Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த 4 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை ரொம்ப மோசமானதாக இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பு முனையாகும். ஒரு வெற்றிகரமான திருமண உறவுக்கு தீவிர அர்ப்பணிப்பு, புரிதல் மற்றும் நிறைய சமரசங்கள் தேவை. பலர் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு திருமண உறவைப் பற்றி கனவு கண்டாலும், அனைவருக்கும் அந்த கனவு நிறைவேறுகிறதா என்றால் அது சந்தேகமே.
ஜோதிடம் ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது, அதன்படி சில ராசிக்காரர்கள் திருமண உறவைப் பராமரிப்பதில் மற்றவர்களை விட அதிக சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறுகிறது. வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு தேவைப்படும் திருமண உறவில் அவர்களின் ஆளுமை மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகள் காரணமாக அவர்கள் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மோசமானதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
புதனால் ஆட்சி செய்யப்படும் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள். இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மிதுன ராசிக்காரர்கள் ஒரு கணம் வசீகரமாகவும், ஈடுபாட்டுடனும் இருப்பார்கள், பின்னர் அடுத்த கணமே அமைதியற்றவர்களாகவும், நிலையற்றவர்களாகவும் இருப்பார்கள். இந்த கணிக்க முடியாத தன்மை திருமணத்தில் சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
ஏனெனில் வெற்றிகரமான திருமண உறவுக்கு நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை முக்கியம். இதற்கு நேர்மாறாக மிதுன ராசிக்காரர்களுக்கு உற்சாகம் மற்றும் புதிய அனுபவங்கள் தேவைப்படுவது திருமண வாழ்க்கையின் வழக்கமான அம்சங்களில் அவர்களை சலிப்படையச் செய்யலாம். அடிக்கடி அவர்களின் ஆர்வங்களை மாற்றிக்கொள்ளும் போக்கு அவர்களின் உறவில் சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் சாகசங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள். தனுசு ராசிக்காரர்கள் புதிய அனுபவங்களை பெரிதும் விரும்புவார்கள், பெரும்பாலும் திருமணத்தின் விதிமுறைகளால் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். சுதந்திரத்திற்கான அவர்களின் ஆசை மற்றும் கட்டுப்படுவது மீதுள்ள வெறுப்பு ஆகியவை நிலையான திருமண உறவைப் பராமரிப்பதில் சவால்களை உருவாக்கலாம்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வெளிப்படையான நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள், இது சில சமயங்களில் பாசிட்டிவாக இருந்தாலும், பல சமயங்களில் அவர்களின் துணையை காயப்படுத்துவதாக மாறலாம். அவர்களின் சுதந்திரத்திற்கான தேவை மற்றும் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற பயம் அவர்களின் திருமண உறவை மோசமானதாக மாற்றும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிர ஆர்வம் மற்றும் ஆதிக்க உணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் பெரும்பாலும் தங்கள் உறவுகளில் ஆழமான, மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவங்களைத் தேடுகிறார்கள். இது ஆழமான தொடர்புகளுக்கு வழிவகுக்கும் அதே வேளையில், திருமணத்திலும் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்களின் அதிகாரப்போக்கு மற்றும் பொஸசிவ் குணம் அவர்களின் திருமண உறவை சீர்குலைத்து, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதை கடினமாக்கும். அவர்களின் தேவைகளை கையாளுவது அவர்களின் துணைக்கு மிகவும் கடினமாக இருக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் சுதந்திரம் மற்றும் தொலைநோக்கு சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். கும்ப ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் முன்னோடிகளாகக் காணப்படுகிறார்கள், எப்போதும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து, விதிமுறைகளை மீறுகிறார்கள். இந்த குணாதிசயங்கள் அவர்களை கவர்ச்சிகரமான நபர்களாக மாற்றினாலும், அவர்கள் ஒரு திருமண உறவில் நிலைத்திருப்பதை கடினமாக்குகிறது.
குடும்ப பொறுப்புகளை விட தனிப்பட்ட இலக்குகள் மற்றும் இலட்சியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அவர்களின் போக்கு திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும் அவர்களின் தனிமையான இயல்பு, ஒரு வெற்றிகரமான திருமணத்திற்குத் தேவையான உணர்வுரீதியான பிணைப்பை உருவாக்குவதை கடினமாக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
