Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசி பெண்கள் மகாராணியாக வாழும் அதிர்ஷ்டமும், திறமையும் கொண்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள் மற்றும் விதிவிலக்கானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மகத்துவம் இருக்கும். அதன்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அரச கம்பீரத்துடன் பிரகாசிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கை, கம்பீரம், நேர்த்தி மற்றும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்கள் அரசாள்பவர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் துறையில், அவர்களின் வீட்டில் அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். அதனாலேயே அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்களிடம் மகாராணிக்குரிய குணங்கள் இருக்குமென்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிப் பெண்கள் ராணிக்குரிய அம்சங்கள் இயல்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள். சூரியனால் ஆளப்படுவதால், அவர்கள் குறையாத வசீகரம், வலுவான சுயமரியாதை மற்றும் கவனத்தின் மையத்தில் இருப்பதற்கான விருப்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பான தலைமைப் பண்பும், தன்னம்பிக்கையும் அவர்களை சமூக மற்றும் தொழில்முறைச் சூழல்களில் கவர்ச்சிகரமானவர்களாக ஆக்குகின்றன. அவர்கள் மற்றவர்களின் அங்கீகாரத்தைத் தேடுவதில்லை, மாறாக அவர்களை அனைவரும் பின்பற்றும் படி செய்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் வித்தியாசமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று ரகசியத்தை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்களின் வார்த்தைகளால் அல்ல செயல்பாடுகளால் அனைவரையும் கட்டுப்படுத்துகிறார்கள், அவர்களின் அதிகாரத்தை மற்றவர்கள் உணராத விதத்தில் அதிகாரம் செய்வதில் அவர்கள் கில்லாடிகள். ஒரு விருச்சிக ராசி பெண் ஒரு இடத்தில் இருந்தால் அனைவரின் கவனமும் அவர்களின் மீதுதான் இருக்கும். உணர்ச்சிரீதியாக ஆதிக்கம் செலுத்தும் அவர்களின் திறன் அவர்களை சக்திவாய்ந்த கூட்டாளிகளாகவும் அச்சுறுத்தும் எதிரிகளாகவும் அவர்களை மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிப் பெண்கள் அமைதியான மற்றும் சக்திவாய்ந்த ஆளுமை கொண்டவர்கள். சனிபகவானால் ஆளப்படுவதால், அவர்கள் ஒழுக்கம், பொறுமை மற்றும் நீண்ட கால வெற்றிக்குத் தேவையான திறமையைக் கொண்டுள்ளனர். அவர்களின் அமைதியான தோற்றம் ஒரு உறுதியான மன உறுதியையும், அசாதாரண உணர்ச்சி நுண்ணறிவையும் மறைக்கிறது. இந்த ராசி பெண்கள் விடாமுயற்சியுடன் முன்னேறுகிறார்கள் மற்றும் தங்கள் சாதனைகள் மூலம் மற்றவர்களுக்கும் ரோல்மாடலாக இருக்கிறார்கள். அவர்களின் கம்பீரமான குணம் அவர்களின் ஞானத்திலும், ஒழுக்கத்திலும் உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் உறுதியான மற்றும் பாதுகாப்பான ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அழகு, ஆறுதல் மற்றும் ஆடம்பரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பார்ப்பதற்கு அழகானவர்களாக இருக்கலாம், ஆனால் மிகவும் உறுதியானவர்கள். தீட்டமிட்டு தலைவராக உருவாகும் அவர்கள் விசுவாசம், அன்பு மற்றும் ஆடம்பரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ராஜ்ஜியங்களை உருவாக்குகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












