Latest Updates
-
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த 4 ராசிக்காரங்க அழகானவர்களை மட்டும்தான் காதலிக்க ஆசைப்படுவார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுமே ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். அதேபோல உறவுகளிலுமே ஒவ்வொருவரும் தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டவர்கள். பொதுவாக காதலில் இதயத்தைப் பார்த்ததுதான் காதலிப்பார்கள் என்று கூறுவார்கள், ஆனால் உண்மையில் அழகும், தோற்றமுமே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
சில ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் இயற்கையாகவே வெளிப்புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் ஒருவரின் மனதைப் பார்க்காமல் ஒருவரின் வசீகரம் மற்றும் உடல் தோற்றத்தால் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் ஒருவரின் இதயத்தை மதிக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களுக்கு காதல் தோன்ற காரணமாக இருப்பது எப்போதுமே ஒருவரின் தோற்றம்தான். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அழகைப் பார்த்து காதலிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே கவர்ச்சி மற்றும் வசீகரத்தை விரும்புகிறார்கள். அவர்கள் தங்களின் ஜோடியை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டுமென்று நினைப்பார்கள், ஏனெனில் அவர்களின் தோற்றம் அவர்களின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது.
அவர்கள் உறவில் நேர்மையையும், விசுவாசத்தையும் மதித்தாலும், தோற்றமே அவர்களின் உறவுகளை வழிநடத்துகின்றன. யாராவது மிகவும் அழகாக தோற்றமளித்தால், அவர்களின் உண்மையான குணத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, அவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள்.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், அழகு மற்றும் காதல் மீது உள்ளார்ந்த அன்பைக் கொண்டுள்ளனர். கவர்ச்சிகரமான மனிதர்கள் அல்லது நேர்த்தியான சூழல்களால் சூழப்பட்டிருக்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். உறவுகளில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் கண்களுக்கு அழகாக தோற்றமளிக்கும் துணையைத் தேடுகிறார்கள்.
நேர்மையும், அன்பும் அவர்களுக்கு முக்கியம், ஆனால் அவர்களின் முதல் ஆர்வம் எப்போதும் அவர்கள் தோற்றத்தின்தான் இருக்கும். வெளிப்புற தோற்றம் அவர்களின் மனதின் அழகை பிரதிபலிக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தீவிர ஆர்வமுள்ளவர்களாகவும், வெளித்தோற்றத்தால் எளிதில் ஈர்க்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நகைச்சுவையான மற்றும் வசீகரமான தோற்றத்தை விரும்புகிறார்கள்.
பெரும்பாலும், ஸ்டைலான மற்றும் அழகாக உடையணிந்த ஒருவரின் ஆழமான பண்புகள் வெளிப்படுவதற்கு முன்பே அவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் ஒருவரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினாலும், ஒருவரின் தோற்றமும், ஆளுமையும் நன்றாக இருந்தால் அவர்கள் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உற்சாகத்தையும், தைரியத்தையும் விரும்புகிறார்கள், மேலும் அழகான தோற்றம் பெரும்பாலும் அவர்களின் சிலிர்ப்பை அதிகரிக்கிறது. அவர்கள் தோற்ற விஷயங்களில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், மேலும் உடல் ரீதியாக தனித்து நிற்கும் ஒருவரைத் தேடுவார்கள்.
ஒரு கவர்ச்சிகரமான தோற்றம் அவர்களை மற்ற தகுதிகளை விட வேகமாக ஈர்க்கும். அவர்கள் இறுதியாக உறவில் விசுவாசத்தையும், வலிமையையும் தேடும் அதே வேளையில், மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் வெளிப்புற தோற்றத்திலிருந்ததுதான் அவர்கள் உறவை தொடங்குகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












