Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப க்யூட்டானவர்களாக இருப்பார்களாம்... இவங்க இருக்கும் இடம் எப்பவுமே சந்தோஷமா இருக்கும்!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் சில சிறப்பு குணங்கள் இருக்கும். இந்த குணங்கள் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, தனிநபர்களாக நாம் யார், நம் வாழ்க்கையிலும் உறவுகளிலும் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கின்றன. சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை அச்சுறுத்தும் தீய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், அதேசமயம் சில ராசிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் படி அழகான குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் அழகான பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்கிறார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் முகத்திலும் புன்னகையைப் பரப்புகிறார்கள். ராசிச்சக்கரத்தின் மிகவும் க்யூட்டான ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் இனிமையானவர்கள் மற்றும் கனிவானவர்கள். அவர்கள் இயல்பாகவே உதவி செய்யும் குணம் கொண்டவர்கள், இரக்கமுள்ளவர்கள் மற்றும் அனைவரையும் மரியாதையாக நடத்துபவர்கள். கடக ராசிக்காரர்களின் குறிக்கோளே தங்களை சுற்றியுள்ள உலகம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.
அவர்கள் தங்களை சுற்றி ஒரு நட்பான சூழலை உருவாக்குகிறார்கள், இது அவர்களை மிகவும் க்க்யூட்டான அறிகுறிகளில் ஒன்றாக ஆக்குகிறது. அதுமட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் யாரையும் அவர்களுக்கு பிடிக்காத செயல்களை செய்ய கட்டாயப்படுத்த மாட்டார்கள், மேலும் பூமி போல பொறுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்கான சரியான வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நிற்க முயற்சிப்பார்கள். எப்போதும் மற்றவர்களின் பிரச்சினைகளை அவர்களின் கண்களில் இருந்து பார்ப்பார்கள்.
அவர்கள் அனைவருடனும் நன்கு பழகுவார்கள், எப்போதும் ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்தி பேச மாட்டார்கள். அவர்கள் அனைவராலும் விரும்பாடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிரிக்கும்போது, மற்றவர்களும் தங்களுடன் இணைந்து சிரிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அதனால்தான் அவர்கள் க்யூட்டான ராசிகளில் ஒருவராக இருக்கிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கருணை, இரக்கம் மற்றும் தன்னலமற்ற குணம் கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை கேட்பவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஏனென்றால் அவர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.
கூடுதலாக, அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க விரும்புகிறார்கள். மேலும், மீன ராசிக்காரர்களை மிகவும் விரும்பக்கூடியவர்களாக மாற்றுவது என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்துவதில்லை, மேலும் அவர்கள் கற்றுக்கொண்டதை தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியான மனநிலையையும், புதிய விஷயங்களை ஆராயும் வசீகரமான ஆளுமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் ஒரு சூழ்நிலையில் இருக்கும் பாசிட்டிவான பக்கத்தை மட்டுமே பார்ப்பார்கள். தங்களுடன் சேர்த்து மற்றவர்களும் வெற்றிபெற உதவுவதால், அவர்கள் வசீகரமான ராசிக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் உலகின் எல்லையற்ற அதிசயங்களையும், வரவிருக்கும் பிரகாசமான நாளின் உறுதியையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான மக்கள் இந்த அற்புதமான ஆன்மாக்களுடன் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இவர்கள் எப்போதும் பாசிட்டிவான மனநிலையுடன் இருப்பதால் எளிதில் மக்களை கவர்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












