Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசி பெண்கள் ரொம்பவும் திறமைசாலிகளாம்.. சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் அத சூப்பரா யூஸ் பண்ணிப்பாங்க..
Talented Women Zodiac Signs: ஜோதிடத்தின் படி, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் ராசியும், அந்நபர் பிறக்கும் போது உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த ராசிகள் ஒவ்வொன்றும் நவகிரகங்களால் ஆளப்படுகின்றன.
ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களும் வேறுபட்டிருக்கும். அதே சமயம் ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அதேப் போல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அந்த வகையில் ஜோதிடத்தின் படி ஒருசில பெண் ராசிக்காரர்கள் மிகவும் திறமைசாலிகளாக, புத்திசாலிகளாக இருப்பர்.

இந்த பெண் ராசிக்காரர்கள் தங்களுக்கு ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும், அதை திறம்பட பயன்படுத்தி, வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். இப்போது அப்படிப்பட்ட திறமை கொண்ட பெண் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் புத்திசாலித்தனத்தின் காரணியாவார். எனவே இந்த மிதுன ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பர். இவர்கள் எங்கு வேலை செய்தாலும், அதில் அவர்கள் தங்கள் திறமையால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். மேலும் இந்த ராசிப் பெண்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அதை எளிதில் சமாளித்து தீர்க்கும் வல்லமை கொண்டவர்கள். இவர்களுக்கு எப்படி பணத்தை சம்பாதிப்பது என்பது மட்டுமின்றி, சம்பாதித்த பணத்தை எப்படி சேமிப்பது என்பதும் நன்கு தெரிந்திருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் பிறவியில் இருந்தே மிகவும் திறமைசாலிகளாக, புத்திசாலிகளாக இருப்பர். கடினமாக உழைத்து, வாழ்க்கையில் வெற்றியுடன், நல்ல முன்னேற்றத்தைக் காண்பாரகள். எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கு நல்ல பெயரை எடுப்ர்கள். வாழ்க்கையைப் பற்றி மிகவும் தீவிரமாக இருப்பார்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அதை சமாளிக்கும் திறன் கொண்டிருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். எனவே இந்த கன்னி ராசியைச் சேர்ந்த பெண்களும் மிகவும் திறமைசாலிகள். இவர்களின் புத்திசாலித்தனத்தால் சிறு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இவர்களின் முடிவுகள் எப்போதும் மிகவும் சரியாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்த பெண்கள் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்களை புத்திசாலிகள் என்றே கூறலாம். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள். கடின உழைப்பாளிகள். படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள். மொத்தத்தில் திறமைசாலிகள்
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications