Today Rasi Palan 26 June 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலையில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்கக்கூடாது..

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 26 June 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.30-10.30 மணி வரை. மாலை 4.30-5.30. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்கள் வேலை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் உதவியைப் பெறலாம். பண விஷயங்களில் அவசரம் வேண்டாம். இல்லையெனில், நஷ்டம் ஏற்படும்.
தொழிலதிபர்கள் இன்று ஆபத்தான முடிவு எடுப்பது சரியல்ல. புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமாக இருக்கும். அதனால், அவரைப் பற்றிய உங்கள் கவலை அதிகரிக்கலாம். குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தசை சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் வேலையுடன் வேறு சில விஷயங்களையும் நீங்கள் கவனித்துக்கொள்வது முக்கியம். இல்லையெனில் உங்கள் கடின உழைப்புக்கு வேறு யாராவது நற்பெயரை தட்டி செல்லலாம். நீங்கள் பெரிய தொழிலதிபராக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடைக்கலாம். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் தரும்.
குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ண வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, வருமான ஆதாரத்தை அதிகரிப்பது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். முதலீடு தொடர்பான திட்டங்களைச் செய்வதற்கு இன்று சாதகமான நாள். இன்று நீங்கள் மன அமைதியையும் நிம்மதியையும் உணர்வீர்கள். வணிகர்கள் சமீபத்தில் ஒரு புதிய ஆர்டரைப் பெற்றிருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலின் எந்தப் பகுதியிலும் வலியால் அவதிப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 11 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீங்கள் பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். நெருங்கிய ஒருவருடன் தவறான புரிதல் இருக்கலாம். அதனால், உங்கள் உறவு மோசமடையலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும். உங்கள் துணையுடன் ஒருங்கிணைப்பு மோசமடையலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வேலை அழுத்தத்தை உணர்வீர்கள். குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்கப்படலாம். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மன உறுதியை உயர்த்துவார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 54
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் ஆளுமையை வெளிக்கொணர வேண்டிய நேரமிது. எனவே உங்கள் மீது அதிக கவனம் செலுத்தினால் நல்லது. வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சில புதிய சாதனைகளைப் புரியலாம். சந்தையில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக சிறு பயணம் செல்ல வேண்டியிருக்கும். உங்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உறவுகளுக்கிடையே இருந்த கசப்புகள் நீங்கி, அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, யாரிடமும் தேவைக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள், இன்று உங்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்காமல் போகலாம். உணர்வு ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள். இன்று எந்தவொரு முக்கிய முடிவும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் வேலை தொடர்பான ஆவணத்தை நன்கு படித்த பின்னரே கையெழுத்திட வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கு ஏதேனும் கடினமான பணி ஒதுக்கப்பட்டால், உங்கள் வேலையை முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பிடிவாத குணத்தால் இன்று உங்களின் சில உறவுகள் கெட்டுப்போகலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உங்கள் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்தினால், பெரிய முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, சில சாதகமான மாற்றங்கள் காணப்படும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலதிபர்கள் கடன் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண்பார்கள். அலுவலகச் சூழல் நன்றாக இருக்கும். உங்களின் முழு கவனமும் உங்கள் வேலையில்தான் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். காதல் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 9:50 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, பணம், புகழ் இரண்டையும் நீங்கள் பெறுவீர்கள். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நிதானமாக நேரத்தைச் செலவிடுவீர்கள். வியாபாரிகள் தங்கள் எதிரிகளை தோற்கடித்து பெரிய வெற்றியை அடையலாம். நீங்கள் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை முடித்திருந்தால், உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் பெரியவரின் உதவியால் தீரும். உங்கள் பேச்சில் இனிமையைக் கொண்டுவர வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஒப்புதலைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:10 மணி முதல் மாலை 6:30 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட வேண்டும். உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு ஏதேனும் புதிய தொழில் முன்மொழிவு வந்தால், அவசரப்பட்டு ஏற்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யும்போது கவனமாக இருக்கவும். உங்களின் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, உங்கள் அன்புக்குரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உடல்நிலை ஏற்கனவே சரியாக இல்லை என்றால், உங்களுக்கு முறையான சிகிச்சை தேவை, இல்லையெனில் அது கடினமாகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 4 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்களுக்கு இனிய நாளாக அமையும். உங்கள் திறமை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், நல்ல வாய்ப்பைப் பெறலாம். இன்று உங்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வணிகர்கள் தங்கள் வணிகத் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்கள் உறவுகள் இன்னும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும், இல்லையெனில், நாள்பட்ட வயிறு தொடர்பான நோய்கள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்கள் கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். மேலும், பெரிய கவலைகளிலிருந்தும் விடுபடலாம். வியாபாரிகளின் தடைப்பட்டிருந்த பொருளாதாரப் பரிவர்த்தனைகள் முடிவடையும். சில புதிய வேலைகள் தொடங்கலாம். வேலையில் எந்த வகையிலும் அலட்சியமாக இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் தொடர்பான திட்டங்களை நீங்கள் செய்தால், பெரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். குடும்பத்தில் வயதானோரின் உடல்நிலை குறித்து கவலைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பரஸ்பர புரிதலால், உறவுகளிடையேயான தூரத்தை குறைக்க முடியும். கோபம் மற்றும் ஈகோவை தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரிகள் கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உங்களால் சிறு தவறுகள் நிகழலாம். உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை குலைந்து போகலாம். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துங்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10:30 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, June 26, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion