Latest Updates
-
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது!
இந்த 4 ராசிக்காரங்க அவங்க விதியை மாற்றும் சக்தியும், திறமையும் உள்ளவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொதுவாக அவர்கள் விதியே காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாக ஒருவரின் விதி என்பது அவர்கள் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால் சிலர் தங்களின் மனவலிமையாலும், திறமையாலும் தங்களுடைய விதியை வடிவமைக்கும் மற்றும் மாற்றக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் விதியை சவால் செய்து, தங்கள் சொந்த விதியை உருவாக்கி மாற்றும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளனர். அவர்களின் சக்தியால் அவர்கள் தங்களுக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களின் விதியை மாற்றும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலான மற்றும் சாகச குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் விதியை தாங்களே பொறுப்பேற்று, காரியங்களைச் சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.
அவர்களின் மனஉறுதி மற்றும் உந்துதலால் அவர்கள் தங்கள் வழியில் வரும் எந்த தடைகளையும் கடக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைவராகப் பிறந்தவர்கள் மற்றும் தங்கள் விதியை மாற்ற எந்த ஆபத்துக்களையும் சந்திக்கப் பயப்படுவதில்லை.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள், எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருக்க விரும்புகிறார்கள். சூரியனால் ஆளப்படுவதால் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரகாசமாகவும் தனித்து நிற்கவும் செய்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் பெரிய கனவுகளைக் கொண்டுள்ளனர், அவற்றை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்கள்.
அவர்கள் வெற்றியை எதிர்பார்த்து அமைதியாக உட்காருவதில்லை, அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு அதை நோக்கி ஓடுகிறார்கள். அவர்கள் வெற்றிகள் மூலம் தங்களின் விதியை மாற்றுகிறார்கள். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அவர்கள் நேர்மறையான அணுகுமுறையைக் கடைபிடிக்கிறார்கள். இது அவர்களின் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற உதவுகிறது.
விருச்சிகம்
மாற்றத்தின் கிரகமான புளூட்டோவாலும், கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் மனித உணர்வுகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர், மேலும் அதன் மூலம் அவர்களால் தங்களின் விதியை மாற்றியமைக்க முடியும், மேலும் நினைத்ததை சாதிக்க முடியும்.
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் சொந்த மனவலிமை மற்றும் மீள்தன்மை மூலம் தங்களை மாற்றிக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் அச்சங்களை எதிர்கொள்ள பயப்படுவதில்லை, அவர்களால் தங்கள் வழியில் வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் பச்சாதாப இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வுகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர் மற்றும் தங்கள் சொந்த உள்ளுணர்வைப் பயன்படுத்தி எப்போதும் சரியான பாதையில் செல்கிறார்கள். மீன ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளையும் விருப்பங்களையும் தங்கள் படைப்பாற்றல் மற்றும் கற்பனை மூலம் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தனித்துவமான பார்வை மூலம் தங்கள் சொந்த விதியை வடிவமைக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

