Latest Updates
-
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் சிறந்த தலைவியாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உடலளவில் பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்களாகத் தோன்றினாலும் மனவலிமையைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களை விட பலமடங்கு வலிமையானவர்கள். ஏனென்றால் அவர்கள் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செய்வது முதல், ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் சமாளித்து, தங்கள் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து பெண்களுமே சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்தாலும் சில பெண்கள் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷலானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் மற்றவர்களை விட சக்திவாய்ந்த தலைமைப்பண்பு நிறைந்திருக்கும். அவர்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே தலைமைப் பொறுப்பில் அமர்ந்து சிறப்பாகி செயல்படும் சிறந்த தலைவிகளாக இருப்பார்கள். இந்த கூடுதல் சிறப்புக்கு அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிப் பெண்கள், ஒரு திறமையான தலைவர்களாக இருப்பதற்குத் தேவையான அனைத்து குணங்களையும் கொண்டுள்ளனர். அவர்களின் தலைமைப்பண்பு அவர்களின் வேலைகளில் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்திலிருந்து உருவாகிறது. அவர்கள் தொழில்முறை சவால்களை எதிர்கொள்ளும் போது தைரியமாக செயல்படுகிறார்கள்.
அவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் வசீகரமானத் திறமைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் நலனுக்காக தங்கள் இலட்சியங்களை நிறுத்தி வைக்க மாட்டார்கள். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களை வழிநடத்தவும், வெற்றி பெறவும் இயற்கையான திறனைக் கொண்டுள்ளனர். மேஷ ராசி பெண்கள் எப்போதும் தலைவியாக இருப்பதை விரும்புகிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் லட்சிய தாகம் கொண்டவர்கள். அவர்கள் தங்களின் நிலையை மேம்படுத்த அயராது உழைக்கிறார்கள். அவர்கள் யதார்த்தமானவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும் இருந்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதில் அசாதாரண விடாமுயற்சியுடன் இருப்பார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் பெறவும் பாராட்டப்படவும் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
அவர்கள் சில நேரங்களில் சமாளிக்க முடியாதவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் பணி நெறிமுறைகள் அவர்களை வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் இருக்க ஊக்குவிக்கின்றன. அவர்களின் அடிப்படை பண்புகளில் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை அடங்கும். இவை ஒரு நல்ல தலைவிக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய குணங்களாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மிகுந்த ஆர்வத்துடனும் வெற்றிக்கான திறவுகோலுடனும் வாழ்கிறார்கள். அவர்களின் பணி நெறிமுறையும், ஊக்கமும் மற்றவர்களிடம் இருப்பதை விட மிகவும் வலிமையானவை. அவர்கள் சக ஊழியர்களுடன் தங்களின் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள். அவர்களிடம் உள்ள பொறுமை மற்றும் பாதுகாப்பு அவர்களை மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து நிற்க வைக்கும். அவர்கள் நினைத்தால், மலையைக் கூட தூக்குவார்கள், எனவே ஒருபோதும் அவர்கள் தங்களின் முயற்சியை நிறுத்த மாட்டார்கள். அதனால்தால் விருச்சிக ராசி பெண்கள் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
மகரம்
மகர ராசி பெண்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் லட்சியப் பண்புகளை வெளிப்படுத்துபவர்கள், அவை சிறந்த தலைமைத்துவப் பண்புகளாக மாறுகின்றன. அவர்களின் முறையான அணுகுமுறை மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாடு அவர்களை வெற்றிக்குயை நோக்கி வழிநடத்துகின்றன. மகர ராசி பெண்கள் இலக்கு சார்ந்தவர்கள் மற்றும் கூர்மையாக கவனம் செலுத்துபவர்கள், தங்கள் குழுக்களிடம் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கிறார்கள்.
மகர ராசி பெண்கள் சிறந்த திட்டமிடுபவர்கள் மற்றும் எதிர்காலத்தைக் கணிக்கக் கூடியவர்கள். மகர ராசி பெண்கள் தங்கள் ஒழுக்கமான அணுகுமுறை மூலம் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் அவர்களின் துல்லியம் அவர்களை நம்பகமான மற்றும் திறமையான தலைவர்களாக மாற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











