Latest Updates
-
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்!
இந்த 4 ராசிக்காரங்க பழிவாங்குவதில் பாம்பு மாதிரியாம்... இவங்ககிட்ட மட்டும் பிரச்சினை வைச்சுக்காதீங்க...!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். சில ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னிப்பவர்களாகவும் இருப்பார்கள். சில ராசிகளில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக மன்னிக்கும் குணம் இல்லாதவர்களாகவும், கடுமையாக பழிவாங்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக பழிவாங்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அது அவர்களுக்கு எவ்வளவு பிரியமானவர்களாக இருந்தாலும் அவர்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள். நீங்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்க விரும்பினால் முடிந்தவரை அவர்களுடன் எந்த வாக்குவாதத்திலும், சண்டையும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இரக்கமின்றி பழிவாங்குபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் மோசமாக பழிவாங்குவதில் மற்ற அனைவரையும் விட இரக்கமற்றவர்களாக இருக்க முடியும். விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களுக்கு செய்யப்பட்ட துரோகத்தை மறக்க மாட்டார்கள், பல ஆண்டுகளாக தங்கள் கோபத்தையும், பகையையும் நினைவில் வைத்திருக்க முடியும்.
அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள், ஆனால் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் மீண்டு வர முடியாத அளவிற்கு பலமாக தாக்குவார்கள். அதனால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் மிகப்பெரிய துருப்பு சீட்டு அவர்களின் மன உறுதியும், பகையை ரகசியமாக வைத்திருப்பதும்தான். மகர ராசிக்காரர்கள் மிகவும் அரிதாகவே கோபப்படுவார்கள், ஆனால் அவர்கள் கோபப்பட்டால், அவர்கள் ஒரு மோசமான சர்வாதிகாரியாக மாறிவிடுவார்கள்.
மகர ராசிக்காரர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கலாம், குறிப்பாக அவர்களின் நற்பெயருக்கு யாராவது கலங்கத்தை ஏற்படுத்தினால், அவர்கள் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தங்களுக்கு பிடிக்காதவர்களை மனரீதியாக துன்புறுத்துவதில் அவர்கள் கில்லாடிகள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் கோபக்காரர்களாக அறியப்படுகிறார்கள், அனைவரும் தங்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பாப்பார்கள். அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், அவர்களின் கோபம் அவர்களுடைய கண்களை எப்போதும் மறைத்து விடும்.
அவர்களின் கட்டுப்பாடற்ற கோபம் அவர்களுக்கும், எதிரில் இருப்பவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புண்படுத்த தயங்க மாட்டார்கள். ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் அவர்களின் விரைவில் குறைந்து விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்கள் கோபமாக இருக்கும் போது அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
மிதுனம்
இரட்டை ஆளுமை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தந்திரமான சூழ்ச்சியாளர்களாக இருப்பார்கள். யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் தந்திரமாகவும், நுட்பமாகவும் பழிவாங்குவார்கள். வார்த்தைகளால் காயப்படுத்துவதும், மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
இதனால் அவர்கள் பழிவாங்க நினைப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் முக்கிய ஆயுதம் கிண்டல், காயப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் சூழலை அவர்களுக்கு எதிராக திசைதிருப்பும் திறனாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












