Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
இந்த 4 ராசிக்காரர்களால் மற்றவர்களின் வெற்றியை பொறுத்து கொள்ளவே முடியாதாம்... பொறாமையிலேயே செத்துருவாங்க...!
வெற்றியை பெறுவதற்காகத்தான் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் கடுமையாக பாடுபடுகிறார்கள். சிலர் கடினமாக உழைத்து அந்த வெற்றியை அடையவும் செய்கிறார்கள். ஒருவரின் சாதனைகளும், வெற்றிகளும் அவர்களுக்கு மட்டுமே உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் சில உண்மையான நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அவர்களுக்காக உண்மையாக சந்தோசப்படுவார்கள்.
மற்றவர்கள் அவர்களின் வெற்றிகளைப் பார்த்து பொறாமையும், எரிச்சலுமே கொள்வார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்தாவிட்டாலும் அவர்களின் மனதில் மற்றவர்களைப் பார்த்து பொறாமை எண்ணங்கள் நிறைந்திருக்கும். இதனால் அவர்கள் மோசமானவர்கள் என்று அர்த்தமில்லை ஆனால் அவர்களின் பாதுகாப்பின்மையும், போட்டியுணர்வும் அவர்களை மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ள வைக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் பொறாமை உணர்வு அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் அனைத்து விஷயத்திலும் தீவிரமாக செயல்படக் கூடியவர்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் மற்றவர்களிடமிருந்தும் அதே உழைப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள ஒருவர் அவர்களை விட பெரிய வெற்றியை அடையும் போது அவர்கள் ரகசியமாக பொறாமைப்படுவார்கள்.
அவர்களின் போட்டித் தன்மை மற்றும் அதிகாரம் மீதான ஆசையால் மற்றவர்களின் வெற்றியை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் பொறாமையை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள், எனவே அவர்களின் பொறாமையை அவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்போதும் உச்சத்தில் இருக்க விரும்புகிறார்கள், மேலும் மற்றவர்களின் பாராட்டுகளை விரும்புகிறார்கள். இந்த நிலையில் மற்றவர்கள் கவனத்தையும், பாராட்டுக்களையும் பபெறும் போது அவர்களால் அதை சகித்துக் கொள்ள முடியாது. இதை அவர்களின் புகழுக்கும், நற்பெயருக்கும் ஏற்பட்ட களங்கமாக அவர்கள் கருதுவார்கள்.
தங்களின் உழைப்பும், முயற்சியும் கவனிக்கப்படாமல் போய்விட்டதாக அவர்கள் நினைத்தால் அது வெறுப்பு மற்றும் பொறாமை உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அவரவர் உழைப்புக்கு ஏற்ற வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதை உணராத வரை அவர்கள் மனதிலிருந்து பொறாமை எண்ணம் நீங்காது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் போர் வீரர்கள். அவர்கள் எப்போதும் சிறந்தவர்களாகவும், பாராட்டப்படுபவர்களாகவும் இருப்பதை விரும்புகிறார்கள். அவர்கள் உற்சாகமும், சுறுசுறுப்பும் கொண்டவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் தங்களை விட வேகமாகவோ அல்லது எளிதாகவோ வெற்றிபெறும்போது அவர்கள் மிகவும் அமைதியற்றவர்களாகவோ அல்லது எரிச்சலடைந்தவர்களாகவோ மாறலாம். அவர்களின் வலுவான ஈகோ மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து அவர்களை பொறாமை கொள்ள வைக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தீவிரமான லட்சியவாதிகள் மற்றும் வெற்றியில் அதீத கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் கடினமாக உழைத்து வெற்றிகளை குவிப்பதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் அதே கடினமான பாதையைப் பின்பற்றாமல் யாராவது உச்சத்தை அடைந்தால் மகர ராசிக்காரர்கள் விரக்தியடைந்தோ அல்லது கசப்பாகவோ உணரலாம். அவர்கள் உழைப்பால் வெற்றியை அடைவது இயல்பானதோ அதேபோல மற்றவர்கள் அதிர்ஷ்டத்தால் வெற்றியை அடைவதும் இயல்பானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












