Today Rasi Palan 27 June 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 27 June 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கலாம். இன்று அனைத்து வேலைகளும் சுமுகமாக முடிந்து முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த சச்சரவுகள் தீர்ந்து வீட்டில் சூழ்நிலை மேம்படும். திருமணமானவர்கள், வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்திற்காக உங்கள் அன்றாட வழக்கத்தில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, பயனற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், முக்கியமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பொறாமை, ஈகோ, பேராசை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விலகி இருங்கள். தொழிலதிபர்களின் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் இன்று உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை அவர்களை வருத்தமடையச் செய்யலாம். காதலர்களள் தங்கள் காதல் உறவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் நல்ல நாள். விரும்பிய பலன்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் சில பெரிய சாதனைகளை புரியலாம். வியாபாரிகளின் வணிக விரிவாக்கத் திட்டங்கள் முன்னேறும். உத்தியோகஸ்தர்களின் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் காதலைப் பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வின் மிக அழகான நாட்களில் ஒன்றாக இருக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 8:55 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் உங்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதற்கு இன்று சாதகமான நாள் அல்ல. பணத்தைக் கணக்கிடும்போது கவனமாக இருங்கள். வேலை சம்பந்தமான தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். காதல் விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தவறான உணவுப் பழக்கங்களைத் தவிர்க்கவும். இல்லையெனில், கடுமையான பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் உறவுகளில் உள்ள மனகசப்பை நீக்க, நீங்கள் ஒருவருக்கொருவர் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். கோபம் மற்றும் ஈகோ உங்கள் உறவுகளைக் கெடுக்கும். தொழிலதிபர்கள் புதிய சவால்களை சந்திப்பீர்கள். எளிதில் முடிக்கும் வேலைகள் கூட தடைப்படலாம். அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் தொலைந்து போவதால் உயர் அதிகாரிகளின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும். வேலை அழுத்தம் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். காதல் விஷயத்தில் உங்கள் துணையைப் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் உங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் திறமைக்கு ஏற்ப வேலை செய்வது நல்லது. இல்லையெனில், உங்கள் உடல்நிலை மோசமடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வேலை அடிப்படையில் இன்று சிறப்பாக இருக்கும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். தொழிலதிபர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் நிலுவையில் வேலையும் விரைவில் முடிக்கப்படும். நீங்கள் சமீபத்தில் உங்கள் வேலையை மாற்றியிருந்தால், கடினமாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் வெளியாட்களை அனுமதிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வு புண்படக்கூடும். காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும், இன்று நீங்கள் சில சுவாரஸ்யமான வேலைகளையும் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 9:20 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் கடினமான காலங்களை கடந்து கொண்டிருக்கிறீர்கள். இதுபோன்ற கவலையின் காரணமாக மனதில் பல வகையான எதிர்மறை எண்ணங்கள் எழும். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலதிபர்களின் நிதி சிக்கல்கள் ஆழமாகலாம். நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், அதில் முறிவு ஏற்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டாம். உங்களால் முடிந்ததைக் கொடுக்க முயற்சியுங்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தவறான அணுகுமுறை உங்களை வருத்தமடையச் செய்யும். எதையும் வெளிப்படையாக பேச வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:50 மணி முதல் இரவு 8:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, தொழில் சம்பந்தமான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். இல்லையெனில், நஷ்டம் ஏற்படும். வேலையுடன், உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குங்கள். குடும்பத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
வியாபாரிகளே, இன்று உங்கள் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருக்கவும். உங்கள் பெயரைக் கெடுக்க சக ஊழியர்கள் சிலர் முயற்சி செய்யலாம். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளைப் பெரியவர்களிடம் பேசி தீர்க்க முயற்சிக்கவும். திருமணமானவர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். வயதானவர்களுக்கு முழங்கால் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நேர்மறையான விஷயங்கள் மனதிற்கு அமைதியையும், நம்பிக்கையையும் தரும். உங்களின் முக்கிய முடிவுகளில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழிலதிபர்களின் முக்கியமான வேலையும் திட்டமிட்டபடி முடிவடையும். அலுவலகத்தில் உங்களின் நேர்மறை எண்ணம் உங்கள் உயர் அதிகாரிகளை வெகுவாகக் கவரும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த இடத்துக்கு நடைப்பயிற்சியும் செல்லலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மற்றும் உங்களுக்குள் புதிய ஆற்றலை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, நீங்கள் கூடுதல் வருமான ஆதாரத்தைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். ஒரு பெரிய இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். வணிகர்களை நெருக்கமான ஒருவரே ஏமாற்ற முயற்சிக்கலாம். அதனால், உங்கள் மன உறுதி குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் கடுமையான நடத்தையால் எதிர்மறையாக உணரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். அவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். நீண்ட தூர பயணமும் செல்லலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் காலை 11 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்கள் திறனை உணர்ந்து, சரியான திசையில் கடினமாக உழைத்தால் முன்னேற்றம் சாத்தியமாகும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, நன்கு ஆராய வேண்டும். தொழிலதிபர்கள் பெரிய முதலீடு செய்ய திட்டமிடலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வதந்திகளைப் புறக்கணித்து, உங்கள் சொந்தத் தொழிலில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். கோபமும் அவசரமும் விஷயங்களை மோசமாக்கும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒரு நாள்பட்ட நோயும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, முக்கியமான முடிவுகளை நீங்களே எடுக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் நல்லது கெட்டது உங்களுக்கு தான் நன்றாக தெரியும். தொழிலதிபர்கள் நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். நீங்கள் சில சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களின் அலுவலகச் சூழல் நன்றாக இருக்கும். வேலை செய்வதில் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சிறப்புப் பரிசைப் பெறலாம். உங்கள் அன்புக்குரியவருக்கு சிறப்பாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால் வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, June 27, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion