Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
Today Rasi Palan 25 August 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்களின் முக்கியமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனக்குறைவு பெரும் சிக்கலுக்கு காரணமாகலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் அவசரம் வேண்டாம். நெருங்கிய நண்பர் அல்லது உறவினருடன் விரிசல் ஏற்படலாம். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையை கவனித்துக் கொள்ளுங்கள். தொழிலதிபர்களின் வியாபாரம் சுமுகமாக நடைபெறும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களின் கடின உழைப்பு வெற்றி பெறும். உங்கள் அதிகப்படியான கோபம் வீட்டில் சூழ்நிலையை கெடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடமிருந்து ஒரு பெரிய கோரிக்கையை முன்வைக்கலாம். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். ஓய்வில் அதிக கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்காக போதுமான நேரத்தை நீங்கள் பெறுவீர்கள். எனவே, உங்கள் மீது கவனம் செலுத்த முடியும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். சிக்கிய பணம் மீட்கப்படலாம். அலுவலகத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வியாபாரத் திட்டங்கள் வெற்றியடையும். நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கடின உழைப்பால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். விரைவில் உங்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். வீட்டில் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். கோபப்படுவதற்குப் பதிலாக, பிரச்சனையை அமைதியாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 3 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்கவும். உங்கள் கவனக்குறைவு உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர முடிவினால் தவறான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். முக்கிய வியாபார முடிவுகளை எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முரட்டுத்தனமான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 9:20 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, முன்னோர் சொத்து தொடர்பாக ஏதேனும் தகராறு இருந்தால், பேச்சுவார்த்தை மூலம் அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். தொழிலதிபர்களின் சமீபத்திய நஷ்டத்திலிருந்து நிவாரணம் பெறலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தினமும் யோகா மற்றும் தியானம் செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 10 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு நல்ல வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டுமென்ற கனவில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அவசரமாக எந்த முடிவும் எடுக்காதீர்கள். அது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் சிக்கலில் ஆழ்த்தும். வியாபார விஷயங்களில் அவசரம் வேண்டாம். பெரிய லாபத்திற்காக, சிறிய லாபத்தை புறக்கணிக்காதீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். உங்களை மனரீதியாக வலுவாக வைத்திருக்க, நீங்கள் தியானத்தின் உதவியைப் பெற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, அலுவலகத்தில் நீங்கள் நல்ல வெற்றியை அடைவீர்கள். நீங்கள் பெரும் முன்னேற்றம் அடையலாம். பண விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். புதிய வருமான ஆதாரத்தைப் பெற முடியும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரைச் சந்திக்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று உத்தியோகஸ்தர்களின் வேலைகள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே முடியும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினரின் நடத்தை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நீங்கள் யாரிடமாவது காதலை முன்மொழியப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பல் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் காலை 11:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் எதைச் சொன்னாலும் மற்றவர்கள அதை தவறாகப் புரிந்துகொள்ளலாம். நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். ஆனால், உங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். பணப்பற்றாக்குறையால் தடைபட்ட எந்த வேலையையும் செய்து முடிக்கலாம். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிகமாக தலையிட வேண்டாம். இல்லையெனில், உங்களின் இந்த பழக்கம் உங்களுக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான உங்கள் உறவு வலுவடையும். காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தலைவலி பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து நீங்கள் ஒரு சிறப்பு பரிசைப் பெறலாம். இன்று திடீர் பயணத்திற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள்விரும்பிய இடமாற்றம் பெறலாம் அல்லது உங்கள் வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீங்கள் வீட்டில் சில மதிப்புமிக்க பொருட்களை வாங்க திட்டமிடலாம்.
உங்கள் காதல் உறவு மேலும் வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரியான உணவுப் பழக்கத்துடன், தினசரி உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, மாணவர்கள் தங்களின் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். உங்கள் பணம் நீண்ட காலமாக எங்காவது சிக்கியிருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில், அதை இழக்க நேரிடலாம். வேலை தொடர்பான முயற்சி தோல்வியடைவதால் உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அதிக கவனம் தேவை. தந்தையின் உடல்நிலை பற்றி கவலைகள் ஏற்படும். காதல் திருமணம் செய்துகொள்ளும் உங்கள் கனவு நனவாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாகனத்தை கவனமாக பயன்படுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டி வரும். மற்றவர்கள் சொல்வதைக் கண்டு மயங்காதீர்கள். உங்கள் சொந்த முடிவுகளை சிந்தித்து எடுங்கள். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடலாம். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய தொழில் திட்டத்தில் வேலை தொடங்க நேரம் சரியில்லை. உங்கள் நிதி நிலைமையை மனதில் வைத்து மட்டுமே உங்கள் முடிவுகளை எடுங்கள். அலுவலகத்தில் முதலாளி மிகவும் மோசமான மனநிலையில் இருப்பார். வேலையில் கொஞ்சம் கூட அலட்சியமாக இருக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் அதிகப்படியான தலையீடு உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கனமான பொருட்கள் தூக்குவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 7 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். மேலும் நீங்கள் நேர்மறையாகவும் இருப்பீர்கள். நிலுவையில் உள்ள வேலையை முடிப்பதன் மூலம் உங்கள் முக்கிய கவலைகள் தீரும். உங்கள் கடின உழைப்பும் பாராட்டப்படும். மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் பொன்னானது. தொழிலதிபர்கள் நிலுவையில் உள்ள ஆவணங்களையும் முடிக்க முடியும். நிதி ஆதாயமும் உண்டாகும். உங்கள் தற்போதைய வேலையில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், புதிய வேலையைத் தேடுவதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். வீட்டில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்கள் காதல் துணையுடன் வாக்குவாதம் செய்வது, உங்கள் உறவைப் பலவீனப்படுத்தும். நல்ல ஆரோக்கியத்திற்காக, அன்றாட வழக்கத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, பொருளாதார நிலையில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தமான லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சில புதிய நபர்களைச் சந்திக்கலாம். ஆனால், தேவைக்கு அதிகமாக யாரையும் நம்ப வேண்டாம். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு பழைய தொடர்பால் நல்ல பலன்கள் கிடைக்கும். தடைப்பட்ட வணிகத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலை அழுத்தம் காரணமாக மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் எழலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கை அல்லது கால் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 10 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











