இந்த 4 ராசிக்காரங்க உயிரே போனாலும் நண்பர்களுக்கு துரோகம் பண்ண மாட்டார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

காதலோ, நட்போ அல்லது திருமணமோ எந்தவொரு அர்த்தமுள்ள உறவுக்கும் அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான். நம்பிக்கை உள்ள ஒரு உறவுதான் நீண்ட காலம் நிலைத்திருக்கும். சில உறவுகள் பாதியிலேயே முறிவதற்கு காரணம் அவர்களுக்குள் நம்பிக்கை சிக்கல்கள் ஏற்படுவதுதான். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் உறவுகளில் மிகவும் விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள். தங்களை நம்புபவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் அவர்கள் உடைக்க மாட்டார்கள்.

தங்களை நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது அல்லது அவர்களின் ரகசியங்களை கசிய விடுவது போன்ற இழிசெயல்களை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தங்கள் உறவுகளில் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் விசுவாசம் ஆகியவற்றை அவர்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்கள் மற்றும் அதை தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்கள் உறவில் துரோகம் செய்யத்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 4 Zodiac Signs Who Will Never Betray You

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் ரகசியத்தை பாதுகாப்பவர்களாகவும், நம்பிக்கையை உடைக்காதவர்களாகவும் கருதப்படுகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கையை தங்களின் பெருமையாகக் கருதுகிறார்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் ரகசியங்களை கடுமையாகப் பாதுகாக்கிறார்கள்.

உணர்ச்சி ஆழம் மற்றும் தீவிர உணர்வுகளுக்குப் பெயர் பெற்ற விருச்சிக ராசிக்காரர்கள் அரிதாகவே எளிதில் மனம் திறந்து பேசுவார்கள், ஆனால் ஒருமுறை மனம் திறந்து பேசினால், அவர்கள் அளவு கடந்த விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள். துரோகத்தின் வலி என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள், எனவே அவர்கள் ஒருபோதும் அந்த வலியை மற்றவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களுக்குதுரோகம் செய்யாமல் விசுவசத்துடன் இருக்கிறார்களோ அதையே அவர்கள் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் உறவுகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் பணிவானவர்கலாகவும், நம்பகமானவர்களாகவும், உணர்ச்சிரீதியாகவும் அர்ப்பணிப்புடன் உள்ளனர். உறவுகளில் அவர்களின் ஒழுக்கம், மன உறுதி மற்றும் வலுவான அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக, அவர்கள் ராசி சக்கரத்தில் மிகவும் நம்பகமான ராசிகளில் ஒருவராக இருக்கிறார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் உறவுகளில் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள். அவர்கள் நம்பகமான காதலர்கள், உண்மையான நண்பர்கள் மற்றும் விசுவாசமுள்ள மகன் என அனைத்து உறவுகளுக்கும் உண்மையாக இருப்பார்கள். உணர்ச்சி ரீதியான தூண்டுதல் அவர்களின் நேர்மையை சமரசம் செய்ய அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதன் அடிப்படையில் நிலையான உறவுகளை உருவாக்குகிறார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் எப்போதும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள் மற்றும் தங்கள் உறவுகளையும், உணர்வுகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சந்திரனால் ஆளப்படும் இந்த நீர் ராசியினர், பச்சாதாபம், இரக்கம் மற்றும் அக்கறை உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மனித உணர்ச்சிகளைப் பற்றிய அவர்களின் உள்ளுணர்வு, யாருடைய நம்பிக்கையையும் உடைக்காமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருக்க வைக்கிறது. கடக ராசிக்காரர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை தங்கள் குடும்பம் போல பாதுகாக்கிறார்கள். அவர்களின் நண்பர்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி, அவர்களின் காதலரைப் பற்றியதாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்வதைப் பற்றி அவர்கள் நினைக்கக் கூட மாட்டார்கள்.

கன்னி

ராசி சக்கரத்தின் மிகவும் பர்பெக்ட்டானவர்களாக கருதப்படும் கன்னி ராசிக்காரர்கள், தங்கள் தனிப்பட்ட தொடர்புகளில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் யாருக்கும் வழங்க மாட்டார்கள். அவர்கள் நம்பகமானவர்கள், விசுவாமனவர்கள் மற்றும் ரகசியங்களைப் பாதுகாப்பதில் சிறந்தவர்கள், அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டார்கள்.

அவர்கள் அமைதியானவர்கள், லாஜிக்காக சிந்திப்பவர்கள் மற்றும் அனைத்து விதமான சூழ்நிலைகளையும் கையாள்வதில் கைதேர்ந்தவர்கள். அவர்களின் பகுப்பாய்வு குணம் துரோகம் செய்யப்படுவதற்கான சூழலை முன்கூட்டியே கணிக்க உதவுவதால் அவர்கள் அந்த சூழ்நிலைகளைத் தவிர்க்கிறார்கள் மற்றும் தங்கள் மீது வைத்த நம்பிக்கையைப் பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 26, 2025, 8:00 [IST]
Desktop Bottom Promotion