Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இந்த காதலர் தினத்தில் சிங்கிளா இருக்கும் இந்த 5 ராசிக்காரங்க மிங்கிள் ஆவாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Valentines Day 2025 Lucky Zodiac Signs: காதலர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காதலர் தினம் வரப்போகிறது. இந்த காதலர் தினத்தன்று எங்கு பார்த்தாலும், காதலர்கள் ஜோடியாக சுற்றுவதைக் காணலாம். மேலும் இந்நாளில் காதலர்கள் தங்கள் துணைக்கு பரிசுகளை வழங்கி தங்களின் துணையை சந்தோஷப்படுத்துவார்கள்.
ஆனால் மிங்கிளாக ஆசை இருந்தும், காதலி அல்லது காதலன் கிடைக்காமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு இந்த தினம் சற்று கடுப்பேற்றும் நாளாகவே இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டின் காதலர் தினம் சிங்கிளாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் காதலர் தினத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பார்கள். இப்போது 2025 ஆம் ஆண்டின் காதலர் தினத்தில் எந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சாகசக்காரர்கள். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் இந்த ஆண்டின் காதலர் தினத்தில் வாழ்க்கையில் ஒருவித சக்தியைத் தூண்டிவிடுவார். மேலும் சுக்கிரன் இந்த ராசிக்காரர்களின் காதல் வீட்டில் இருப்பதால், சிங்கிளாக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த காதலர் தினத்தில் தவிர்க்க முடியாத அழகை வெளிப்படுத்துவார்கள். இந்த ராசியின் அதிபதி புதன் இந்நாளில் சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை எளிதில் ஈர்ப்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பேசியே தங்கள் துணையை கவர்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தையும் பாராட்டையும் அதிகம் விரும்புவர்கள். இந்த காதலர் தினத்தன்று இந்த ராசிக்காரர்கள் வழக்கத்தை விட பிரகாசமாக காணப்படுவார்கள். இந்த ராசியின் அதிபதி சூரியன், இந்நாளில் இவர்களின் அழகை அதிகரித்து, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார். இதன் மூலம் எதிர்பாராத விதமாக வாழ்க்கைத் துணை அமைவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. துலாம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் உண்மையான காதலர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இதுவரை எந்த காதலும் அமையவில்லை என்றால், இந்த காதலர் தினத்தன்று தங்கள் வாழ்க்கை துணையை சந்திக்கலாம். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் காதலர் தினத்தில் தனது வாழ்க்கை துணையை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. நல்லிணக்கத்தை உருவாக்கும் இந்த ராசிக்காரர்களின் இயல்பான திறன், தனது காதலை எளிதில் ஈர்க்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் காதலர்தினத்தில் தங்களின் உணர்வுகளை தங்களுக்கு பிடித்தவர்களிடம் வெளிப்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச விரும்பிகள் மற்றும் சுதந்திரமான மனநிலையைக் கொண்டவர்கள். இந்த தனுசு ராசிக்காரர்கள் இந்த காதலர் தினத்தில் எதிர்பாராத சிலரை சந்திப்பதன் மூலம் தனது வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். இந்த ராசியின் அதிபதியான குரு பகவான், காதலர் தினத்தன்று உறவு வீட்டில் செல்வாக்கு செலுத்துவதால், இந்நாளில் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications