ஆகஸ்ட் மாதம் இடம் மாறும் கிரகங்கள்.. ராஜயோகத்தை கொண்டாட போகும் ராசிகள் யார் யார்?

ஜோதிட படி, ஆகஸ்ட் மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதத்தில் நடக்கப் போகிறது.

வேத சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை மாற்றுகிறது.
இந்த ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நடைப்பெறும். இந்த நிகழ்வைதான் நாம் ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்று அழைக்கிறோம்.

these Rasi people will get Rajayoga due to these planets transit on August month 2024

ஆகஸ்ட் மாதம் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்களின் ராசிகளை மாற்றப் போகிறது. இதனால் பல சுப யோகங்களும் உண்டாகும்.. அதில் குறிப்பாக புதாதித்ய ராஜயோகம், சமசப்தம யோகமும் உருவாகும். அதனுடன் திரிகிரஹி யோகமும் உண்டாகும். ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படப் போகும் கிரகங்களின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் ராஜயோகமும் கிடைக்க போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சூரியன்

சூரியன் தந்தை, மகிழ்ச்சி, செழிப்பு, கண்ணியம், ஆகியவற்றின் காரணிகளாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். அதன்படி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 7:35 மணிக்கு கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் சிம்மத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை நடைபெற்று திரிகிரஹி யோகத்தை உண்டாக்கும். இந்த ராசியில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை இருக்கும்..

செவ்வாய்

ஆகஸ்ட் மாதம், செவ்வாய் தனது ராசியையும் மாற்றுவார். அதன்படி செவ்வாய் ஆகஸ்ட் 26, 2024 அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

புதன்

புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். ஆகஸ்ட் 5ஆம் தேதி 2024 அன்று, புதன் சிம்ம ராசியில் வக்கர பெயர்ச்சி அடைந்து பின்னர் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று மீண்டும் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். பிறகு ஆகஸ்ட் 29 ஆம் தேதி புதன் முன்னேக்கி பயணிப்பார்.

சுக்கிரன்

ஆகஸ்ட் மாதம் பிறப்பதற்கு முன்னதாக ஜூலை 31ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். பின்னர் சுக்கிரன் தனது பயணத்தை சிம்மத்தில் நிறுத்தி ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி தொடங்குவார். சுக்கிரன் இந்த ராசியில் 25 நாட்கள் பயணிப்பார்.

இதில் சூரியன் மற்றும் புதனின் ராஜயோகம் மிகவும் மங்களகரமானது மற்றும் சக்தி வாய்ந்தது. அதனால் பயன் பெறும் ராசிகளைப் பற்றி பார்க்கலாம்..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன்-புதன் புத்தாதித்ய ராஜயோகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. ஏனெனில் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புத்தாதித்ய ராஜயோகம் அமைகிறது. இதனால் அவர்களுக்கு தொழில், அதாவது வியாபாரத்திற்கு இது நல்ல நேரம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாக தந்தையுடனான இருந்து வந்த தவறான மோதல் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.. நினைத்தது எல்லமே நடக்குமாம்.. மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல எண்ணப் பரிமாற்றம் இருக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்...

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் நல்ல பலன்களைத் தரும். நீங்கள் விரும்பியபடி சொத்து வாங்க வாய்ப்புள்ளது. வேலைத் துறையில் நல்ல செய்திகள் வந்து சேரும்.. முதலீட்டிற்கு ஏற்ற நல்ல காலம்.. வியாபாரத்தில் லாபம் பெருகும்..மேலும் பழைய முதலீடுகள் மூலம் நேரடி லாபம் பெறுவீர்கள்.. குடும்பத்தில் திருமணம் நடக்கும்.. வருமானம் பெருகும்..

துலாம்

துலாம் ராசியினருக்கு சூரியன்-புதன் புத்தாதித்ய ராஜயோகம் நல்ல பலனைத் தரப்போகிறது. தொழிலுக்கு நல்ல நேரம், பண நிலையும் சாதகமாக இருக்கும். வராத கடன் வந்து சேரும்.. வராத உறவினர்களும் நணபர்களும் வந்து சேர்ந்துக் கொள்வார்கள் அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.. உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். மொத்தத்தில், உங்களுக்கு பெரிய காலம் வரப் போகிறது. நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று இந்த ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கும்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, July 30, 2024, 10:45 [IST]
Desktop Bottom Promotion