Today Rasi Palan 13 July 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கக்கூடும்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 13 July 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் இருக்கும். தொழிலதிபர்கள் பெரிய அளவில் வணிகம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இன்று ஏற்ற நாள். உங்களின் செயல்திறன் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வரலாம். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் நிலவும் பதற்றம் குறையும். உங்கள் நடத்தையை மென்மையாக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதன் விளைவு உங்கள் ஆரோக்கியத்திலும் தெரியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண் 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, நேர்மறையாக இருந்து, கடினமாக உழைத்தால் விரைவில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று சாதகமான நேரம். கல்வி தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல நிதி பலன்கள் உண்டாகும். பணப்பற்றாக்குறையால் தடைபட்ட பணிகள் முடிவடையும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் கடினமான வேலைகள் குறித்த நேரத்தில் முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். உங்கள் மன அழுத்தம் குறைந்து, நன்றாக உணருவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சில பழைய நோய்கள் மீண்டும் தோன்லாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, சில முக்கியமான காரியங்களைச் செய்து முடிப்பதற்காக நீண்ட நாட்களாக கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால், அது இன்று நிறைவேற வாய்ப்புள்ளது. நாளின் இரண்டாம் பகுதியில் நிதி ஆதாயம் கூடும். வியாபாரத்தில் புதிய உறவுகள் உருவாகும். எதிர்காலத்தில் சரியான பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அதிகமான வேலை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால், அமைதியான மனதுடன் செயல்பட வேண்டும். உங்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதில் உங்கள் குடும்பத்தினரின் உதவியைப் பெறுவீர்கள். உங்கள் காதல் துணையிடம் திருமணத்திற்கு முன்மொழியலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதையும் பழக்கப்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, மற்றவர்கள் சொல்வதை கேட்டு எந்த வேலையும் செய்யாதீர்கள்.ள மாறாக உங்கள் சொந்த முடிவுகளைச் சிந்தனையுடன் எடுங்கள். தேவையில்லாத சிலருக்கு உதவுவதன் மூலம் நிம்மதி அடைவீர்கள்.
தொழிலதிபர்கள் நம்பிக்கையுடன் செய்யும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஆனால், இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துங்கள். இது உங்கள் பெயரைக் கெடுத்துவிடும். வீட்டில் யாரேனும் திருமண வயதில் இருந்தால் அவர்களது திருமணம் பற்றி விவாதிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். வேலையில் அதிக சுமைகளை ஏற்காதீர்கள். இல்லையெனில், ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்றைய தினம் விவாதத்திலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில், உங்கள் பொன்னான நேரம் பயனற்ற விஷயங்களில் வீணாகிவிடும். உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, சிறந்ததை கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கடின உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். வியாபாரிகளின் பணம் சிக்கியதால் மனக்கவலை அதிகரிக்கலாம். எதிர்காலத்தில் நிதி பரிவர்த்தனைகளைப் புத்திசாலித்தனமாக செய்யுங்கள். உத்தியோகஸ்தர்கள் அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். உங்கள் தவறுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். கோபத்திலும் அவசரத்திலும் எதையும் குறைவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தோள்பட்டை தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 8:55 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிந்து பெரும் நிம்மதி கிடைக்கும். உங்கள் வேலை திறனை மேம்படுத்த, உங்கள் தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தொழிலதிபர்களின் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைப்பதால் தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். இன்று உங்கள் உணர்வுகளை உங்கள் அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையில் அதிக மன அழுத்தத்தை எடுக்க வேண்டாம். கடினமாக உழைத்து, உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, வேலை சம்பந்தமான உங்கள் அனைத்து கவலைகளும் நீங்கும். நீங்கள் சில பெரிய சாதனைகளை அடையலாம். குழந்தைகளிடம் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வியாபாரிகளின் வங்கி சம்பந்தமான ஏதேனும் வேலை தடைபட்டிருந்தால் உங்கள் பிரச்சனைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையை முழு ஆர்வத்துடன் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் தொடர் முயற்சியால் காதல் வாழ்க்கை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற பிடிவாதம் மற்றும் ஈகோ உங்கள் உறவுகளைக் கெடுக்கும். இன்று நிதி விஷயங்களில் கவனக்குறைவால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் வழியில் சில தடைகள் இருக்கலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்கள் நிலைப்பாட்டை நம்பிக்கையுடன் முன்வைக்க வேண்டும். குடும்ப உறவுகளில் அன்பையும் இனிமையையும் பராமரிக்க உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். உங்களது இந்த சந்திப்பு மறக்க முடியாததாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிய வேண்டுமெனற் கனவில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்படலாம். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பெரிய மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மரியாதையைப் பேணுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாக வரும். இன்று நீங்கள் எந்த பிரச்சனையையும் முழு தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வீர்கள். செலவுகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தலாம். தொழிலதிபர்கள் நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கவனமாக இருங்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் எந்த முடிவும் உங்களுக்கு சரியானதாக இருக்கும். உங்கள் தவறுக்கு அன்புக்குரியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விஷயத்தை முடிக்க முயற்சியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். உடல்நலத்தைப் பற்றி பேசினால், குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக நீங்கள் மிகவும் பலவீனமாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, வேலை தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு, நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவரை அணுக வேண்டும். பழைய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள். தொழிலதிபர்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், அதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இன்று, உங்கள் மேற்பார்வையில் அனைத்து வேலைகளையும் செய்யுங்கள். பெற்றோரின் முழு ஆசியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, வேலை தொடர்பான ஏதேனும் பிரச்சனை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். இளைஞர்கள் தங்கள் தொழில் மற்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். வியாபாரிகளுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். முக்கிய வணிக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்ல முயற்சிக்கவும். இல்லையெனில், உங்கள் முதலாளி இன்று உங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி வீட்டுச் சூழல் மேம்படும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தொண்டையில் தொற்று ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 12 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, July 13, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion