Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
Today Rasi Palan 19 October 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. உத்திரம், ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கலவையான பலன்களை தரும் நாளாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கலாம். உங்களிடையே ஏற்படும் சண்டைகள் உங்கள் குழந்தைகளையும் பாதிக்கும். தொழிலதிபர்களுக்கு பணத்தைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதீத நம்பிக்கையைத் தவிர்த்து, உங்கள் தவறுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் கடுமையான வார்த்தைகள் உங்கள் மனதைப் புண்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு சம்பந்தமான தொற்று ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 9:15 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் நேர்மறையாகவும் மிகவும் ஆற்றலுடனும் உணர்வீர்கள். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வியாபாரத்தில் முழு நம்பிக்கையுடன் முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும். வீட்டில் சில சுப காரியங்களைத் திட்டமிடலாம். உங்கள் காதல் உறவை முன்னோக்கி கொண்டு செல்லவும் நீங்கள் முடிவு செய்யலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இந்த பண்டிகை காலத்தில், உங்கள் வீட்டின் அலங்காரத்தை மாற்ற நீங்கள் திட்டமிடலாம். அலுவலக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பலனைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் இனிமையும் இருக்கும். வியாபாரிகள் தங்கள் எதிரிகளை தோற்கடித்து வெற்றி காண்பீகள். ஏதேனும் புதிய வேலைகள் திட்டமிடப்பட்டால், அதைச் செயல்படுத்துவதற்கு இந்த நேரம் சாதகமானது. அரசு ஊழியர்களின் வருமானம் உயரக்கூடும். உங்கள் நாளை சிறப்பானதாக மாற்ற, உங்கள் வாழ்க்கைத் துணை சில சிறந்த திட்டங்களைச் செய்யலாம். வானிலை மாற்றத்தால் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 41
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் விரும்பிய பலன்களைப் பெறலாம். உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தொழிலதிபர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும். இருப்பினும், மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் முக்கிய வணிக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் ஒரு வேலையுடன் சொந்தமாக சிறு தொழிலைத் தொடங்க விரும்பினால், யோசித்து முடிவெடுக்கவும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:55 மணி முதல் இரவு 8:50 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கும். நீங்கள் நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். இன்று எந்த வேலையை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு முன்னேற்றப் பாதைகள் திறக்கும். அலுவலகத்தில் உங்கள் பேச்சில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் காதல் துணையுடனான விரிசல் முடிவுக்கு வரும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலையுடன் ஓய்விலும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 7:50 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வேலை அழுத்தம் அதிகரிப்பதால், நீங்கள் சோர்வாகவும் சுமையாகவும் உணரலாம். பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் தொடர்பான கவலை அதிகரிக்கலாம். தொழிலதிபர்கள் சில முக்கிய நபர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் கண்டிப்பான அணுகுமுறை உங்களைத் தொந்தரவு செய்யலாம். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும்.கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல்நலம் மோசமடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டியிருக்கும். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், அது உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையான விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்தால் நல்லது. எந்தவொரு புதிய தொழிலிலும் முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம் அல்ல. அவசர அவசரமாக புதிய வேலை தொடர்பான திட்டங்களை வகுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் முழு கவனம் செலுத்தவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சுமுகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையைத் தவிர, இன்று உங்களுக்காக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உங்களின் நல்ல குணங்களை மற்றவர்கள் அதிகம் பாராட்டுவார்கள். தொழிலதிபர்கள் எந்த இலக்கை அடைவதிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக திடீர் பயணம் செய்ய வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். காதல் ஜோடிகள் தங்கள் உறவை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு கை அல்லது கால் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் காலை 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, பணம் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனை செய்வதையும் தவிர்க்கவும். இல்லையெனில், வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட உறவுகளில் பதற்றம் அதிகரிக்கலாம். நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். திட்டமிட்ட வேலைகள் முழுமையடையாததால் நீங்கள் அதிக எரிச்சலை உணரலாம். கவனக்குறைவால் உடல் நலம் கெடும் வாய்ப்புண்டு. நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்பு அமையும். உங்களைப் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் குடும்ப உறவுகளில் ஒருங்கிணைப்பைப் பேணுங்கள். தேவையற்ற சண்டைகளில் இருந்து விலகி இருங்கள். இன்று நீங்கள் மிகவும் கவனமாக பேச வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வேலை சுமூகமாக முடியும். நாளின் இரண்டாம் பகுதியில் வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அதிகமாக நம்ப வேண்டாம். இன்று உங்கள் பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்ககைத் துணையுடனான உறவில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். ஆரோக்கியத்தை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்களின் பதவி, கௌரவம் உயரும். கல்வித் துறையில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நீங்கள் சமீபத்தில் ஏதேனும் தேர்வு எழுதியிருந்தால், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலதிபர்கள் அதீத நம்பிக்கையுடன் முக்கிய வியாபார முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எப்போதும் தங்கள் முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. வீட்டில் நடந்து வந்த வாக்குவாதம் தீரும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், சில தடைகளை சந்திக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதால் நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். வீட்டின் தூய்மை மற்றும் அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பேச்சில் திறமையும் சாதுர்யமும் இருந்தால் அலுவலகத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரம் செய்ய திட்டமிட்டால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.அலுவலக அரசியலுக்கு நீங்கள் பலியாகலாம். உங்களைப் பற்றி ரகசியம் ஒன்று இன்று குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் வெளிப்படும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். உங்கள் காதல் விவகாரம் வெளிப்படுவதால் உங்கள் அன்புக்குரியவர்களின் அதிருப்தியை நீங்கள் சந்திக்க நேரிடும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











