Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசிக்காரங்க தனக்கு ஒருவர் செஞ்ச துரோகத்தை மறக்கவும் மாட்டாங்க.. மன்னிக்கவும் மாட்டாங்க...
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணமும் அந்த ராசியை ஆளும் அதிபதிகளைப் பொறுத்தது. அதில் சில ராசிக்காரர்களால் கடந்த கால வலிகளை மறக்கவே முடியாது. மேலும் தனக்கு ஒருவர் செய்த துரோகத்தையும் மன்னிக்க முடியாது. அதோடு இந்த ராசிக்காரர்கள் ஒருவர் தனக்கு செய்த கெடுதலை நீண்ட காலமாக மனதில் வைத்திருப்பார்கள்.
இப்படிப்பட்ட குணம் ஒரு ஆசீர்வாதமாகவும், சாபமாகவும் இருக்கலாம். எப்படியெனில், இது அவர்களின் வலுவான நினைவாற்றால் அவர்களுக்கு வாழ்க்கையின் சில அம்சங்களில் உதவுகிறது. அதே சமயம் கடந்த கால மனக்கசப்புகளை மறப்பது சவாலாக இருக்கிறது. இப்போது எந்த ராசிக்காரர்களால் கடந்த கால வலிகளை மறக்கவோ அல்லது ஒருவர் தனக்கு செய்த துரோகத்தை மன்னிக்கவோமாட்டார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதக்காரர்கள் மற்றும் உறுதியானவர்கள். இவர்களை யாரேனும் காயப்படுத்தினாலோ அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள் மற்றும் மன்னிக்கவும் மாட்டார்கள். நீண்ட காலம் வெறுப்புணர்வை வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் மதிப்பார்கள். இவர்களின் நம்பிக்கையை ஒருமுறை உடைத்துவிட்டால், அதை சரிசெய்வது என்பது கடினமானது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையையும், பெருமையையும் கொண்டவர்கள். இவர்களால் துரோகத்தையும், காயத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது. தவறு செய்தால், அவர்கள் மிகுந்த கோபம் கொண்டு, அந்த வெறுப்புணர்வை நீண்ட காலம் வைத்திருப்பார்கள். இவர்களின் ஈகோ மன்னிப்பதையும், மறப்பதையும் கடினமாக்குகிறது. இவர்களின் வெறுப்புகள் நீண்ட காலமாக இருக்கும். இதனால் இவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது என்பது கடினமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள் மற்றும் நடைமுறை சிந்தனை கொண்டவர்கள். இவர்களும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் மதிக்கக்கூடியவர்கள். ஆனால் ஒருவர் துரோகம் செய்யும் போது, அவர்கள் மிகுந்த கோபம் கொள்வதோடு, அவர்கள் மீது நீண்ட காலம் வெறுப்புக்களை வைத்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்களின் வலுவான பொறுப்பு மற்றும் கடமை உணர்வு தான் இவர்களை மன்னிக்கவும், மறக்கவும் விடுவதில்லை. மேலும் இவர்களின் வெறுப்புகள் தீவிரமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இதனால் இவர்களின் நம்பிக்கையைப் பெறுவது சவாலாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வலுவான நினைவாற்றலைக் கொண்டவர்கள். இவர்களால் யாரேனும் ஒருவர் கெடுதல் செய்தால், அதை மறப்பது என்பது முடியாது. மேலும் அப்படி கெடுதல் செய்தவர்களை இவர்கள் மன்னிக்கவும்மாட்டார்கள். விர உணர்ச்சிகளும் ஆர்வமும் மன்னிப்பதையும் மறப்பதையும் கடினமாக்குகின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு யாரேனும் துரோகம் செய்தால், அதை நீண்ட காலம் மனதில் வைத்திருப்பதோடு, மீண்டும் அவர்களின் மனதில் இடம் பெறுவது என்பது இயலாத ஒன்றாகும். தேவைப்பட்டால் பழிவாங்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications