Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 09 August 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஆகஸ்டு 09ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 12.15-1.15 மணி வரை. மாலை 4.45-5.45 ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்கள் நாளுக்கான திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். வேலையில் அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். நேர்மறையாக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இளைஞர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் திட்டம் தீட்டலாம். நிலுவையில் உள்ள பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருந்து வந்த பதற்றம் நீங்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் மோசமான மனநிலையில் இருப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தினமும் தியானம் செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, பண பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக செய்யுங்கள். அலட்சியத்தால் இழப்பு ஏற்படலாம். குழந்தைகளால் சுபச் செய்திகள் கிடைத்து வீட்டில் கொண்டாட்டமான சூழல் நிலவும். நீண்ட நாட்களுக்குப் பிறகு திடீரென்று பழைய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். நீங்கள் பெரிய தொழிலதிபராக இருந்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் முழு ஆற்றலுடன் பணியில் ஈடுபடுவார்கள். அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். உங்கள் நடத்தையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால், சிறப்பு வாய்ந்த ஒருவரை சந்திக்கலாம். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்கள். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வீட்டில் அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். பாதகமான சூழ்நிலைகளில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவசரத்தில் எடுக்கும் நடவடிக்கை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கலாம். நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்ப பிரச்சளனைகளைப் பற்றி விவாதிக்கும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பலவீனமாகவே இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலைப்பளு காரணமாக மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்:43
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:50 மணி முதல் மாலை 3:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பையும் முயற்சியையும் தொடருவீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்கவும். உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளை மதிக்கவும். நெருங்கியவர்களுடன் தகராறு ஏற்படலாம். வியாபாரிகள் தங்கள் வருமானத்தை மனதில் வைத்து எந்த முக்கிய முடிவையும் எடுப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து மதிப்புமிக்க பரிசைப் பெறலாம். நல்ல ஆரோக்கியத்திற்காக, சீரான உணவுப் பழக்கத்துடன், உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்கள் உங்கள் வேலையைப் பாதிக்க விடாதீர்கள். இல்லையெனில் அது கடினமாகிவிடும். நேர்மறையான அணுகுமுறை கொண்ட ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் மாறலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டதில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் சிறிய தவறுகளால் உயர் அதிகாரிகள் உங்கள் மீது அதிருப்தி அடைவார்கள். உங்கள் வேலையை கவனமாக செய்ய வேண்டும். உங்கள் சொந்த விஷயங்களில் வெளியாட்கள் அதிகம் தலையிட அனுமதிக்காதீர்கள். இல்லையெனில், நிலைமை மோசமாகிவிடும். திருமணமானவர்கள் வீண் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, எதிரிகள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் தடைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். ஆனால், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நிலுவையில் இருந்த பணத்தை திரும்பப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிக வேலை அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ப மட்டுமே வேலை செய்யுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது உங்களுக்கு நல்லதல்ல.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேற முயற்சி செய்யுங்கள். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் வெற்றியடையும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். காலப்போக்கில், உங்கள் நடத்தையில் சில நெகிழ்வுத்தன்மையைக் கொண்டு வர வேண்டும். வணிகர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களுக்கு பிரச்சனையை உருவாக்கலாம். அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வீட்டில் குழப்பமான சூழல் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகமாக கவலைப்படுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உறவுகளில் நிலவும் மனக்கசப்புகள் நீங்கி ஒருவரையொருவர் ஆதரிப்பீர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும், உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் செலவுகளுக்கும் வருமானத்திற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்கவும். தொழிலதிபர்கள் நிதி விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத் தொழிலுடன் தொடர்புடையவராக இருந்தால் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணி சுமூகமாக முடியும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, மன அழுத்தம் இல்லாமல் உங்கள் முக்கியமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பெரியவர்களிடம் விவாதம் நடக்கும். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் பரபரப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் அழுத்தம் அதிகரிக்கும். இன்று மேலதிகாரியும் உங்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுவது உங்கள் உறவுகளை மேம்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன் வைக்கலாம். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். சுப காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்கலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் வரி தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம். அலுவலகத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வீட்டின் அலங்காரத்தை மாற்றும் திட்டம் இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மென்மை இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் அன்றாட வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் சரியானது என்பதை நிரூபிக்கும். இந்த சூழ்நிலையில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக தலங்களில் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு சவால்கள் இருந்தபோதிலும், உங்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். வீட்டின் பெரியவர்கள் உங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். பிரச்சனையை அமைதியாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலை வலி பிரச்சனையால் அவதிப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 10 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் சவால்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுங்கள். பண விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தடைப்பட்ட வணிகத் திட்டத்தில் வேலையைத் தொடங்க இன்று சாதகமான நாள். உத்தியோகஸ்தர்கள் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுப் பொறுப்புகளைச் சரியாகச் செய்யாததால் தந்தையின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருங்கள். இல்லையெனில், சிறிய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8:15 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











