Today Rasi Palan 22 July 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது வியாபாரத்திற்கு நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 22 July 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.00-7.00 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. ரோஹிணி, மிருகசீருஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பணம் தொடர்பான விஷயங்களில் எந்தவிதமான ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், பெரும் நஷ்டம் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு பணம் சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். நீங்கள் சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய வேலையைப் பெற சரியான திசையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.வீட்டில் பெரியவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். இல்லையெனில், இழப்பு உங்களுக்கே. நகைச்சுவையாக கூட, உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதைப் புண்படுத்தும் எதையும் சொல்லாதீர்கள்.
தொடர் வேலை காரணமாக உங்கள் உடல்நிலை மோசமடையலாம். எப்போதும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், சரியான நேரம் வரும் வரை காத்திருக்கவும். வேலை விஷயத்தில் அதிக மன அழுத்தத்தை வேண்டாம். உங்கள் மனதை அமைதியாக வைத்து நேர்மறையாக இருங்கள். உங்கள் வியாபாரத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து நல்ல லாபத்திற்காக புதிய யுக்திகளை முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் கிடைக்கும். வேலை செய்வதில் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்வீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையால் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் ஈகோ மற்றும் கோபம் வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, முன்னோர் சொத்து சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், பேசி தீர்த்து கொள்வது நல்லது. பொருளாதார முயற்சிகளைத் துரிதப்படுத்த முயற்சிக்கவும். நீங்கள் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் முதலீடுகள் போன்றவற்றைச் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நிறைவேறும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். காதல் வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களில் ஏற்படும் சண்டை சச்சரவு உங்கள் வாழ்க்கைத் துணையை பிரித்து விடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகரிக்கும் பணிச்சுமை உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 7:15 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீங்கள் வீட்டை விட்டு விலகி வாழ்ந்தால், உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உணர்வு ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள். தொழிலில் சில மாற்றம் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். வணிகர்கள் நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது வெளிப்படைத்தன்மையைப் பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு உங்கள் வணிக முடிவுகளை எடுக்காதீர்கள். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால், பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் தொழில் ஒரு புதிய திசையில் நகரும். தேவையில்லாத சண்டைகள் வீட்டின் சூழலைக் கெடுக்கும்.காதல் வாழ்க்கையில் உங்கள் துணையின் முழு ஆதாரவைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் செலுத்துங்கள். வானிலை மாற்றத்தால் சிறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிதாக தொடங்கும் வேலையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனம் காட்டுவீர்கள். எந்த பெரிய பிரச்சனையையும் எளிதில் தீர்த்து வைப்பீர்கள். வியாபாரிகள் அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். முக்கிய வியாபார முடிவுகளை அவசரத்தில் எடுக்க வேண்டாம். வேலையை மாற்றும் எண்ணத்தைச் சிறிது காலம் விட்டு விடுங்கள். உங்கள் தற்போதைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் யாரேனும் திருமண வயதில் இருந்தால், அவர்களது நல்ல வரன் தேடி வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில அழகான இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, தவறான நபர்களின் சகவாசம் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலகிவிடும். அதனால், நீங்கள் சில நல்ல மாற்றங்களை உணருவீர்கள். குழந்தைகளின் தொழில் சம்பந்தமான கவலைகள் விலகும். அவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், அது தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்கள் குழுப்பணியில் அதிக கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் உங்கள் வேலைகள் சுமுகமாகவும் விரைவாகவும் முடியும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் துணையுடன் ஏதேனும் தவறான புரிதல்கள் இருந்தால், அவை தீரும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், நீங்கள் சிறிது நிவாரணம் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, வீட்டில் உள்ள பெரியவர்களின் உதவியால் உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீரும். திடீர் வேலை தொடர்பான பயணம் உங்கள் உடற்சோர்வை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த நேரம் சாதகமற்றது. உங்கள் படிப்பில் தடைகள் ஏற்படலாம். வியாபாரிகள் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. இன்று வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால், உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக அலட்சியம் நல்லதல்ல.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 12:50 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். மாணவர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்களோ, அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் பணத்தால் சிலர் ஈர்க்கப்படலாம். அத்தகையவர்களிடம் கவனமாக இருங்கள். வியாபாரிகளின் நிலுவையில் உள்ள எந்தவொரு வியாபார பரிவர்த்தனையும் முடிவடையும். நீங்கள் வெளிநாட்டில் வணிகம் செய்ய விரும்பினால், உங்கள் திட்டம் தொடரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், கடின உழைப்பைத் தொடர வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் நெருக்கமாக இருப்பீர்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரிக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான சில நன்மைகள் கிடைக்கலாம். உங்களுக்கு வீட்டில் சில பெரிய பொறுப்புகள் இருக்கலாம். அதை, நீங்கள் நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். தொழிலதிபர்கள் தற்போதுள்ள தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களின் அலட்சியத்தால் உயர் அதிகாரிகளின் கோபத்தை சந்திக்கக்கூடும். எனவே, கவனமாக இரு. குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். திருமணமாகாதவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரும். நீங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெறலாம். உடல்நிலை குறித்து கவலையுடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்

மகர ராசிககாரர்களே, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு நீங்கள் மன அமைதியைப் பெறுவீர்கள். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். ஆடம்பரத்திற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகளின் வேலை சம்பந்தமான எந்த முடிவும் சரியானது என்று நிரூபித்து விரும்பிய பலனைப் பெறுவீர்கள். நீங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால் உங்களின் கடின உழைப்பு நல்ல பலன் தரும். வீட்டில் ஏதேனும் சுப காரியம் நடைபெறலாம். இன்று குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் துணையிடம் எதையும் மறைக்காதீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில், உங்கள் எடை அதிகரிப்பு பல நோய்களை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பழைய கடன்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். தவறான நபர்களின் சகவாசத்தில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில், தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம். எந்தவொரு போட்டித் தேர்விலும் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்கள் விரும்பிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் எந்த வாய்ப்பையும் சிறிதென கருதி புறக்கணித்திருந்தால், இன்று நீங்கள் மிகவும் வருத்தப்படலாம். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மகிழ்ச்சியைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சரும அலர்ஜி இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, பழைய வேலைகளை முடிக்க முயற்சியுங்கள். இல்லையெனில், நீங்கள் அழுத்தமாக உணருவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சியைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால், நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். வணிகர்கள் இன்று தங்கள் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்த சில பெரிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும். அதனால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். சில குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். உங்களுக்குள் தகராறும் ஏற்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து தலைவலி பிரச்சனையை எதிர்கொண்டால், உடனே மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3:30 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, July 22, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion