Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிகளில் பிறந்தவங்க மோசமான முதலாளியாக இருப்பார்களாம்... இவங்ககூட யாராலும் வேலை செய்ய முடியாது...!
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் அவர்கள் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த தலைவருக்குரிய பண்புகள் கொண்டவர்களாக இருப்பார்கள், அதன்மூலம் அவர்கள் நல்ல தலைவராகவும், முதலாளியாகவும் இருப்பார்கள். ஆனால் சிலர் எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களால் நல்ல தலைவராகவோ, முதலாளியாகவோ இருக்க முடியாது.
ஒரு நல்ல தலைவராக இருப்பதற்கு அவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தர்க்கரீதியாக சிந்திப்பது மற்றும் மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவது போன்ற நற்குணங்கள் அவசியம் இருக்க வேண்டும். ஆனால் அனைவரிடமும் இந்தக் குணங்கள் இருப்பதில்லை, இந்த குணங்கள் இல்லாதவர்கள் மோசமான முதலாளியாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மோசமான முதலாளியாக அல்லது தலைவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்குத் தலைமை தாங்கும் குணங்கள் இருந்த போதிலும், அவர்கள் ராசி சக்கரத்திலேயே மிகவும் மோசமான தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக முற்றிலும் புதிய மற்றும் புதுமையான வழிமுறைகளை உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட எப்போதும் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகளோடு ஒத்துப்போகாதவர்கள் அல்லது அவரது வழிமுறைகளை பின்பற்றாத போது அவர்கள் மோசமான முதலாளியாக மாறுவார்கள். அதனால் அவர்களுக்கு கீழே பணிபுரிய பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுடன் சேர்ந்து வேலை செய்வது சிறப்பாக இருக்கும், ஆனால் அவர்களுக்குக் கீழ் வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இயல்பாகவே அவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பதில்லை. தாங்கள் எவ்வளவு திறமையானவர் மற்றும் அவர்கள் எவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள் என்பதைப் பெரிதுபடுத்திக் கூறுவதற்கும், வேலை விஷயங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பதற்கும் பெயர் பெற்றவர்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்கள் மனதில் இருண்ட உணர்வுகளை வளர்த்துக்கொள்ளும் குணம் கொண்டவர்கள், தங்கள் இருண்ட குணங்களை அவர்கள் உடனடியாக வெளிப்படுத்த மாட்டார்கள். உங்களுடன் ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டால், அவர்கள் காத்திருந்து அதற்காக பழிவாங்குவார்கள்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்களாக இருப்பார்கள், அவர்கள் ஒருபோதும் தங்கள் எதிர்பார்ப்புகளில் சமரசம் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள், இது அவர்களை மோசமான முதலாளிகளாக மாற்றுகிறது. தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் தங்களின் சொல் கேட்டு நடக்க வேண்டுமென்று அவர்கள் தீவிரமாக எதிர்பார்ப்பார்கள். அப்படி கேட்காத போது அவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்க தயங்க மாட்டார்கள். இது அவர்களை எதிர்த்து கருத்து தெரிவிப்பதை மிகவும் அச்சுறுத்தலாகவும், அவர்களுடன் பணிபுரிவதை கடினமாகவும் மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் வழியில் மட்டுமே காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற பழமைவாத ஆளுமை உடையவர்கள். அதனால், புதுமையான யோசனைகள், வழக்கத்தை மாற்றும் முயற்சிகள், ஒரு புதிய கருத்தை முன்வைப்பது போன்ற விஷயங்களில், அவர்கள் அதை ஊக்குவிக்க மாட்டார்கள். தாங்கள் பழகிய பழைய முறையிலோ அல்லது நீண்ட காலமானாலும் அவர்கள் சொல்லும் வழியிலோ வேலை செய்வதையே அவர்கள் விரும்புவார்கள். அவர்களின் இந்த மனப்பான்மை, அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு வேலை செய்வதை கடினமாக்கக்கூடும். இதனால் அவர்கள் மோசமான முதலாளியாக மாறுகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
