இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் ஹிட்லர் போல ஆபத்தான நார்சீசிஸ்ட்டுகளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் சில நல்ல குணங்களும், சில தீய குணங்களும் இருக்கும். அப்படி ஒருவரிடம் இருக்கும் ஒரு மோசமான தீய குணம்தான் நார்சீஸம். நார்சீஸ்ட்டுகள் வெளித்தோற்றத்திற்கு வசீகரமாகவும் அன்பாகவும் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் பச்சாதாபம் மற்றும் இரக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

ஏனெனில் அவர்களின் உலகம் அவர்களிடம் தொடங்கி அவர்களுக்குள்ளேயே முடிந்து விடும், அவர்கள் தங்களை தாண்டி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். சில நாசீசிஸ்டுகள் அவர்களின் இந்த குணம் பற்றி நன்றாக அறிந்திருப்பார்கள், ஆனால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். சிலர் அவர்கள் நார்சீசிஸ்டுகள் என்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள். நார்சீஸம் உள்ள மோசமான மனிதருக்கு மிகச்சிறந்த உதாரணம் உலகையே நடுங்க வாய்த்த அடால்ப் ஹிட்லர். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நார்சீஸம் உள்ள ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 4 Narcissistic Zodiac Signs

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அதேசமயம் அவர்கள் மோசமான சுயநலவாதிகளாகவும் இருக்கலாம். அவர்களின் லட்சிய வெறி சில சமயங்களில் நாசீசிஸமாகவும் கருதப்படலாம், ஏனெனில் அவர்கள் தங்கள் இலக்குகளுக்கும், விருப்பங்களுக்கும் அனைத்திற்கும் மேலாக முன்னுரிமை அளிக்கிறார்கள். இருப்பினும், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் நம்பிக்கையை நேர்மறையாக பயன்படுத்தினால் அவர்கள் மிகப்பெரிய தலைவராக , உருவாகலாம், அதே நேரத்தில் அதை எதிர்மறையாக பயன்படுத்தினால் அவர்கள் சமூகத்திற்கு பெரிய அச்சறுத்தலாக மாறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே கவர்ச்சிகரமானவர்களாகவும், கவனத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் போற்ற வேண்டும் மற்றும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டுள்ளனர், இது அவர்களை சுயநலவாதிகளாகவும், ஆபத்தான நார்சீஸ்ட்டுகளாகவும் மாற்றும். இருப்பினும், அனைத்து சிம்ம ராசிக்காரர்களும் இந்த ஆபத்தான நடத்தையை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் சிலர் தங்கள் வசீகரத்தையும், நம்பிக்கையையும் மற்றவர்களை தவறாக வழிநடத்தவும் பயன்படுத்தலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை தங்கள் நலன்களுக்காக கையாளுபவர்களாகவோ அல்லது சுயநலவாதிகளாகவோ கருதப்படலாம். அவர்கள் சூழலுக்கு ஏற்ப தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர்கள், இது அவர்களை அனைவரையும் அவர்களின் வழியை பின்பற்ற வைக்கிறது. இது அவர்களை ஒரு நாசீசிசவாதியாக மாற்றுகிறது, ஏனெனில் அவர்கள் எப்போதும் அனைவரையும் விட தாங்கள் எல்லா வகையிலும் சிறந்தவர்கள் என்பதைக் காட்ட முயற்சிப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களை நாசீசிஸ்டிக் என்று கூறினால, அவர்கள் அதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்கள் தங்களை சுதந்திரமானவர்கள் என்று கூறலாம். அவர்கள் தங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பங்களைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காத அளவுக்கு சுயநலவாதிகளாக இருப்பார்கள். அவர்கள் லட்சிய வெறி கொண்டவர்கள், அதை அடைய, அவர்கள் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்களைப் போலவே அவர்களும் அதீத கவனத்தை விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion