Today Rasi Palan 14 June 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 14 June 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.30-10.30 மணி வரை. மாலை 4.30-5.30. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, தொழிலதிபர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுக்கு புதிய யோசனைகளை வழங்க அல்லது உங்கள் இலக்குகளை நோக்கி தைரியமான நடவடிக்கைகளை எடுக்க இது சிறந்த நேரம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் பொறுமை மற்றும் புரிதலைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தனிமையில் இருப்பவர்கள் புதிய நபரைச் சந்திக்கலாம். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவது உங்கள் உறவுவை வலுப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் காலை 11:00 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உங்களின் நேர்மறை சிந்தனையும், விடாமுயற்சியும் இன்று வேலையில் உங்களின் மிகப் பெரிய மாற்றதிற்கு காரணமாக இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்த்து, நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் செயல்திறனை நண்பர்களும் குடும்பத்தினரும் மிகவும் பாராட்டுவார்கள். உங்கள் உறவுகளை வலுப்படுத்த வேண்டுமெனில், குடும்பத்தாருடன் சிறப்பாக நேரத்தை ஒதுக்குங்கள். மாணவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் வருங்கால துணையைச் சந்திப்பதற்கு இன்று வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களின் நட்பு வட்டாரத்தால் சிறந்த பயனடைவீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. குடும்ப பொறுப்புகளில் நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ள இளையோர் மீது கூடுதல் கவனம் செலுத்தவது நல்லது. உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி மேலோங்கும். தேவையற்ற விஷயங்களுக்கு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பது ந்லலது. நீங்கள் தனிமையிலிருந்தால், திருமணம் பற்றி உங்கள் துணையிடம் பேச இன்று சிறந்த நாள்,

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவதில் கவனம் செலுத்த இன்று நல்ல நாள். உங்களைப் பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பதைப் பிறரிடம் கொடுக்காதீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலம் மகிழ்ச்சி மேலோங்கும். உங்கள் காதல் வாழ்க்கை அமைதியாகவும், சிறப்பாகவும் மாறும். உங்கள் துணையுடன் வெளியே செல்ல இன்று திட்டமிடலாம். இது உங்களுக்கிடையே உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது உங்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பாக பிரதிபலிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் நேர்மறை ஆற்றலை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவர்களின் உயர் கல்வி தொடர்பான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நற்செய்தியைப் பெறலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் வருங்கால துணையை இன்று சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் உடல்நலத்தின் மீது கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறந்த நாளாக அமையும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு உங்கள் சொந்த முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வி தொடர்பாக எதிர்கொண்ட பிரச்சனைகள் இன்று முடிவிற்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்ம். நீடித்து வரும் பிரச்சனைகளைத் தீர்க்கவும், இணக்கமான வீட்டுச் சூழலை உருவாக்கவும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது உங்கள் உடல்நலத்தில் சிறந்த மாறுதலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இக்கட்டான சூழலை சிறப்பாக கையாளும் உங்களின் வல்லமையால் அனைவரும் சுலபமாக கவர்ந்து விடுவீர்கள். நல்லிணக்கம் மற்றும் சமநிலையை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவைப்படும் பாடங்களில் உதவியை பெறலாம். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சீராகவும் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் உங்கள் உறவுகளை வலுப்படுத்த அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே,உங்கள் தொழிலில் நீண்ட காலமாக எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய இன்று சிறந்த நாள். உங்கள் தன்னம்பிக்கை எந்த தடைகளையும் கடக்க உதவும். ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதற்கு சமநிலை முக்கியமானது. உதவி தேவைப்படும் பாடங்களில் யோசிக்காமல் உதவி கேளுங்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இன்று சிறந்த நாள். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் துணையைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையைப் பற்றிய முக்கிய முடிவு எடுக்க இது சிறந்த நேரம். உங்கள் நேர்மறையான அணுகுமுறை உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நேர்மறை மாற்றம் உண்டாகும். உங்கள் நேர்மறை ஆற்றல் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்களைப் பற்றிய சிறப்பாக நினைவுகளை உருவாக்க உதவும். உங்கள் காதல் வாழ்க்கை உற்சாகமானது. நீங்களும் உங்கள் துணையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல திட்டமிடலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் காதல் வாழ்க்கையை விரைவில் தொடங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் மனஉறுதியும் ஒழுக்கமும் இன்று உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குடும்ப வாழ்க்கைத் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான மாலை பொழுதை செலவிட திட்டமிடுங்கள். அங்கு நீங்கள் கவனச்சிதறல்கள் இல்லாமல் ஒருவருக்கொருவர் முழுமையாக நேரத்தை செலவிட முடியும். தனிமையில் இருப்பவர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் காலை 10:00 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்களின் எதிர்காலம் பற்றிய புதிய யோசனைகள் மற்றும் திட்டங்களை ஆராய இது சிறந்த நேரம். மாணவர்கள் உதவி தேவைப்படும் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சீராகவும் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் உங்கள் உறவுகளை வலுப்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்தவும். உங்கள் காதல் வாழ்க்கை இணக்கமாகவும் நிறைவானதாகவும் இருக்கும். மனம் திறந்து பேசி உங்கள் எண்ணங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையிலிருப்பவர்கள் புதிய நபரை சந்திக்க வாய்ப்பு வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்களின் புதிய திட்டங்கள் மற்றும் யோசனைகளை ஆராய இது சிறந்த நேரம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சியுங்கள். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழல் நிலவும். வீட்டில் பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து நடப்பது நல்லது. அவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தவும். உங்கள் காதல் வாழ்க்கை அமைதியானதாகவும், நிறைவானதாகவும் இருக்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:00 - காலை 7:00 மணி

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, June 14, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion