Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Today Rasi Palan 21 July 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் புதிய வேலை தொடங்க வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கு மிக்க சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரிகள் கடந்த காலத்தில் செய்த முதலீடுகளால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றத்தால் மரியாதை பெறுவீர்கள். இதெல்லாம், உங்கள் கடின உழைப்பின் பலன்.குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதளவில் நன்றாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, வேலை தொடர்பான சில விஷயங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வியாபாரிகள் ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாகப் பேசுங்கள். குடும்பத்தினரிடம் அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்கவும். குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாப்பிடுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, பணம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், நிலைமை உங்கள் கையை விட்டுப் போய்விட்டதாக உணர்வீர்கள். கடினமான சூழ்நிலைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். வணிகம்ர்கள் புதிய வணிக முன்மொழிவைப் பெறலாம். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் உதவியால் வேலையில் இருந்த தடைகள் நீங்கும். உங்களின் பரபரப்பான கால அட்டவணை இருந்தபோதிலும், உங்கள் அன்புக்குரியவர்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்குவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இல்லையெனில், அது கடினமாகிவிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் தனிமையில் வாழ விரும்புவீர்கள். சுயமரியாதை மற்றும் சிந்தனைக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். புதிய வேலையைத் தொடங்க இன்று நல்ல நாள். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் பெரிய வாடிக்கையாளர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். சில சாதகமான மாற்றங்கள் விரைவில் நிகழும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சம்பந்தமான பிரச்சனை வரலாம். சில குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உணவுப் பழக்கத்தில் கவனக்குறைவால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 41
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 1 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்கும்போது மன அழுத்தத்தை உணர்வீர்கள். அதனால், உங்கள் அன்புக்குரியவர்களின் உதவியை நீங்கள் பெற வேண்டும். நிதி விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலை தொடர்பான பயணங்கள் சாதகமாக இருக்கும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். வீட்டில் பெரியவர்களுடனான உறவுகள் வலுவடையும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் முன்னுரிமை குடும்பம் மற்றும் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு இருந்தால் அது தீர வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அலட்சியமாக இருக்கக் கூடாது. வியாபாரிகள் கலவையான லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் வேலையில் உயர் அதிகாரிகள் சில குறைகளை கண்டறியலாம். உங்கள் தவறுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.வீட்டில் பூஜை, யாகம் போன்றவற்றை ஏற்பாடு செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால், தேவையில்லாமல் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 9:55 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். தனிமை உணர்வு நீங்கும். அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் வேலை சம்பந்தமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளின் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடிவடையும். நீங்கள் நிதி நன்மைகளையும் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். வீட்டில் சூழ்நிலை மேம்படும். இன்று நீங்கள் உங்கள் பெரியவர்களுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை தனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலையில் பாரத்தை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:50 மணி முதல் இரவு 8:55 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, தவறான புரிதலால் உறவுகள் கெட்டுப் போகும். உங்கள் நடத்தையை மாற்றி கொள்வது நல்லது. நிதி விஷயங்களில் கவனமாக இருங்கள். இல்லையெனில், நீங்கள் ஏமாற்றப்படலாம். மன அழுத்தமில்லாமல் இருந்து உங்கள் வேலையை முழு ஆற்றலுடன் செய்யுங்கள். தொழிலதிபர்கள் முக்கியமான ஆவணங்களை அவசர அவசரமாக செய்ய வேண்டாம். வேலை தொடர்பான பயணங்களுக்கு இன்று உகந்ததல்ல.
உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடப்பது நன்மை தரும். உங்கள் தவறான நடத்தை வீட்டின் அமைதியைக் கெடுக்கும். உங்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தால், மாசு நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் காலை 11 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, முன்னேற்றத்திற்கான கதவு உங்களுக்கு திறக்கும். கிடைக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறலாம். அபுதிய வருமானம் கிடைப்பதால் பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். தொழிலதிபர்களின் சரியான முடிவுகள் நல்ல பலனைத் தரும். இன்று நீங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சிறிய கவனக்குறைவைக் கூட தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள எவருக்கும் உடல்நலம் குறித்த கவலைகள் இருக்கும். காதல் வாழ்க்கையில் மனஅழுத்தம் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8:25 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு கவலைப்படாமல், நேர்மறையாக, கடினமாக உழைக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுக்குள் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். எந்தவொரு விலையுயர்ந்த பொருளையும் வாங்குவதற்கு முன்பு, உங்கள் நிதி நிலைமையை மனதில் கொள்ளுங்கள். வணிகர்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடித்து லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும். வீட்டில் சூழ்நிலை அமைதியாக இருக்க, வீட்டுப் பொறுப்புகளைப் புறக்கணிக்காதீர்கள். வாழ்க்கைத்துணையின் மனநிலை நன்றாக இருக்காது. உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகம் கவலைப்படும் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, சீரான நடத்தை உங்கள் இலக்கை விரைவாக அடைய உதவும். மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். இல்லையெனில், அது கடினமாகிவிடும். தொழிலதிபர்கள் பண விஷயங்களில் எந்த வித ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களின் செயல்பாடுகளில் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் 3:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் செயல்பாட்டில் இருந்துவந்த தடைகள் நீங்கி விரும்பிய பலன்களைப் பெறலாம். அதிகப்படியான தன்னம்பிக்கை மற்றும் ஈகோ காரணமாக, உங்களுக்கு நெருக்கமான ஒருவருடனான உங்கள் உறவு கெட்டுப்போகலாம். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்தவுடன் வீட்டில் சூழ்நிலை மேம்படும். உங்கள் வியாபாரம் வேகமாக முன்னேறும். நிலுவையில் இருந்த பணம் கிடைத்து நிம்மதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்யலாம். திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. உங்கள் வாழ்க்கைத் துணையின் எண்ணங்களையும் அறிந்து நடக்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











