Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
Taurus Horoscope 2025: வருகிற 2025 ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரப்போகுது...
Taurus Horoscope 2025 In Tamil: 2025 ஆங்கிலப்புத்தாண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவகிரகங்களின் பயணத்தாலும் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பிறக்கும் போதே கிரகங்களின் பயணம் உங்களின் பண வருமானத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். ஜென்ம குருவின் பயணமும் பார்வையும் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. தொழில் ஸ்தானத்தில் உள்ள சனி பகவான் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனை தரப்போகிறார். லாப ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தான கேதுவும் உங்களின் வருமானத்தை பல மடங்காக அதிகரிக்கப் போகின்றனர்.

கிரகப்பெயர்ச்சிகள்
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் ஏப்ரல் மாதம் முதல் லாப ஸ்தானமான 11ஆவது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரை உங்கள் ராசியிலும் அடுத்த 6 மாதங்கள் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 3வது வீடுகளில் பயணம் செய்யப்போகிறார். ராகு கேது பெயர்ச்சி மே மாதம் நிகழப்போகிறது. 11ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு பகவான் 10ஆம் வீட்டிற்கும் 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது சுக ஸ்தானமான 4வது வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
குடும்ப வாழ்க்கை
ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குடும்ப குரு உங்கள் வாழ்க்கையில் குதூகலத்தை ஏற்படுத்துவார். தம்பதியரிடையே மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும்.
பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் வீடுகளின் மீது விழுவதால் நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை, தொழில்
உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வரப்போகும் சனிபகவான் தொழில் வருமானத்தை அதிகரிப்பார். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக அமையப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். முதலீட்டாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் அதிகரிக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
நிதி நிலைமை
குரு பகவான் அக்டோபர் மாதம் அதிசாரமாக உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்காகவும், தொழில் தொடங்கவும் முயற்சி செய்யலாம். திருமண சுப காரியங்கள் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு கை கூடி வரும்.
ஆண்டு முழுவதும் குரு பலன் உள்ளதால் உங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவானின் பார்வை ஆண்டின் இறுதியில் 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் வருமானம் பல மடங்காக அதிகரிக்கும். கை நிறைய பணம் வந்து கொண்டே இருக்கும்.
பெண்கள்
2025 ஆம் ஆண்டில் சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். நினைத்த காரியம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பாரட்டுக்களை பெறுவீர்கள். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைக்கும்.
மாணவர்கள்
ராகு பகவான் ஆண்டின் முற்பகுதியில் லாப வீட்டில் பயணம் செய்வதால் உங்களுக்கு பல வழிகளிலும் பண வருமானம் வரும். 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தொழில் ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு பகவான் வேலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்.
படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடி வரும். மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications