Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த 4 ராசி ஆண்கள் அவங்க மகளை இளவரசி போல வளர்ப்பார்களாம்... உலகின் சிறந்த தந்தை இவர்கள்தான்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் ராசி மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒருவர் எப்படிப்பட்ட தந்தையாக இருப்பார்கள் என்பதையும் அவர்களின் ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அனைத்து அப்பாக்களுமே தங்களின் மகள் மீது அன்பைப் பொழிந்தாலும் ஒவ்வொருவருக்குமே ஒரு தனிப்பட்ட அணுகுமுறை இருக்கும். சில அப்பாக்கள் தங்கள் மகள் மீது கண்டிப்பான அன்பை வெளிப்படுத்தும் போது சில அப்பாக்கள் தங்கள் மகளை ராணி போல வளர்ப்பவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் மகளை மகாராணியாக வளர்ப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் கடக ராசி தந்தைகள். சந்திரனால் ஆளப்படும் கடக ராசி தந்தையர்கள், தங்கள் மகள்கள் மீது அளவில்லாத அன்பு மற்றும் அக்கறையைப் பொழிகிறார்கள். அவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு இயல்பு, அவர்களின் மகள் தங்களின் தேவைகளை பற்றி கூறுவதற்கு முன்பே அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கடக ராசி தந்தைகள் தங்கள் இளவரசிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான ராஜ்ஜியத்தை எவ்வாறு உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் மகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
ரிஷபம்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் ரிஷப ராசி தந்தைகள். ரிஷப ராசி தந்தைகள் தங்கள் மகள் மீது உறுதியான ஆதரவுக்கும், அசைக்க முடியாத பக்திக்கும் பெயர் பெற்றவர்கள். தங்கள் மகள்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வழங்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. ரிஷப ராசி அப்பாக்கள் தங்கள் மக்களுடன் வலுவான பிணைப்புகளை உருவாக்குகிறார்கள் மற்றும் தங்கள் மகளை மகாராணி போல வளர்ப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசி தந்தைகள் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்கள். அன்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி அப்பாக்கள், தங்கள் மகள்களுடனான உறவுகளில் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்கின்றனர். எப்போது நீதி உணர்வை கடைபிடிபிக்கும் இவர்கள் தங்கள் மகளின் மகிழ்ச்சிக்கும், தேவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் மகிழ்ச்சியும், பாதுகாப்பும்தான் தங்களின் வாழ்க்கை லட்சியம் என்று நினைப்பார்கள்.
மீனம்
மீன ராசி அப்பாக்கள் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்கள். மீன ராசி அப்பாக்கள் கனவு காண்பவர்களாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள், இதனால் அவர்கள் தங்கள் மகள்களுக்காக தனி உலகத்தை உருவாக்குவதில் விதிவிலக்கானவர்களாக இருப்பார்கள். மீன ராசி அப்பாக்களின் தெய்வீக உலகில் மூழ்கி, அவர்கள் தங்கள் மகள்களின் கனவுகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகளின் உலகையும், எதிர்காலத்தையும் மகிழ்ச்சியானதாக மாற்ற எதையும் செய்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












