Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கபோகுது
Trigraha Yog In Gemini On June 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் அதன் நிலைகள் மற்றும் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும் வேளையில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அவற்றில் சில கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். அந்த வகையில் மிதுன ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகமானது பல ஆண்டுகளுக்கு பின் ஜூன் 15 ஆம் தேதி உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது மிதுன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும். நீண்ட காலமாக வேலை தேடி கிடைக்காமல் இருந்தால், இந்த யோக காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம். மேலும் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளன. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் புதிதாக திருமணமாகியிருக்கும் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆன்மீகத்தில் மற்றும் தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காதலித்து வந்தால், அந்த காதலை வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். மேலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் முடிவுகள் நல்ல பலனைத் தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications