Latest Updates
-
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
இந்த 3 ராசிக்காரங்ககிட்ட சிங்கத்தைப் போல எதையும் துணிந்து செய்யும் தைரியம் இருக்குமாம்...
Brave Zodiac Signs: ஜோதிடத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகின்றன. அதுவும் இந்த 12 ராசிகளும் ஒவ்வொரு கிரகத்தால் ஆளப்படுகின்றன. எனவே ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களும், அந்த ராசியை ஆளும் கிரகத்தால் வேறுபட்டிருக்கும். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த இயல்பு உள்ளது.
அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் பலவீனமான இதயத்தைக் கொண்டவர்களாக இருப்பர். இன்னும் சிலர் ஒவ்வொரு விஷயத்தையும் செய்ய பலமுறை யோசிப்பார்கள். மேலும் சில ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பர். இப்போது ஜோதிடத்தின் படி, எந்த விதமான ரிஸ்க்கையும் எடுக்க தயங்காத, துணிச்சலான மற்றும் தைரியமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் பிறவியில் இருந்தே தைரியசாலிகள். இந்த ராசிக்காரர்கள் எந்த ரிஸ்க்கான வேலையையும் செய்வதற்கு சற்றும் அச்சம் கொள்வதில்லை. மாறாக அவற்றை துணிச்சலுடன் செய்வார்கள். மேலும் இவர்கள் வலுவான சுயமரியாதையைக் கொண்வர்கள். தவறான விஷங்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். யாராவது தங்களின் சுயமரியாதையைப் புண்படுத்த முயன்றால், அதை எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.
முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் பாதகமான சூழ்நிலைகளிலும் அமைதியை பேணுவார்கள். செய்யும் வேலையில் நேர்மையானவர்கள். ந்த வேலையையும் முழு அர்ப்பணிப்புடனும் இதயத்துடனும் செய்வார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். எனவே இவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் மற்றும் இதுவே இவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இவர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் தலைமைத்துவ குணங்கள் காரணமாக, ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இவர்கள் தங்களின் கடின உழைப்பின் அடிப்படையில் தங்கள் செல்வத்தை ஈட்டுகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எந்த ரிஸ்க்கான வேலையையும் செய்ய பயப்படமாட்டார்கள். மாறாக, தங்கள் கடின உழைப்பில் முழு நம்பிக்கை வைத்து, எந்த வேலையையும் முழு நேர்மையுடன் செய்வார்கள். இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கோபம் வேகமாக வரும். ஆனால் சில சமயங்களில் அமைதியாக இருப்பார்கள். மிகவும் நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லது செய்வார்கள்.
இவர்களின் சிறப்பு, மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குழுவை சிறப்பாக நடத்தும் தலைமைத்துவ குணம் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் தங்கள் குழுவை வலுவாக வைத்திருக்க நினைப்பார்கள். இவர்கள் தெளிவாக இருப்பதால், இவர்கள் நிறைய பேருக்கு எதிரிகளாக மாறுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் திறமையானவர்கள், தைரியமானவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள், சுயமரியாதை கொண்டவர்கள். தங்களுக்கு எதிராக எந்த தவறான விஷயத்தையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் சிங்கத்தைப் போலவே தைரியசாலிகள். இவர்கள் பெரும்பாலும் போலீஸ், மருத்துவம், ராணுவத்தில் தான் சேர விரும்புவார்கள். தங்கள் இலக்குகளில் தீவிரமாக இருப்பார்கள். எந்த ரிஸ்க்கான வேலையையும் செய்ய பயப்படுவதில்லை. இவர்கள் யாருக்கு முன்பும் தலைவணங்க விரும்பமாட்டார்கள். சிறு விஷய்ங்களுக்கும் கோபப்படுவார்கள். இவர்களின் சுயமரியாதைக்கு எந்த குறைவும் இருக்கக்கூடாது.
மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களின் எந்த வேலையிலும் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள். சுதந்திரமான மனம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களின் அதிபதியும் செவ்வாய், எனவே இவர்களுக்கும் கோபம் அதிகமாக வரும். இவர்களிடம் உள்ள குறை என்றால், இவர்கள் யாரையும் தங்களை விட உயர்ந்தவர்களாகக் கருதுவதில்லை. இதனால் எந்த வேலையையும் செய்வதில் தோல்வியடைகிறார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எந்த வேலையையும் பயமின்றி செய்வார்கள். முக்கியமாக இவர்கள் தங்கள் வேலையை முழுமையான திட்டமிடலுடன் செய்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications