Latest Updates
-
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களிடமும் ஒரு நேர்மறை குணம் இருப்பது போல ஒரு எதிர்மறை குணமும் இருக்கும். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை இதில் எந்த குணம் அதிகமாக இருக்கிறது என்பதே நிர்ணயிக்கிறது.
சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்க எதிர்மறை குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். பிடிவாதம், பகையுணர்வு மற்றும் சந்தேகம் என அவர்களிடம் பல்வேறு எதிர்மறை குணங்கள் இருக்கும்.

எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி எதிர்மறை குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வது உங்களை அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எதிர்மறையான குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எதிர்மறையான ராசி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் பிடிவாதமும், மனஉறுதியும் அவர்களுக்கு எந்த அளவுக்கு நன்மைகளை அளிக்கிறதோ அதேயளவிற்கு அவர்களை மோசமானவர்களாகவும் மாற்றுகிறது. அவர்கள் எவ்வளவு எதிர்மறையானவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களே அறிய மாட்டார்கள். அதனாலேயே அவர்கள் மிகவும் நச்சுத்தன்மையுள்ளவர்களாக இருக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் எதிர்மறை ஆற்றல் மற்றவர்களை விட அவர்களுக்குத்தான் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். தங்களுக்கு எந்த நல்ல விஷயமும் நடக்காது என்ற நம்பிக்கை அவர்களுக்கு தீவிரமாக உள்ளது. அதனாலேயே அவர்கள் எப்போதும் எதிர்மறை சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள். அவர்கள் எப்போது சந்தோசமாக இருந்தாலும் அதை அனுபவிக்காமல் அடுத்து என்ன ஆபத்து வருமோ என்ற அச்சம்தான் அவர்கள் மனதில் நிறைந்திருக்கும். கடக ராசிக்காரர்கள் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை சார்ந்தவர்களுக்கு நடக்கும் தீய செயல்களுக்கும் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டு துன்பப்படுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் சுயவிமர்சனம் செய்து கொள்பவர்கள், ஆனால் அவர்கள் எதிர்மறை சுழற்சியில் சிக்கும்போது. அவர்களின் விமர்சனப் பார்வை மற்றவர்களின் மீதும் விழலாம். அவர்கள் மற்றவர்களை காயப்படுத்தும் படி விமர்சனம் செய்வார்கள். எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது அவர்கள் மிகவும் மூர்கமானவர்களாகவும், வெடித்துச் சிதறக்கூடியவர்களாகவும் மாறலாம். இது மற்றவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பது மட்டுமின்றி உறவுகளையும் பாதிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து உணர்வுகளையும் தீவிரமாக வெளிப்படுத்துவார்கள். அதில் அவர்களின் கோபமும், பகையுணர்ச்சியும் அடங்கும். சில சமயங்களில் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். அவர்களின் உணர்வுகள் மேலோட்டமாக இருப்பது போல் தெரியலாம், ஆனால் எந்தவொரு சிறிய விஷயமும் கூட அவர்களின் பழி உணர்ச்சியையும், கோபத்தையும் தூண்டும். அவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களில் அவர்களின் எதிர்மறை ஆற்றல் வெளிப்படுகிறது. அவர்கள் எதிர்மறை ஆற்றல் வெளிப்படும் போது அது அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
