Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிகளில் பிறந்தவங்க ஆபத்தான சுயநலவாதிகளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நாம் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளா விட்டாலும் நம் அனைவருக்குள்ளுமே சுயநல எண்ணங்கள் நிச்சயம் நிறைந்திருக்கும். அது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பொறுத்துதான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. சிலர் சுயநலமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முடிந்தால் அவர்களின் நன்மைக்கும் சேர்ந்து உழைப்பார்கள்.
சிலர் தங்களின் நலனுக்காக மற்றவர்களுக்கு தீங்கு செய்யக் கூடியவர்களாகவும், மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடியவற்றை தட்டி பறிப்பவர்களாகவும் சுயநலத்தின் உச்சத்தில் இருப்பார்கள். அவர்களின் இந்த எதிர்மறை குணத்திற்கு அவர்களின் பிறந்த ராசி ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில ராசிகளில் பிறந்தவர்கள் சுயநலத்தின் மொத்த உருவமாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் மேஷ ராசிக்காரர்கள். அவர்கள் செய்யும் அனைத்தும் அவர்களின் சொந்த நன்மைக்காகவே செய்கிறார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிந்தவர்கள். மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களின் மீது அக்கறையற்றவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள் கூட அவர்களால் ஏமாற்றப்படுவதற்குவாய்ப்புள்ளது.
மேஷ ராசிக்காரர்கள் ஏதாவது ஒன்றை விரும்பினால், அதை அடைய மற்றவர்களின் கால்களை வாறுவதற்கும் தயாராக இருப்பார்கள். மற்றவர்கள் மீது இரக்கம் கொள்ள இயலாமைதான் அவர்களின் மோசமான நச்சுப் பண்பு, அதுதான் அவர்களை இந்த பட்டியலில் முதலிடத்தில் வைத்திருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தாங்கள் எப்போதும் எந்த தவறும் செய்ய மாட்டோம் என்று நம்புகிறார்கள். அதனால் அவர்களால் தங்கள் மீது விமர்சனத்தை ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவர்களைப் போல யாரும் சிறப்பானவர்களாக இருக்க முடியாது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கிப்போகும் நண்பர்கள் மற்றும் காதலர்களைவிரும்புகிறார்கள் . பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற மற்றவர்களைத் தூண்டி விடுவார்கள். மற்றவர்களை பகடைக் காய்களாக்கி தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அவர்கள் நிபுணர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவிரும்புகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் புகழை அவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் மற்றவர்களை விட அதிக கர்வம் கொண்டவர்கள், தங்களைத் தலைவராக நிலைநிறுத்திக் கொள்வதில் மட்டுமே அவர்கள் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
அவர்களிடம் எவ்வளவு அதிகமாக தன்னம்பிக்கை இருக்கிறதோ அதைவிட அதிகமாக தலைக்கணமும் இருக்கும். அவர்கள் தங்களின் நலன் மீது அதிக பாதுகாப்பின்மை கொண்டவர்கள், அதுதான் அவர்களை மோசமான சுயநலவாதிகளாக மாற்றுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அது நட்பாக இருந்தாலும் சரி, காதல் உறவாக இருந்தாலும் சரி. விருச்சிக ராசிக்காரர்களால் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த உறவிலும் இருக்க முடியாது. தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைவரும் தங்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அதனால் அவர்களின் நன்மைக்காக எப்படிப்பட்ட செயலையும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆசைகளை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதைச் மட்டுமே செய்வார்கள், அது மற்றவர்களை காயப்படுத்தினாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
