Today Rasi Palan 25 July 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் சற்று சுயநலமாக சிந்திக்க வேண்டிய சூழலை எதிர்கொள்ளலாம்

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 25 July 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, பணம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் வரலாம். உங்களுக்கு சரியான நிதி மேலாண்மை தேவை. விரைவான வெற்றியை அடைய, தவறான பாதைகளைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் சிக்கலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். உங்களின் தற்போதைய வணிகத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்கள் அதிக பணிச்சுமையால் மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். சிறு இடைவெளி எடுத்து முழு ஆற்றலுடன் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும். குடும்ப பிரச்சனை பற்றி குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்கலாம். இன்று உங்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உங்களை மற்றவர்களுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். இல்லையெனில் உங்கள் தன்னம்பிக்கை குறையும். உங்கள் திறமைகளை முதலில நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். பண விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வருமானம் உயரும். வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் இருக்கும். திடீரென பெரிய நிதி ஆதாயம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டபடி வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் காதல் நிறைந்த மனநிலை உங்கள் நாளை இன்னும் இனிமையானதாக மாற்றும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகமாக டீ மற்றும் காபி உட்கொள்வதைத் தவிர்க்கவும். நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 10:20 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, அனுபவம் வாய்ந்த மற்றும் நேர்மறையான எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதனால், உங்கள் சிந்தனையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சில குடும்ப உறுப்பினர்களின் நடத்தை உங்களுக்கு நன்றாக இருக்காது. உணர்வு ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள். யாருடைய விஷயத்தையும் யோசிக்காமல் பேசுவதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் புதிய வேலைகளைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சமீபத்திய இழப்பை ஈடுசெய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். ஆனால், உங்கள் வேலை முடியும் வரை மற்றவர்களுக்கு உதவுவதைத் தவிர்க்கவும். வீட்டில் மன அழுத்தம் நிறைந்த சூழல் இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், பழைய பிரச்சனைகளை மறந்துவிட்டு புதிதாக வாழ்க்கையைத் தொடங்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பழைய உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது தவிர, காரமான மற்றும் வறுத்த உணவுகளிலிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் காலை 11:20 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உங்களுக்கு தகராறு இருந்தால், இன்று எல்லாம் சரியாகிவிடும். நிதி விஷயங்களில் மிகவும் அலட்சியமாக இருக்க வேண்டாம். கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். வணிகர்கள் இன்று வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல், முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். கோபம் மற்றும் ஈகோவைத் தவிர்க்காவிட்டால், உங்கள் குடும்ப வாழ்க்கை மோசமடையக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில ஒவ்வாமை அல்லது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று வெளி வேலைகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டுப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முடியாது. வேலை தொடர்பான சில சவால்கள் இருக்கும். ஆனால். அவற்றுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவீர்கள். சில சுப காரியங்களை வீட்டில் திட்டமிடலாம். வியாபாரிகளுக்கு சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்று பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க வேண்டியிருக்கும். வீட்டின் பெரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் கோபம் மற்றும் பிடிவாத குணத்தால் நீங்கள் விமர்சிக்கப்படலாம்.
தனிமையில் இருப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை விரைவில் தொடங்கும். கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, சில குடும்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதால் உங்களின் முக்கிய கவலைகள் நீங்கும். நீங்கள் புதிய வருமான ஆதாரத்தைத் தேடுகிறீர்கள் என்றால், வெற்றி பெறலாம். விரைவில் நீங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். பிறர் விஷயங்களில் தலையிடுவது உங்களுக்கு அதிக பிரச்சனையைக் கொடுக்கலாம். தடைபட்டிருந்த வியாபார பரிவர்த்தனைகள் முடியும். புதிய வணிகச் சலுகைகளைப் பெறலாம்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் முக்கியமான கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும்.
உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளையும் உண்டு மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். பண விஷயங்களில் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. சிக்கிய பணத்தை மீட்க முடியும். வேலையில் அலட்சியம் வேண்டாம். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்கள் இன்று சில புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரமிது. உத்தியோகஸ்தர்களின் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீட்டில் திருமண வயதில் யாரேனும் இருந்தால், அவர்களது திருமணத்தை உறுதி செய்யப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பு வலுவடையும். உங்கள் காதலை திருமணமாக மாற்ற விரும்பினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 7:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் வேலை தொடர்பான மாற்றங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், அவற்றைச் செயல்படுத்துவதற்கு இன்று சாதகமான நாள். பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். வியாபாரிகளின் தடைபட்ட விஷயங்கள் மேலும் தொடரலாம். அதனால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் எந்த விதத்திலும் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சிப்பூர்வமான பற்றுதல் அதிகரிக்கும். உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருக்கலாம். சீரான இடைவெளியில் உடற்பரிசோதனை அவ்வபோது செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். கோபம் மற்றும் ஈகோ காரணமாக, உங்கள் நண்பர்களுடன் மனகசப்பு ஏற்படலாம். வியாபாரிகள் புதிய தொழில் திட்டங்களை தீட்டுவதற்கு இன்று சாதகமான நாள். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையை முழு உழைப்புடனும் ஆற்றலுடனும் செய்வீர்கள். எந்த ஒரு கடினமான பணியையும் எளிதாக முடிக்க முடியும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமான கவலைகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் உறவு தொடர்பான எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். நல்ல ஆரோக்கியத்திற்காக கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது மனதிற்கு பதிலாக மூளையைப் பயன்படுத்தினால் நல்லது. வேலை தொடர்பான புதிய சவால்கள் இருக்கும். ஆனால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தமான சில பிரச்சனைகள் தீரும் வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்களுக்கு பழைய தொடர்புகளால் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை திடீரென அதிகரிக்கலாம். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள சிலரின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, ஏமாற்றத்தைத் தவிர்த்து, உங்களை உற்சாகமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த நேரம் உங்களுக்கு முக்கியமானது. அதை நன்றாகப் பயன்படுத்துங்கள். சில நேரங்களில் கொஞ்சம் சுயநலமாக இருப்பது அவசியம். உங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். வியாபாரிகளின் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து வேலையில் வேகம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையை முழு பொறுப்புடனும் கடின உழைப்புடனும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் காதல் உறவைப் பற்றி உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். உடல்நலம் தொடர்பான பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு திடீரென சிரமங்கள் அதிகரிக்கலாம். அவசரப்பட்டு எந்த ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டாம். அதிக பணிச்சுமை காரணமாக, உங்கள் தனிப்பட்ட பொறுப்புகளை நீங்கள் புறக்கணிக்கலாம். நாளின் இரண்டாம் பகுதியில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்கள் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். இன்று உங்கள் வணிக முடிவுகளை சிந்தனையுடன் எடுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சில திட்டங்களைத் தீட்டலாம். உங்களின் இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் நிறைவேற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மோசமான வானிலை உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, July 25, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion