Latest Updates
-
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப எரிச்சலூட்டுபவர்களாக இருப்பார்களாம்... இவங்ககூட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்...!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இந்த தனித்துவமானது சில சமயங்களில் பலமாகவும், சில சமயங்களில் பலவீனமாகவும் இருக்கும். சில ராசிக்காரர்கள் அவர்களிடம் இருக்கும் நற்குணங்களால் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் இருப்பதற்கு அனைவரும் ஆசைப்படுவார்கள். அதேசமயம் சில ராசிக்காரர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இருப்பார்கள்.
அவர்கள் தங்களிடம் இருக்கும் மோசமான குணங்களால் அனைவரையும் வெறுப்பேற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் செயல்கள் எப்போதும் மற்றவர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அவர்களின் வார்த்தைகளாலும், செயல்களாலும் அனைவரையும் எரிச்சலூட்டுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
அளவிட முடியாத துணிச்சலும், ஆற்றலும் நிறைந்த மேஷ ராசி பெண்கள், அவர்களின் சுறுசுறுப்பான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் ஆர்வமும், உத்வேகமும் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், அது அவர்களை சில சமயங்களில் பொறுமையற்றவர்களாகவும், அவசர புத்திக்காரர்களாகவும் மாற்றிவிடும், இது பலருக்கு அவர்கள் மீது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். மேஷ ராசி பெண்கள் சில நேரங்களில் அதிக பிடிவாதமாகவோ அல்லது சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர்களாகவோ தோன்றலாம், இது முக்கியமாக அவர்களின் உறவுகளில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் அவர்களின் உறுதியான மனப்பான்மைக்கும், விடாமுயற்சிக்கும் பெயர் பெற்றவர்கள், ஆனால் இது சில சமயங்களில் எல்லையில்லாத பிடிவாதமாகவும் வெளிப்படலாம், இது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும். ஒரு ரிஷப ராசி பெண் ஒரு முடிவெடுத்துவிட்டால், அவர்களை அதிலிருந்து மாற்றுவது என்பது கிட்டதட்ட சாத்தியமற்றது, இது மோதல்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வழிவகுக்கும். இருப்பினும், அவர்களின் விசுவாசமும் நம்பகத்தன்மையும் அவர்களை மதிப்புமிக்க நண்பர்களாகவும், வாழ்க்கைத்துணையாகவும் மாற்றக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் ஆர்வம் மற்றும் ஆழம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள், ஆனால் அவர்களின் பதட்டமான இயல்பு மற்றும் ரகசியத்திற்கான விருப்பம் மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். இந்த ராசி பெண்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவரர்கள் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உறவுகளில் பொஸசிவ் மற்றும் பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கலாம், இது அவர்களுடன் இருப்பவர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தலாம். விருச்சிக ராசிக்காரர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசத்தையும் நம்பகத்தன்மையையும் மதிக்கிறார்கள், ஆனால் அவர்களின் பலவீனம் குறித்த பயம் சில நேரங்களில் உறவுகளில் அதிகாரப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.
மகரம்
மகர ராசி பெண்கள் ஒழுக்கம் மற்றும் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பார்கள். ஆனால், தங்கள் இலக்குகளில் அவர்கள் காட்டும் தீவிர கவனம், சில சமயங்களில் அவர்களை இரக்கமற்றவர்களாக காட்டக்கூடும். இந்த ராசி பெண்கள் நடைமுறைவாதிகளாகவும் யதார்த்தமானவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் அவர்கள் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் அதிகப்படியாக விமர்சிப்பவர்களாகவும், கறாரானவர்களாகவும் இருக்கக்கூடும். அனைவரும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்,அவ்வாறு மற்றவர்கள் இல்லாத போது அவர்களை கடுமையாக விமர்சிப்பார்கள். இது அவர்கள் மீது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
