Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
Today Rasi Palan 03 July 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்கணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 03ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று தேவைப்படும் சிலருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் பெரியவரின் வார்த்தைகள் உங்களை மிகவும் ஊக்குவிக்கும். எத்தகைய கஷ்டங்களையும் முழு தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். தொழிலதிபர்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள். உங்கள் பணி தற்காலிகமானது என்றால், நீங்கள் அதை நிரந்தரமாக்கலாம். வீட்டில் சாதகமான சூழல் இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்ற குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் ஜோடிகளுக்கு இடையே அன்பும், காதலும் அதிகரிக்கும். உங்கள் துணையிடமிருந்து அழகான பரிசைப் பெறலாம்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்:42
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் காலை 9:55 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்திருந்தால், நல்ல பலன்களைக் காணலாம். குடும்ப சூழ்நிலையில் இனிமை அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வார்த்தைகள் உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதைப் புண்படுத்தும். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். மேலும், உங்கள் ஆர்வங்களில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்ய இன்று ஏற்ற நாள். இன்று நீங்கள் தனிமையில் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். தொழிலதிபர்கள் ளபுதிய வணிக உறவுகள் உருவாகலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் சோம்பேறித்தனத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் வரலாம். குழந்தைகளின் கல்வி சம்பந்தமான கவலைகள் அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் பாசமும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டாம். இல்லையெனில், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, எத்தகைய சிரமங்களையும் எதிர்கொள்ளும் அனுபவமும் திறமையும் உங்களிடம் உள்ளது. நம்பகமான நபர் ஒருவர் உங்களுக்கு துரோகம் செய்யலாம். எனவே, தேவைக்கு மேல் யாரையும் நம்பாதீர்கள்.
தொழிலதிபர்களுக்கு வேலை தொடர்பான பயணங்கள் சாதகமாக இருக்கும். உங்களுக்கு சில புதிய வேலைகள் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான நேரமிது. நீங்கள் விரும்பும் முடிவுகளைப் பெற கடினமாக உழைக்கவும். இன்று சில குடும்பப் பிரச்சனைகள் தீரும். பெற்றோருடனான உறவு மேலும் வலுவடையும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரம் கொடுக்க முயற்சியுங்கள். இல்லையெனில் உங்களுக்கிடையே இடைவெளி ஏற்படலாம். உங்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகவும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். மேலும், உங்கள் ஆளுமையும் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவதற்கு சாதகமான நாள். தொழிலதிபர்கள் கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் திட்டமிட்டபடி உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்த தவறான புரிதல்கள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலைப்பளு காரணமாக மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:50 மணி முதல் இரவு 7 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் நடத்தையில் சில நெகிழ்வுத்தன்மையைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் ஒரு முடிவை எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். நீண்ட நாள் குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பது உங்கள் கவலைகளை நீக்கும். தொழிலதிபர்களின் சில முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்படலாம். நம்பகமானவர்களுடன் கலந்தாலோசிக்கவும். உத்தியோகஸ்தர்கள் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள். இல்லையெனில், நீங்கள் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர் வேலை காரணமாக தலைவலி, உடல்வலி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, எதிர்பாராத தோல்வியால் இன்று நீங்கள் சற்று வருத்தம் அடைவீர்கள். ஆனால், விடா முயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். சொத்து சம்பந்தமான வேலைகளைச் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இடம் மாற்றத்திற்கான வாய்ப்பும் உள்ளது. வீட்டு உறுப்பினர்களிடம் பேசும்போது கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், தேவையற்ற சண்டைகள் வரலாம். உடல்நலம் பற்றி பேசினால், முதுகு அல்லது தோள்பட்டை வலி இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் பெரிய வெற்றியை அடைய முடியும். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தடைப்பட்ட லாபம் கிடைக்கும். முக்கியமான ஆவணங்களை அவசர அவசரமாக செய்ய வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவியால் எந்தவொரு கடினமான காரியமும் குறித்த நேரத்தில் முடிவடையும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை கோபமாக இருந்தால், அவரை சமாதானப்படுத்த இது நல்ல நாள். இன்று உடல்நிலை குறித்து கவலைகள் இருக்கும். மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நிலைமை மோசமாகிவிடும். வேலை அடிப்படையில், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு பெரிய வாய்ப்பு கைகூடும். நிதி இழப்பு சாத்தியமாகும். அலுவலகத்தில் உங்கள் அலட்சியம் மேலதிகாரியை வருத்தமடைய செய்யும்.
வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை அறிய முயற்சியுங்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. உடல்நலம் குறித்த கவனக்குறைவு பெரும் சிக்கலுக்கு காரணமாகும். உங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் முழு கவனம் உங்கள் இலக்கில் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். கடின உழைப்பில் இருந்து பின்வாங்க வேண்டாம். நெருங்கிய ஒருவருடனான தகராறு உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய புதிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வீட்டில் நடக்கும் சிறிய விஷயங்களை மனதில் கொள்ளும் உங்கள் பழக்கம் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டையில் ஒருவித தொற்று ஏற்படலாம். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் இன்று உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் குடும்பப் பிரச்னைகள் குறித்து விவாதக்கலாம். உங்கள் முக்கிய முடிவுகளில் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வணிகர்கள் கடின உழைப்பின் பலனாக பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். உயர் அதிகாரிகளுடன் வேலை தொடர்பான முக்கிய விவாதங்கள் நடைபெறலாம். தந்தையினால் அனுகூலம் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உதவியால் உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 10:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் இடைவெளியை வளர விடாதீர்கள். முடிந்தால், இன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சியுங்கள். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். பெரிய அளவில் கொள்முதல் செய்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் சம்பாதிப்பதோடு, பழைய கடனை அடைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் முக்கியமான வேலையைச் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். காதல் ஜோடிகள் மனதிற்கு பிடித்த இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக மீன ராசியை சேர்ந்த பெண்கள் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:50 மணி முதல் மாலை 4 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











