Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 03 August 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்கணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஆகஸ்டு 03ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்கள் வார்த்தைகளும் நடத்தைகளுமே உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இன்று இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வேலை காரணமாக அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். பொருளாதார நிலை வலுப்பெறும். தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு அமையும். நீங்கள் ஒரு செல்வாக்கு மிக்க நபரை சந்திக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நொறுக்குத் தீனிகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நாள்பட்ட வயிறு தொடர்பான நோய்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று சாதகமான நேரம். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்தவொரு முக்கியமான வேலையும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால் உங்கள் முயற்சியால் அதை முடிக்க முடியும். நல்ல ஆரோக்கியத்திற்காக உங்கள் தினசரி வழக்கத்தைப் பராமரிக்கவும். தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதிகமாக யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சம்பந்தமாக சில பிரச்சனைகள் வரலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை உடனடியாக கவனித்து உங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தலைவலி பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பழைய விஷயங்களை மறந்துவிட்டு புதிதாக தொடங்க முயற்சி செய்யுங்கள். அண்டை வீட்டாரோடு அல்லது உறவினரோடு தகராறு ஏற்படலாம். கோபத்திலும் ஆத்திரத்திலும் எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்கவும். வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் வேலை வேகமடையும்.
உத்தியோகஸ்தர்கள் முக்கியமான வேலைகளைச் செய்யும்போது அதிக அவசரம் வேண்டாம். குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முதுகு அல்லது இடுப்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம். தொடர்ந்து நீண்ட உட்கார்ந்தபடியே வேலை செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் காலை 8:55 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, பணிச்சுமை அதிகரிப்பதால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்து, உங்கள் வேலையை அமைதியான மனதுடன் செய்ய முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்ய இது சரியான நேரம். வேலை தேடுபவர்கள் முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டியிருக்கும். உங்கள் தற்போதைய வேலையை மாற்ற விரும்பினால், இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். உடன்பிறந்தோருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். சண்டைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உணவு விஷயத்தில் உங்களின் கவனக்குறைவால், உடல்நலம் கெடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, வீட்டுப் பொறுப்புகளை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் மீது அதிக அழுத்தம் எடுத்து கொள்ளதீர்கள். வேலை தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். எதிர்மறை உணர்வு அதிகரிக்கலாம். திடீர் பெரிய செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். வியாபாரிகள் மீது உங்களின் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் குழுப்பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் அமைதி நிலவும். காதல் உறவு வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சோம்பலைத் தவிர்க்க, தினமும் லேசான உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை
கன்னி
கன்னிராசிக்காரர்களே, பழைய எதிர்மறையான விஷயங்களை மறந்துவிட்டு புதியதைத் தொடங்குங்கள். இல்லையெனில், உங்கள் நெருங்கிய உறவுகளில் சிலவற்றில் விரிசல் ஏற்படலாம். வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ உங்கள் நடத்தையை கண்ணியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக கோபம் கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நிதி விஷயங்களில் அவசரம் வேண்டாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதையும் தீவிரமாக எடுத்து செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்காததால், உயர் அதிகாரிகள் உங்கள் மீது மிகுந்த மனவருத்தத்துடன் இருப்பர். வீட்டில் திருமண வயதில் யாரேனும் இருந்தால்,அவர்களது திருமணம் பற்றி வீட்டில் விவாதிக்கலாம். உங்கள் குழந்தைகளின் சாதனைகளை நினைத்து மிகவும் பெருமைப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மந்தமாகவும் பலவீனமாகவும் உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரைப் பற்றிய ஏதாவது விஷயம் உங்களை வருத்தப்படுத்தலாம். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பிரச்சனை வரும்போது பயம் கொள்ளாமல், தைரியமாக எதிர்கொள்ளுங்கள். நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். இல்லையெனில் எதிர்காலத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்காது. வேலையின் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை விட்டு விலகி இருப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, பணம் விஷயத்தில் அதிகமாக அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வேலை சம்பந்தமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் உள்ள ஒருவரது உடல்நலம் குறித்த கவலைகள் இருக்கும். புதிய வணிகத் திட்டத்தில் வேலை தொடங்குவதற்கு இன்று சாதகமான நாள். உங்களின் நிதிப் பிரச்சனை தீரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் தவறுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் இருக்கும். உங்களின் முக்கிய முடிவுகளில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வேலையுடன் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, பிறர் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள். இல்லையெனில், வீண் விஷயங்களில் நேரத்தை வீணடிப்பீர்கள். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் பெரிய முன்னேற்றம் அடையலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணப்பற்றாக்குறையால் வியாபாரிகளின் சில வேலைகள் இன்று பாதியில் நிற்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீங்கள் அதை சரியான முறையில் செய்ய முயற்சி செய்ளவும். வீட்டுச் சண்டை சச்சரவுகள் நீங்கி, வீட்டில் சூழ்நிலை மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோள்பட்டை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்களுக்கு சமூகப் பணிகளில் பெரும் பங்களிப்பு இருக்கும். அதனால், உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். பெரிய முடிவுகளைச் செயல்படுத்த உங்கள் தந்தையின் உதவியைப் பெறலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் நிதி நிலை மோசமடையலாம். வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.
சரியான நேரத்தில் அலுவலகத்தை சென்றடைய முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடனான மனக்கசப்பு நீங்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் ஒருங்கிணைப்பு மோசமடையலாம். உங்கள் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் சில புதிய நண்பர்களைப் பெறலாம். வேலை சம்பந்தமான எந்த முடிவையும் அவசரத்தில் எடுக்காதீர்கள். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படும். உங்களின் பெருந்தன்மையை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருங்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல நாள். உத்தியோகஸ்தர்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவு மேலும் வலுவடையும். காதல் உறவு ஆழமாகும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவதற்கு இன்று மிகவும் சாதகமான நாள். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட உங்களின் வேலையும் முடியும். உங்கள் முக்கியமான முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான வேலையை ஒப்படைத்திருந்தால், அதைப் பற்றி பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். வீட்டில் குழப்பமான சூழல் இருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். உடல்நலக் குறைவு காரணமாக உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











