Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்க மனதில் ஆபாச எண்ணங்களும், பாலியல் ஆசைகளும் நிறைந்திருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் சில தனித்துவமான குணங்களும், பழக்கங்களும் இருக்கும். சில ராசிக்காரர்கள் வலுவான ஆளுமையும், சிறந்த படைப்பாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள், சில ராசிக்காரர்கள் மென்மையான ஆளுமையும், தலைமைத்துவமும் கொண்டவர்காளக இருப்பார்கள், ஆனால் சில ராசிக்காரர்கள் அவர்களின் குறும்புத்தனமான எண்ணங்களுக்கும், மோசமான சிந்தனைகளுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
உண்மைதான் ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் மிகவும் குறும்புத்தனமான எண்ணங்கள் கொண்டவர்களாகவும், ஆபாசமான சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் சிற்றின்ப விஷயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவும், புதுமையான கண்ணோட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆபாசமான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
குறும்புக்கார எண்ணம் மற்றும் ஆபாசமான சிந்தனை என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் சிற்றின்ப விஷயங்களில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ராஜாக்களாக இருப்பார்கள்.அவர்க்ளின் ஆபாசமான சிந்தனை அவர்களின் கட்டுப்பாட்டை மீறியதாக மீறியதாக இருக்கும், அவர்களால் குறும்புத்தனமான எண்ணங்களைத் தடுக்க முடியாது. அவர்களுக்கு அதிக பாலியல் ஆசை இருக்கும். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த அவர்கள் வெட்கப்படுவதில்லை.
படுக்கையில் அவர்கள் எப்போதும் அதிகாரம் செலுத்த விரும்புகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அவர்களின் குறும்புத்தனமான எண்ணங்கள் அவர்களின் அன்பின் வெளிப்பாடாகும். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் அதை தங்களின் பெருமையாக நினைக்கிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சற்று விசித்திரமான பாலியல் எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு தாராள மனப்பான்மை கொண்டவர்கள், இதை அவர்களின் துணை நிச்சயம் ரசிப்பார்கள் மற்றும் பாராட்டுவார்கள். இருப்பினும், சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாகவும், படுக்கையறையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் தங்களின் ஆபாசமான எண்ணங்களை கம்பீரமாக வெளிப்படுத்துவார்கள்.
அவர்களின் எண்ணங்கள் சில சமயங்கள் எல்லை கடந்து போகலாம். அவர்களின் கம்பீரமான தோற்றம் அவர்களின் ஆபாச எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்துடன் பொருந்தாமல் போகலாம். அவர்கள் தங்கள் பாலியல் ஆசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது சில் சமயங்களில் அவர்களுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஆபாச எண்ணங்கள் கொண்ட ராசியில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். பொதுவாக, இந்த ராசிகாரர்கள் தலைவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்கள் படுக்கையிலும் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்களின் குறும்புத்தனமான எண்ணங்களும் நகைச்சுவைகளும் சில நேரங்களில் அற்புதமாகவும், சில நேரங்களில் வேடிக்கையாகவும் இருக்கும்.
அவர்கள் பாலியல் இன்பத்தை கூடுதல் சுவாரஸ்யமாக மாற்ற, இரட்டை அர்த்தமுள்ள நகைச்சுவைகளை அவர்கள் கூறுவார்கள். அவர்களின் பாலியல் ஆசைகள் கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக கூட தோன்றலாம், ஆனால் அவர்களின் செயல்பாடுகள் வக்கிரமாக இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அவர்களின் பாலியல் ஆசைகளும், ஆபாசமான எண்ணங்களும் எப்போதும் தீர்ந்து போகாது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கற்பனையின் ராஜாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் கற்பனைத்திறன் அவர்களுடைய படுக்கையறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தங்கள் உணர்வுகள் மற்றும் உறவுகளுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆபாச எண்ணங்கள் மற்றும் குறும்பு சிந்தனைகள் அவர்களின் படுக்கையறைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. தங்கள் துணையைப் பொறுத்து, அவர்கள் தங்களின் ஆசைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்களின் மனதில் ஆபாச எண்ணங்களும், ஆசைகளும் மலை போல குவிந்திருந்தாலும், எப்போது, யாரிடம் தங்கள் குறும்புத்தனமான மற்றும் பைத்தியக்காரத்தனமான முகத்தை வெளிப்படுத்துவது என்பதில் அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
