Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Today Rasi Palan 29 June 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கணும்
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. ஆயில்யம், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கலாம். அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற நபரை நீங்கள் சந்திக்க முடியும். வியாபாரிகளின் நிதி பிரச்சனைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் அல்லது ஊதிய உயர்வைப் பெறல வாய்ப்புள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவுகளில் அதிக கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் உங்களிடையே மனகசப்பு அதிகரிக்கலாம். உங்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனை இருந்தால் இன்று கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, சில காலமாக சிக்கியிருந்த பணத்தை திரும்ப பெறுவது கடினமாக இருக்கலாம். நீங்கள் நிதி பரிவர்த்தனைகளை மிகவும் சிந்தனையுடன் செய்யவும். மதியத்திற்குப் பிறகு நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்கும் முன்பு, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சியுங்கள். உத்தியோகஸ்தர்கள் அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். வீட்டுப் பெரியவர்கள் சில விஷயங்களில் உங்கள் மீது கோபப்படுவார்கள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலாம். அதனால், உங்களுக்கிடையேயான காதல் இன்னும் ஆழமாகும். மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக, உங்கள் மனநிலை இன்று சரியாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்:46
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். நீங்கள் சரியான நிதித் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். நெருங்கிய உறவினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரிகளுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையால் மிகவும் சோர்வாக உணரலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் விலகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கவனக்குறைவால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 7:55 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய மற்றும் சிறப்பான ஒன்றைச் செய்ய இன்று சாதகமான நாள். வணிகர்களின் வணிகத் திட்டங்களில் ஒன்று பாதியில் தடைப்படலாம். உங்களுக்கு நிதி இழப்பும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். காதல் வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதைத் திருத்தி புதிதாகத் தொடங்க முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வருமானம் அதிகரிப்பதால், உங்கள் நிதி நிலை கணிசமாக மேம்படும். உங்களின் முக்கிய முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தொழிலதிபர்கள் திடீரென்று வேலை சம்பந்தமாக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பரபரப்பான வேலை இருந்தபோதிலும், புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். முன்னோர் சொத்து சம்பந்தமான சர்ச்சைகள் தீரும். பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் ஜோடிகளுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக காரமான மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 5 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தனிமையில் அதிக நேரம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், எதிர்மறை எண்ணங்கள் உங்களைத் தாக்கும். ஏதேனும் பிரச்சனை என்றால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மனம் திறந்து பேசுங்கள். தொழிலதிபர்கள் புதிய வியாபாரத் திட்டத்தில் வேலையைத் தொடங்க இன்று ஏற்ற நாள். நிலுவையில் உள்ள ஆவண வேலைகள் இன்று முடிக்கப்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிகம் தலையிடாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சியுங்கள். காதல் ஜோடிகள் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற, உங்கள் துணை சில சிறந்த திட்டங்களைச் செய்யலாம். நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படலாம். தினமும் தியானம் செய்வது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்களின் அரசு சார்ந்த பணிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் இன்றே அது நிறைவேறும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். சில பழைய கசப்பான நினைவுகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். வியாபாரிகளே வீண் விவாதத்தில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில், பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடினமாக உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையைப் புறக்கணிக்காதீர்கள். எல்லா வெறுப்பையும் மறந்து, உங்கள் துணையை அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள். இன்று உங்கள் உடல்நலம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்:42
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, கடினமான வேளைகளில் உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பணி தொடர்பான ஏதேனும் மாற்றங்களை நீங்கள் சமீபத்தில் செய்திருந்தால், நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் தடைகள் நீங்கி நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளிடையே இனிமை அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளிப்படைத்தன்மையைப் பேணுங்கள். பொய் கூறுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் வயதான ஒருவரின் உடல்நிலை குறித்து கவலைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, கிரகங்களின் சுப நிலை உங்களுக்கு பெரும் பலன்களைத் தரும். நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வியாபாரிகள் தங்கள் எதிரிகளை தோற்கடித்து வெற்றி காண்பார்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் புரிதலின் அடிப்படையில் பெரிய வெற்றியை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கிய முடிவுகளில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, தவறான விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். தேவைக்கு அதிகமாக யாரையும் நம்பாதீர்கள். உறவுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும். மேலும், உங்கள் நடத்தையிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்களின் சில வேலைகள் பணப்பற்றாக்குறையால் பாதியில் தடைபடலாம். உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கலாம். அலுவலகத்தில் நடக்கும் அரசியல் உத்தியோகஸ்தர்களைத் தொந்தரவு செய்யலாம். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். பெற்றோரின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள். உங்கள் காதலைப் பற்றி குடும்பத்தாருக்கு தெரிய வரலாம். பரபரப்பான வழக்கம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக, திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல், உங்கள் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அன்புக்குரியவர்கள் நகைச்சுவையாகச் சொல்லும் ஒன்று உங்கள் இதயத்தைப் புண்படுத்தும். வணிகர்கள் ஆபத்தான முடிவுகள் எடுப்பது தீங்கு விளைவிக்கும். உங்கள் தற்போதைய வேலையில் நீங்கள் அதிருப்தி அடைந்தால், புதிய வேலை தேடத் தொடங்குவதற்கு சாதகமான நாள். வீட்டில் பெரியவர்களின் கண்டிப்பான அணுகுமுறை உங்களைத் தொந்தரவு செய்யலாம். கோபத்திலும் அவசரத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் நல்லது. காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் உறவை மேம்படுத்த, நீங்கள் கோபத்தையும் ஈகோவையும் கைவிட வேண்டும். நீங்கள் தலைவலி மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, திட்டம் தீட்டுவதால் மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது. வெற்றியை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மற்றவர்கள் உங்களைத் தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள். எந்தவொரு முடிவையும் சொந்தமாக எடுக்க முயற்சிக்கவும். தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தைக் கவனித்து செயல்பட வேண்டும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக வீட்டில் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுங்கள். உங்கள் காதல் உறவை திருமணமாக மாற்ற விரும்பினால், உங்கள் துணையின் ஒப்புதலையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவில் வெகுநேரம் விழித்திருக்கும் உங்கள் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:15 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











