இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வயசானதுக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

ஒருவரின் எதிர்காலம் என்று வரும்போது அதில் அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒருவருடைய வாழ்க்கையின் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் நிர்ணயிப்பது அவர்களின் திருமண வாழ்க்கைதான். திருமணம் ஒருவரின் வாழ்க்கையில் அவசியமானதாக இருந்தாலும் அது எப்போது நடைபெறும் என்பது பல்வேறு காரணங்களை பொறுத்தது.

சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்திலேயே அதாவது 20 வயதிகளிலேயே திருமணம் செய்து கொள்வார்கள், ஆனால் சிலர் பல காரணங்களுக்காக தங்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு மிகவும் தாமதமாக செய்து கொள்வார்கள். அவர்கள் எவ்வளவு சமூக அழுத்தம் இருந்தாலும் விரைவாக திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஜோதிடத்தின் படி அவர்கள் இப்படி தாமதமாக திருமணம் செய்து கொள்வதற்கு அவர்களின் பிறந்த ராசி ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 4 Zodiac Signs Who Likely To Get Married Later in Life

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் அவர்களின் ஒழுக்கத்திற்கும், நீண்ட காலத்திற்கு அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்றவர்கள், இது அவர்களை நம்பகமான வாழ்க்கைத் துணைவர்களாக மாற்றும். இருப்பினும், அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். மகர ராசிக்காரர்கள் கர்மாவின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள், இது கட்டுப்பாடுகள், தாமதங்கள் மற்றும் பொறுப்புடன் தொடர்புடையது.

மகர ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பை மதிக்கிறார்கள், இது அவர்களின் உறவுக்கு சிறந்த தொடக்கத்தை வழங்க சிறந்த வேலையைப் பெறுவதிலும் எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமிப்பதிலும் கவனம் செலுத்த வழிவகுக்கிறது. மகர ராசிக்காரர்கள் தங்கள் இளமைக்காலத்தை தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, திருமணம் செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்கலாம், மேலும் பல ஆண்டுகளாக உறவுகளில் விசுவாமுள்ள ஒருவராக அவர்கள் இருக்கலாம். இருப்பினும், அவர்களின் திருமணம் வாழ்க்கையில் இணைவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். திருமண உறவு அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களால் இணைந்து ஆட்சி செய்யப்படுகிறார்கள். சனி பொறுப்பு மற்றும் தாமதங்களில் கவனம் செலுத்துகிறது, அதேசமயம் யுரேனஸ் கிளர்ச்சி, புதுமை மற்றும் தீவிர மாற்றங்களுடன் தொடர்புடையது. இந்த கிரகங்களின் தாக்கங்கள் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளுக்கு வழக்கமான அணுகுமுறையைப் பின்பற்றுவதை கேள்வி கேட்க வழிவகுக்கும். இதனால் அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள்.

Top 4 Zodiac Signs Who Likely To Get Married Later in Life

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பர்பெக்ட்டானவர்கள் என்ற கெட்ட பெயரைப் பெற்றவர்கள். மகர ராசிக்காரர்களைப் போலவே, கன்னி ராசிக்காரர்களும் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள். இருப்பினும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு உறுதியளிக்க முடிவெடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, மேலும் கன்னி ராசிக்காரர்கள் அனைத்து கோணத்திலிருந்தும் சிந்தித்து அவர்களுக்கு திருப்தியான முடிவு கிடைக்கும்வரை உறவில் இறங்க மாட்டார்கள்.

அவர்களை ஆளும் கிரகமான புதன், விவரங்களில் கவனம் செலுத்த வழிவகுக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு, அவர்களின் உறுதிமொழிகளும், வார்த்தைகளும் புனிதமானவை, எனவே அவர்கள் அவசரப்பட்டு திருமண உறவில் ஈடுபட மாட்டார்கள். தங்களை திருமண உறவிற்கு தயாராக்கி கொள்வதற்கு அவர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் அவர்கள் மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், மேலும் அவர்கள் புதிய விஷயங்களை ஆராய்வதற்கு பெயர் பெற்றவர்கள், இதனால் திருமணம் அவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதி வரை முன்னுரிமையாக இருக்காது. தனுசு ராசிக்காரர்கள் அர்ப்பணிப்புடன் இருக்க முடியும், ஆனால் அந்த அர்ப்பணிப்பு அவர்களின் சுதந்திரத்தை ஆபத்தில் ஆழ்த்தாது என்பதை உறுதி செய்யும் வரை அதில் நுழைய மாட்டார்கள். திருமணத்திற்கு பெரும்பாலும் தியாகங்கள் தேவை என்பதை தனுசு ராசிக்காரர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் நேரம் வந்துவிட்டதாக உணரும்போது மட்டுமே திருமணத்தைப் பற்றி நினைப்பார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள், இதுவளர்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் அவர்கள் திருமண உறவில் இணைவதற்கு முன் முன் உலகை ஆராயவும், தங்களுக்கு புதிய பக்கங்களைக் கண்டறியவும், அனுபவிக்கவும் வாய்ப்பை விரும்புகிறார்கள். அவர்கள் சாகசம் மற்றும் வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஒரு துணையைக் கண்டால், அவர்கள் திருமணத்தைப் பற்றி சிந்திப்பார்கள், ஆனால் அவர்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள ஒருபோதும் அவசரப்படுவதில்லை.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion