Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
120 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Trigrahi Yog 2026: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகி, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் ராஜாவான சூரியன், நீதிமான் சனி பகவான் மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரன் ஆகியோரின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கையானது மீன ராசியில் உருவாகவுள்ளது. வேத நாட்காட்டியின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 02 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மேலும் இந்த மீன ராசியில் ஏற்கனவே நீதிமான் சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் மார்ச் மாதத்தில் மீன ராசியில் சூரியன், சுக்கிரன், சனி ஆகியோரின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சுமார் 120 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 120 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். பரம்பரை தொழிலை செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். எதிரிகளைத் தோற்கடித்து வெற்றி காண்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடத்தில் உங்களின் எதிரிகளை கண்டறிந்து, அவர்களுக்கு நல்ல பாடத்தை புகட்டுவீர்கள். பேச்சால் உங்களின் பல வேலைகள் முடிவடையும். மேலும் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு குறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

