Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
Today Rasi Palan 08 September 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பேசும் போது கவனமா இருக்கணும்..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு செப்டம்பர் 08ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று சில புதிய இடங்களுக்கு செல்வீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிப்பதன் மூலம் உங்கள் கவலைகள் நீங்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய வருமானம் கிடைக்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, அதிக கவலை மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவீர்கள். மாணவர்களுக்கு இன்று சிறப்பாக இருக்காது. கடின உழைப்பு இருந்தும் எதிர்பார்த்தபடி பலன் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உள்ளோரிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கல்லீரல் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், உணவில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமான வேலைகளைச் செய்யும்போது அவசரப்பட வேண்டாம், இல்லையெனில் உங்கள் தவறு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று வீட்டில் உள்ளோருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், சிந்திக்காமல் பெரிய செலவு செய்யாதீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். உங்கள் நடத்தையை மென்மையாக்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று காது சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் வேலையை விடாமுயற்சியுடன் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் எந்த ஒரு வேலையும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், இன்று அது முடிவடையும். பணி தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீட்டு சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் எந்த நாள்பட்ட நோயும் மோசமடையக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு தொழில் சுமூகமாக நடைபெறும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் தொந்தரவு செய்தால், சற்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வேலையை முழு ஆற்றலுடன் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தை ஏற்படுத்தாதீர்கள். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்நிலையில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும், இல்லையெனில் உங்கள் வேலை கெட்டுவிடும். குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைகள் உங்களை வருத்தப்படுத்தலாம். இன்று நீங்கள் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவையான விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும் இருப்பீர்கள். இதன் விளைவாக அலுவலகத்தில் வேலைகளை இருமடங்கு வேகமாக செய்து முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று சிறப்பாக இருக்கும். உங்களால் முடிந்ததைச் செய்தால், நீங்கள் நிச்சயமாக விரும்பிய முடிவைப் பெறுவீர்கள். வீட்டின் பெரியவர்கள் உங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காதல் வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் வேலை தொடர்பான பயணங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். பணியிடத்தில் அதிகமாக கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். எந்த முடிவும் எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உங்கள் அன்புக்குரியவர்களின் கருத்தை அறிந்து கொள்வதும் முக்கியம். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவு உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கலாம். செய்யும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். வேலை சம்பந்தமாக மேற்கொள்ளும் உங்கள் பயணம் நல்ல ஆதாயத்தைத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்கள் குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் சில புதிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். வியாபாரிகளின் பணம் சிக்கியிருக்கலாம். இதனால் பணம் தொடர்பான கவலைகள் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதைத் தவிர்க்கவும். இதன் காரணமாக நீங்கள் பல சிறிய தவறுகளை செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகுந்த உடல் பலலவீனம் மற்றும் சோர்வை உணரலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஒப்படைத்த வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களிடையே மனக்கசப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications