Today Rasi Palan 24 July 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 24 July 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, மற்றவர்கள் பேச்சைக் கேட்டு செயல்படுவதைத் தவிர்க்கவும். தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களின் திறமைகளையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒரு வயதான உறுப்பினரின் உடல்நிலை குறித்து கவலைகள் இருக்கலாம். வியாபாரிகள் ஏதேனும் புதிதாக வேலையைத் தொடங்க போகிறீர்கள் என்றால், கவனமாக சிந்தியுங்கள். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வீட்டு விஷயங்களில் வெளியாட்கள் அதிகம் தலையிட அனுமதிக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு இருக்கும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் சில புதிய நபர்களைச் சந்திக்கலாம். ஆனால், எந்தவொரு உறவையும் உருவாக்கும் முன்பு, அவர்களைப் பற்றி கவனமாக சிந்தியுங்கள். வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறலாம். வீட்டில் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில் வீட்டின் அமைதி பாதிக்கப்படலாம். வணிகர்ளுக்கு பெரிய வியாபாரத்தில் பரிவர்த்தனை செய்ய வாய்ப்பு உண்டாகும். தொழில் நிமித்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். குடும்பத்தில் சிலரால் பிரச்சனை வரலாம். நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11:30 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது உங்களுக்கு நல்லதல்ல. நீங்கள் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்கலாம். இன்று யாரிடமும் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்கள் கிடைத்த நல்ல வாய்ப்பை இழக்க நேரிடலாம். அதனால், நீங்கள் மிகவும் ஏமாற்றமடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் செயல்திறன் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களுடனான உறவு வலுவடையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கசப்பான மற்றும் இனிமையான வாக்குவாதங்கள் இருக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் சிறிதும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 9:50 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, அலுவலகத்திர் உங்கள் நிலை வலுப்பெறும். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். எதிர்மறையான போக்கு கொண்ட சிலர் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். குழந்தைகள் மீது அதிக கவனம் தேவை. தொழிலதிபர்களின் தடைபட்ட வேலைகள் முடிவடையும். நீங்கள் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வேலையுடன் குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்குங்கள். திருமண வாழ்க்கையில் மனஅழுத்தம் இருக்கும். உங்களுக்குள் நம்பிக்கை குறையலாம். வயிறு சம்பந்தமான ஏதேனும் பழைய நோய் மீண்டும் தோன்றலாம். உணவில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பயணம் மற்றும் பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆனால் உங்கள் முக்கிய வேலைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். உங்கள் திறமைக்கு ஏற்ப சிறந்ததை வழங்குங்கள். வியாபாரிகளுக்கு பெரிய வாடிக்கையாளர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வணிகம் விரைவில் இரண்டு மடங்கு வேகமாக வளரும். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்தால், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். வீட்டில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். பணம் சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்வில் நிலவும் பிரச்சனைகள் நீங்க சிறிது காலம் ஆகலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். உங்களின் இந்தப் பிரச்சனை சரியான நேரம் வரும்போது நீங்கும். வேலை தொடர்பான நல்ல சலுகையைப் பெறலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புதிதாக ஏதாவது செய்ய திட்டமிடலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பைத் தொடருங்கள். விரைவில் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை உணரச் செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர் வேலை காரணமாக மிகவும் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்:45
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, கடினமான சூழ்நிலைகளில் கூட நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களால் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரிகளின் முக்கியமான வேலைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி இன்று உங்களுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் கடினமான காரியங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீட்டில் நிலவும் பதற்றம் நீங்கி உறவுகள் மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். காதல் வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். நீண்ட நேரம் பட்டினி கிடக்கும் உங்கள் பழக்கம் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் புதிதாக ஒரு வேலையைத் தொடங்கினால், நீங்கள் வெற்றி பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென பயணம் செய்ய நேரிடலாம். பண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். இல்லையெனில், நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் வேலை தற்காலிகமாக இருந்தால், உங்கள் மனதில் பாதுகாப்பின்மை உணர்வு இருக்கும். நீங்கள் நேர்மறையாக இருந்து வேலையில் கவனம் செலுத்தவும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களின் பரபரப்பான வழக்கத்திற்கு மத்தியிலும், உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்குவீர்கள். அதனால், உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்துங்கள். இல்லையெனில், உங்கள் எதிர்கால திட்டங்கள் தடைபடலாம். பேசும் போது உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்தவும். கேலி செய்யும் போது கூட யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள். நீங்கள் புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அவசரப்பட வேண்டாம். உங்கள் தற்போதைய வணிகத்தில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கவும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். அலுவலகத்தில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கவும். உங்களின் பிடிவாத குணம் வீட்டின் சூழ்நிலையைக் கெடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்ய திட்டமிடலாம். நீங்கள் தனிமையில் இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கை தொடங்கலாம். ஆரோக்கியத்துடன் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் காலை 10:15 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இதன் மூலம் சரியான பலன்களையும் பெறுவீர்கள். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். தொழிலதிபர்களின் சில முக்கிய வேலைகள் பாதியில் தடைபடலாம். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாட்டால் சற்று அதிருப்தி அடைவார்கள். நீங்கள் அவருடைய ஆலோசனைகளைப் பின்பற்றுவது நல்லது. வீட்டில் குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம். நீங்கள் அவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் தனிமையாக உணர்ந்தால் உங்கள் பிரச்சனை நீங்கிவிடும். நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரிடமிருந்து ஆதரவைப் பெறலாம். வேலையில் அதிக கவனம் தேவை. உங்கள் எந்த வேலையையும் நாளைக்கு செய்யலாம் என தள்ளி வைக்காதீர்கள். உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம். வணிகர்கள் முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதற்கு இன்று நல்ல நாள் அல்ல. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு சில பொறுப்பான வேலைகள் கிடைக்கலாம். அதனால், சிறிய தவறுகளை செய்யாதீர்கள். குடும்பத்தில் உள்ள ஒருவரது உடல்நலம் குறித்து நீங்கள் கவலைப்பட நேரிடலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11:30 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்களின் இந்தப் பயணம் முன்னேற்றத்திற்கான பாதையைத் திறக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சில பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். உடல்நிலையில் சில குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, July 24, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion