Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த 4 ராசிக்காரர்களின் குழந்தைகள் பெரிய புத்திசாலியாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணமான அனைத்து தம்பதிகளின் கனவும் அழகான மற்றும் அறிவான குழந்தைக்கு பெற்றோராக வேண்டுமென்பதுதான். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தை திறமைசாலிகளாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அனைவருக்கும் அந்த கனவு நிறைவேறுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்களின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் இருக்கும் தனித்துவமான திறமைகளையும், திறன்களையும் கொண்டிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில ராசி பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளின் திறமைகளில் கூடுதல் ஆதிக்கம் செலுத்தும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெற்றோர்கள் எல்லையற்ற ஆற்றல், மன உறுதி மற்றும் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் துடிப்பான ஆற்றல் அவர்களின் குழந்தைகளை சாகசக்காரர்களாகவும், லட்சியவாதிகளாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றுகிறது. அவர்களின் குழந்தைகளை விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளில் சிறந்து விளங்குபவர்களாக மாற்றுகிறார்கள், அவர்களின் இயற்கையான விளையாட்டுத் திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை மேம்படுத்துவார்கள்.
இதனால் அவர்கள் சவால்களை அச்சமின்றி அணுகுகிறார்கள் மற்றும் சிறந்த சிக்கல் தீர்க்கும் திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளால் அவர்களுடைய குழந்தைகள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், நடிப்பு, நடனம் அல்லது இசை போன்ற கலைகளில் ஒரு திறமையைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளிடம் அரவணைப்பு, உற்சாகம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள், இந்த குணங்கள் அவர்களின் குழந்தைகளிடமும் வெளிப்படும். அவர்களின் குழந்தைகள் இயற்கையான வசீகரத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் எளிதில் கவனத்தை ஈர்ப்பார்கள்.
அவர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டிருப்பார்கள் மற்றும் மேடையிலோ அல்லது கேமரா முன்னரோ தயக்கமின்றி திறமையை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். அவர்களின் வெளிப்படையான இயல்பு மற்றும் கலைத் திறமைகள் பெரும்பாலும் நடிப்பு, பாட்டு அல்லது பேச்சு ஆகியவற்றில் பிரகாசிக்கின்றன. அவர்க்ளின் திறமைகளால் அவர்கள் எப்போதும் தலைமைபொறுப்புகளில் இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசி பெற்றோர்கள் நல்லிணக்கம், ராஜதந்திரம் மற்றும் ஒற்றுமையை மதிக்கிறார்கள். இந்த குணங்கள் பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளை அழகானவர்களாகவும், கலைநயமிக்கவர்களாகவும், சமூகரீதியாக திறமையானவர்களாகவும் மாற்றுகின்றன. அவர்களின் குழந்தைகளை உள்ளார்ந்த சமநிலை மற்றும் நல்லிணக்க உணர்வு கொண்டவர்களாக வளர்க்கிறார்கள், இது அவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படலாம்.
அவர்கள் கலைத்துறையில் பெரிய சாதனையாளர்களாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் சிறந்த தொடர்பாளராக இருப்பார்கள் மற்றும் ஒற்றுமையை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் மோதல்களை தீர்ப்பது போன்ற துறைகளில் அவர்கள் சிறந்து விளங்க முடியும்.
தனுசு
தனுசு ராசி பெற்றோர்கள் சாகச மனப்பான்மை, கற்றல் மீதான ஆர்வம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை ஆர்வமுள்ளவர்களாகவும், திறந்த மனதுடையவர்களாகவும், திறமையுள்ளவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறார்கள்.
அவர்களின் குழந்தைகள் இயற்கையாகவே அறிவுத் தாகம் கொண்டவர்களாகவும், கல்வித் துறைகளில் சிறந்து விளங்கவும் முனைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய பரந்த மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள், மேலும் தங்கள் வயதுக்கு அப்பாற்பட்ட அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

