே அவர்கள் அடங்குவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுதந்திரம் மிகவும் முக்கியம். யார் இவர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்களோ, அந்த உறவு தான் இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். எனவே இவர்களை ஜெயிக்கவோ அல்லது காதலிக்கவோ வைக்க வேண்டுமானால், அவர்களை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். தீவிரமான உறவுகள் இவர்களுக்கு எடுபடாது. சிங்கிளாக இருந்தால், இவர்களின் சுதந்திரத்தை பறிக்காமல், அப்படியே ஏற்றுக் கொள்பவர்களையே இவர்களுக்கு பிடிக்கும். காதலை பூட்டி வைக்காமல், இவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் காதலை தான் பிடிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தங்களின் அன்பை பாதுகாக்கும் எந்த விஷயமும் இவர்களுக்கு பிடிக்கும். முக்கியமாக இவர்களுக்கு அர்ப்பணிப்பு என்ற வார்த்தை ரொம்ப பிடிக்கும். எந்த ஒரு உறவு அதிகம் முயற்சித்து கூடவே வருகிறதோ, அந்த உறவை அதிகம் நேசிப்பார்கள். சிங்கிளாக இருக்கும் மகர ராசிக்காரர்களை எப்படி ஈர்ப்பது என்றால், இவர்களுக்கு வருங்காலம் குறித்து தீவிரமாக யோசித்து நடப்பவர்களை ரொம்ப பிடிக்கும். மேலும் பொறுமையாக இருந்தால் இவர்களுடன் காலம் தள்ள முடியும். பொறுமையாக இருக்க இருக்க இவர்களை எளிதில் ஈர்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தெளிவாக இருப்பவர்களை பிடிக்கும். இவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் ஓடிவிடுவார்கள். சிங்கிளாக இருக்கும் கும்ப ராசிக்காரர்களை கவர வேண்டுமானால், இவர்களுக்கு தனித்துவமாக இருப்பது பிடிக்கும். புதிய விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். மேலும் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று சொல்பவர்களை இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி இருந்தால் எளிதில் இந்த ராசிக்காரர்களை வசப்படுத்தலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுடன் இருக்கும் போது இந்த ராசிக்காரர்கள் நிறைய கொடுப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தன்னிடம் மனம் விட்டு அனைத்தையும் பேசும் நபர்களை ரொம்ப பிடிக்கும். சிங்கிளாக இருப்பவர்களை கவர, இவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதோடு, இவர்களிடம் மனம் விட்டு பேசுவதோடு, அவர்களையும் மனம் விட்டு பேச வைக்கும் உறவுகளை ரொம்ப பிடிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











