Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
Today Rasi Palan 26 செப்டம்பர் 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி வெள்ளிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இன்று எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். வியாபாரத்தில் குறைவான லாபம் ஏற்படுவது சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் பணிகளைப் பற்றிய கவலைகள் தொடரும், நீங்கள் சரியான திட்டமிடலுடன் தொடர வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கலாம். உங்கள் எண்ணங்களை உங்கள் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்களின் ஆலோசனை உங்களுக்கு வழிகாட்டும். குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான ஷாப்பிங் பயணம் ஏற்படலாம், மேலும் மாலை நேரத்தில் விருந்தினர்கள் வரலாம். நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபட சிறிது நேரம் ஒதுக்குங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில்ரீதியாக இன்று நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் மற்றும் உங்கள் அறிவையும் திறமையையும் மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று மாலை உங்கள் சக ஊழியர்களுடன் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். உங்கள் வருமானம் உயர வாய்ப்புள்ளதால் நிதி நிலைமைகள் மேம்படும். இன்று சில உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, வணிக விஷயங்களில் இன்றைய நாள் சாதகமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களால் உங்கள் முயற்சிகள் தடைபடுவதைத் தவிர்க்க வேண்டும். சமூக சேவை சார்ந்த பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். இருப்பினும், உங்களைச் சுற்றியுள்ள எந்தவொரு சர்ச்சையிலிருந்தும் விலகி இருப்பது முக்கியம், ஏனெனில் அவை உங்களுக்கு சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பார்ட்னரின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிரவுன்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். உங்களின் பணம் யாரிடமாவது சிக்கியிருந்தால், இன்று அதை மீட்டெடுக்கலாம். உங்கள் மனைவியின் ஆதரவு முழுமையாக கிடைக்கும், இது மனஅமைதியைக் கொடுக்கும். இருப்பினும், நிதி விஷயங்களில் மற்றவர்களை நம்புவதைத் தவிர்க்கவும். சில செலவுகளால் நீங்கள் சிரமப்படுவீர்கள். நீண்ட கால திட்டங்கள் முன்னேற்றம் அடையும், உங்கள் முயற்சிகள் உங்கள் வேலையில் அங்கீகாரத்தை பெற்றுத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அவர்களின் வேலை தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். நீங்கள் புதிய சொத்துக்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சரியான நாள் இல்லை. வதந்திகளை நம்புவதால் பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டை அலங்கரிக்க சில புதிய பொருட்களை வாங்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம்
இன்று நீங்கள் மோசமான நாளை அனுபவிக்காலம். உங்கள் புத்திசாலித்தனம் இன்று உங்களுக்கு துணையாக இருக்காது, இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறான பலன்களை கொடுக்கலாம். இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் சில பெரிய நிதி இழப்பையும் சந்திக்க நேரிடலாம். வழக்கத்தை விட இன்று உங்கள் இயல்பில் அதிகப்படியான கோபம் இருக்கும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது இன்று உங்களின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பல வேலைகளில் பிஸியாக இருப்பார்கள், இதன் காரணமாக அவர்கள் சற்று சோர்வாக உணரலாம். இன்று பிரபலங்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மை பயக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு அமையும். எதிர்மறையான செயல்பாடுகளைக் கொண்டவர்களிடமிருந்து விலகி இருங்கள், அவர்களின் தவறான ஆலோசனைகள் புறக்கணிப்பது நல்லது. அதேசமயம் வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் புறக்கணிக்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களின் கணிப்புகள் துல்லியமாக செயல்படும், சில காலம் உங்களுக்கு எதிராக இருந்தவர்களும் உங்களுக்கு ஆதரவாக வருவார்கள். அதிக செலவு அல்லது கடன் வாங்குவதை தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம். குடும்பத்துடனான உறவுகள் வலுவடையும், அவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமனதுடன் செய்வீர்கள். இந்து உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஸ்கை ஆரஞ்சு.
மகரம்
இன்று மகர ராசிக்காரர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். இன்று கூடுதல் எச்சரிக்கை தேவை. சர்ச்சைகள் எழலாம், முக்கியப் பணிகளில் தடைகள் ஏற்படக்கூடும். உடல்நலப் பிரச்சினைகளும் தோன்றக்கூடும், எனவே அலட்சியம் கூடாது. வாகனம் ஓட்டும்போது, விபத்துகளைத் தவிர்க்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூதாதையர் சொத்துக்களால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் கூடும், தொழில் முயற்சிகளில் நஷ்டம் ஏற்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
கும்பம்
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு உற்சாகமான வாய்ப்புகள் நிறைந்த, மிகவும் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் பணிகள் எப்படியும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும், மேலும் ஒரு முக்கிய நபருடனான சந்திப்பு லாபகரமான புதிய வணிக முயற்சிக்கு வழிவகுக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களின் மரியாதையையும் பாராட்டையும் பெறுவீர்கள். நீண்ட பயணம், புதிய வீடு அல்லது வாகனம் வாங்குதல் ஆகியவற்றுக்கான பணிகள் தொடங்கப்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நெருக்கமானவர்களால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க விழிப்புடன் இருங்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சில கூடுதல் செலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சட்ட விவகாரம் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். வேலையில் உங்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











