Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 19 July 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்துவது நல்லது..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.00-10.00 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். சிறிய விஷயங்களை மனதில் கொள்ளும் உங்கள் பழக்கம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். உங்களுக்குள் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். வியாபாரிகள் பெரிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால், நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களின் முக்கியமான கோப்பு தொலைந்து போகலாம். அதனால், உங்கள் சில வேலைகளில் தடைகள் இருக்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தை சில பெரிய வெற்றிகளைப் பெறலாம்.உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில், உங்கள் கவனக்குறைவு உங்களுக்கு அதிக பிரச்சனையைக் கொடுக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8:50 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, அன்புக்குரியவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்களின் எளிமையான இயல்பு மற்றும் விவேகத்திற்காக நீங்கள் மிகவும் பாராட்டப்படுவீர்கள். நிதி பிரச்சனைகள் தீரும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட வேலைகளை முடிக்க முடியும். கூட்டு வியாபாரம் செய்ய வாய்ப்பைப் பெறலாம். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவியால் கடினமான காரியங்கள் மிக எளிதாக செய்து முடியும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். திருமண வாழ்வில் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். ரிஷப ராசி பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனை இருந்தால், கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, எதிர்மறை எண்ணங்கள் மறைந்து ஒரு புதிய நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலையை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வருமானம் உயர வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களின் தடைப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கும். இன்று உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலை தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டில் வயதானவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். திருமண வாழ்வில் நடக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் உங்கள் தந்தையின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கடினமான முடிவுகளை எடுப்பதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் நிதி நிலைமையை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வியாபாரிகளின் தற்போதைய வியாபாரம் வேகமாக முன்னேறும். கூட்டு வியாபாரம் செய்ய நீங்கள் திட்டமிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், உங்கள் மன அழுத்தம் குறையும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் காலை 9:55 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். வேலையுடன், ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு முறையான வழக்கம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. தொழிலதிபர்கள் அவசரமாக எந்த ஆவணத்திலும் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நல்ல செயல்திறனின் அடிப்படையில் தங்களுக்கான இடத்தை உருவாக்குவதில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் உங்கள் உறவு மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையின் வித்தியாசமான ரூபத்தைப் பார்ப்பீர்கள். தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகமாகச் சிந்திக்கும் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் நேரத்தின் பெரும்பகுதி பயனற்ற விஷயங்களில் வீணாகிவிடும். அதனால், உங்கள் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கும். மாணவர்கள் பெரியோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வணிகர்கள் ஆபத்தான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர வேண்டாம். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடன் பொழுதுபோக்கில் நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முன்பு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால், உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று திடீரென்று ஒரு பெரிய பிரச்சனை ஏற்படலாம். ஆனால், உங்கள் அறிவாற்றலாம் தீர்வு காண்பதில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் அதிகமாக தலையிடாதீர்கள். இல்லையெனில், உங்கள் நேரம் தேவையற்ற விஷயங்களில் வீணாகிவிடும். தொழிலதிபர்கள் சட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் நேரத்தைக் கண்காணித்து வேலையை விரைவாக முடிக்க முயற்சிக்கவும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசும்போது உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களின் மனதைப் புண்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் காணப்படும். இன்று உங்கள் உடல்நிலை சீராக இருக்காது. மருத்துவரை அணுகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 7:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இளைஞர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் உங்களின் கவனக்குறைவு எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். கடினமான காலங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். வணிகர்கள் புதிய ஆர்டரைப் பெறலாம். ஆனால் முழுமையடையாத வேலைகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் காதல் துணை உங்கள் மீதான அன்பை அதிகப்படியாக வெளிப்படுத்துவார். ஆரோக்கியத்துடன் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, கோபம் மற்றும் அவசரம் உங்கள் தற்போதைய வேலையைக் கெடுக்கும். எனவே, நீங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புதிய இடத்துக்குச் செல்லும் வாய்ப்பும், சுவாரசியமான தகவல்களும் கிடைக்கும். தொழிலதிபர்கள் பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். செல்வாக்கு மிக்க ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் பரபரப்பான வழக்கத்தின் காரணமாக, அன்புக்குரியவர்களுக்கு அதிக நேரம் கொடுக்க முடியாது. ஆனால் உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். சிறு விஷயத்துக்காக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியமாக இருக்க தினமும் யோகா, தியானம் மற்றும் திறந்த வெளியில் நடைபயிற்சி செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்களின் பலமே நீங்கள் திட்டமிட்டு எந்தவொரு வேலையையும் செய்வது நல்லது. நிதி விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலை நிமித்தமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அதனால், நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் பெற்றோர் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள். உங்கள் காதல் உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். ஆரோக்கியத்தைப் பொறுது்தவரை, தூக்கமின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வில் கலந்துகொள்ளத் தயாராகிவிட்டால், படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தொழிலதிபர்களின் பிரச்சனைகள் தொடரும். நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் கோபத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். வீட்டில் சில சுப காரியங்களைத் திட்டமிடலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு காதல் முன்மொழிவு வரலாம். தற்போதைய காலநிலை காரணமாக உடல்நிலையில் சில குறைபாடுகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, மனதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது இன்று தீர்ந்துவிடும். தவறான விஷயங்களை ஆதரிக்காதீர்கள். சிக்கிய பணம் கிடைக்காததால் ஏமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகள் தங்களை எதிரிகளை தோற்படித்து வெற்றி காண்பார்கள். புதிய வேலையைத் தொடங்க சாதகமான நாள். அலுவலகத்தில் வேலை விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று ஒரு சிறிய தவறும் உங்களுக்கு அதிக விலை கொடுக்கலாம்.
குடும்பத் தகராறுகள் உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். நீங்கள் பிரச்சினையை அமைதியாக தீர்க்க முயற்சி செய்யவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். உங்கள் துணைக்கு கூடுதல் நேரம் கொடுக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். உணவில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











