இந்த 5 ராசிக்காரங்க அவங்க குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகுவார்களாம்... உலகின் சிறந்த அப்பாக்கள் இவங்கதான்...!

ஒரு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே இருக்கும் பந்தம் என்பது என்பது அதிசயமானது மற்றும் விலைமதிப்பற்றது. மகிழ்ச்சியான தருணங்களால் ஏற்படும் நெருக்கமாக இருந்தாலும் சரி, கசப்பான நிகழ்வுகளால் ஏற்படும் இடைவெளிகளாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமான பிணைப்பு அசைக்க முடியாதது.

அனைவரும் ஒரே மாதிரியான தந்தையாக இருப்பதில்லை, ஒவ்வொருவரும் தங்களுக்கென தனிப்பட்ட வழியைக் கொண்டுள்ளனர். ஒருவர் எப்படிப்பட்ட தந்தையாக இருப்பார் என்பதை அவர்களின் ஆளுமைதான் முடிவு செய்கிறது. சிலர் கண்டிப்பான தந்தைகளாக இருக்கும் அதேசமயத்தில், சிலர் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் நட்பாக இருக்கும் கூலான தந்தைகளாக இருப்பார்கள்.

Top 4 Zodiac Signs Who Make Friendly Fathers

ஒருவர் எப்படிப்பட்ட தந்தையாக இருப்பார் என்பதை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசியும் முக்கியப்பங்கு வைக்கிறது. சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பான மற்றும் நட்பான தந்தையாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் வேடிக்கையான மற்றும் விளையாட்டுத்தனமான ராசிக்காரர்களில் ஒருவர். தங்கள் குழந்தைகளை சரியாக புரிந்துகொள்ளும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு திறனைக் கொண்டிருப்பதோடு, அவர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களிடம் நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு அன்பான ஆளுமையையும் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உலகை புரிந்து கொள்ளவும் அவர்களின் வாழ்க்கையை அனுபவிக்கவும் சுதந்திரம் அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் ஆர்வங்களில் அவர்களுடன் ஈடுபடவும் செய்கிறார்கள். இது அவர்களை சிறந்த தந்தைகளில் ஒருவராக மாற்றுகிறது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் ஆன்மாவாக இருப்பார்கள். அவர்களின் குழந்தை என்று வரும்போது சொல்லவா வேண்டும். கடக ராசி தந்தைகளுக்கு அவர்களின் குழந்தைகளின் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம். எனவே அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையேயான ஆறுதலின் அளவை அதிகரிப்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர், இது அவர்களை மேலும் நட்பான தந்தையாக மாற்றுகிறது.

Top 4 Zodiac Signs Who Make Friendly Fathers

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு மற்றவர்களை விட அதிகம் கொண்டவர்கள் மற்றும் எப்போதும் வேடிக்கையான சூழலில் வாழ விரும்புபவர்கள். இந்த நகைச்சுவையான ஆளுமை பெரும்பாலான தந்தைகளிடம் இருப்பதில்லை. மிதுன ராசி தந்தைகள் தங்கள் குழந்தைகளின் உலகில் முக்கியப்பங்கு வகிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்காக தங்களால் முயன்ற அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். மிதுன ராசி தந்தை தங்கள் குழந்தைகளுடன் நட்பாக இருப்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாகும்.

சிம்மம்

சிம்ம ராசி தந்தைகள், தங்கள் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க எப்போதும் விரும்புவார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஆபத்துகளை சந்திப்பதைத் தடுப்பதன் மூலம் அல்ல, மாறாக அந்தப் பிரச்சினைகளை திறம்படச் சமாளிக்க உதவுவதன் மூலம் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறார்கள். சிம்ம ராசி தந்தைகள் எப்போதும் தங்களின் குழந்தைக்கான சிறந்த ரோல் மாடலாக இருப்பார்கள், மேலும் மற்ற குழந்தைகள் பொறாமைப்படும் தந்தையாக இருப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் நட்பான தந்தையாக இருக்கிறார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சிறந்த பராமரிப்பாளர்களாக இருப்பார்கள், அவர்கள் தங்கள் குழந்தையின் உடல் திறன்களைக் கவனித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிவுசார் தேவைகளுக்கும் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் தனித்துவத்தின் மதிப்பைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் குழந்தைகள் முன்னேற அவர்கள் அனுமதிக்கிறார்கள். இது அவர்களின் குழந்தைகளை அவர்களின் சிறந்த நண்பர்களாக நினைக்க வைக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 9, 2025, 10:15 [IST]
Desktop Bottom Promotion