Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
இந்த 3 ராசிக்காரங்க காலத்தை வென்று எப்போதும் இளமையாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகளாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும், ஆனால் அப்படி யாராலும் இருக்க முடியாது என்பதே கசப்பான உண்மை. ஆனால் வயதானாலும் உடலளவிலும், மனதளவிலும் அழகிய தோற்றத்தை சில உத்திகள் மூலம் கடைபிடிக்கலாம். இது எல்லோராலும் முடியுமென்றாலும் சிலருக்கு இது மிகவும் சுலபலமாக இருக்கும்.
ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் மனதளவில் எப்போதும் இளமையாகவே இருக்கிறார்கள். அவர்களின் உண்மையான வயது எதுவாக இருந்தாலும், இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் காலத்தை வென்று எப்போதும் இளமையாக இருக்கும் ஒரு துடிப்பான ஆற்றலையும், வாழ்க்கை மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் எவ்வளவு வயதானாலும், எப்போதும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இரட்டை ஆளுமை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் அளவிலாத ஆற்றலுடனும், புதிய விஷயங்கள் மீதான தீராத ஆர்வத்துடனும் இளமை மாறாமல் வாழும் சுதந்திர பறவையாக இருப்பார்கள். அவர்களின் மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும், மேலும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவார்கள் மற்றும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மனரீதியாக எப்போதும் முதுமையை உணராமல் இருப்பதால், தோற்றத்திலும் எப்போதும் இளமையாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை, கலகலப்பான உரையாடல் மற்றும் நம்பிக்கையான மனப்பான்மை அவர்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவார்கள். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எத்தனை வயதானாலும் அனைவரும் தங்களை வியந்து பாராட்ட வைக்கும் ஒரு வசீகரத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் நலன் மீது அதிக அக்கறைக் கொண்டவர்களாக இருப்பார்கள், தங்களை இளமையாக வைத்துக் கொள்ள சென்னை செய்ய வேண்டுமென்பதை நன்கு தெரிந்தவர்கள், மேலும் ஒருபோதும் தங்கள் தோற்றம் மற்றவர்கள் முன் அசிங்கமாக தோன்றுவதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தோற்றம் என்பது சுயமரியாதையின் அடையாளம். தன்னம்பிக்கை, நல்ல ரசனை மற்றும் இயல்பான பொலிவு ஆகியவற்றின் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் உண்மையான வயதை விட மிகவும் இளமையாகத் தோற்றமளிப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அணையாத சுடர் போன்றவர்கள். அவர்களின் சாகச மனப்பான்மை, உலகம் மீதான காதல், சுதந்திரம் மற்றும் புதிய அனுபவங்கள் மீதான ஆர்வம் அவர்களை மனரீதியாகவும், தோற்றத்திலும் என்றென்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்திற்கு அஞ்சுவதில்லை, எளிதில் எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குகிறார்கள், மேலும் ஒரு புதிய ஆரம்பத்தை சந்திக்க எப்போதும் உத்வேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வமும், சுதந்திரமும்தான் அவர்களுடைய முதுமையைத் தடுக்கும் மருந்தாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் எதிர்காலத்தைக் கணிக்கும் தொலைநோக்குப் பார்வை உடையவர்களாக இருப்பார்கள். உலகத்தைப் பற்றிய அவர்களின் பார்வை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அவர்களின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை முறை அவர்களை ஒருபோதும் சோர்வடைய விடுவதில்லை, மேலும் அவர்களின் தனித்துவமான குணம் அவர்களை வித்தியாசமாகவும், இளமையாகவும் காட்டுகிறது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் வயதை விட 10 வயது இளமையாகத் தோற்றமளிக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் எந்த வரைமுறைகளையும் பின்பற்றுவதில்லை, மேலும் காலத்தைத் தங்களைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதில்லை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












