Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இன்று வானில் நிகழும் சூப்பர் ப்ளூ மூன்: இந்த ராசிக்காரர்களைத் தேடி பணம் வரப்போகுது... உங்க ராசிக்கு எப்படி?
Super Blue Moon 2024: இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை வடஇந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரர்களுக்கு தங்கைமார்கள் ராக்கி கயிற்றினை கட்டி, தங்களின் பாசத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டின் ரக்ஷா பந்தன் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் ஒரு அற்புதமான நிகழ்வு வானில் நிகழவுள்ளது.
அதாவது, இன்று இரவு வானில் ப்ளூ மூன் என்னும் அரிய நிகழ்வு நிகழவுள்ளது. இந்த நேரத்தில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது அது சூப்பர் ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. 16 கட்டங்கள் நிறைந்த சந்திரன் இந்நாளில் மிகவும் பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மேலும் இந்த ப்ளூ மூன் 3 நாட்கள் வரை முழுவதுமாக வானில் தெரியும். இருந்தாலும், 3 ஆவது நாளில் சந்திரனின் அளவு குறையத் தொடங்கும்.

முக்கியமாக ரக்ஷா பந்தன் தினத்தன்று பௌர்ணமியும் கூட. இந்நாளில் சந்திரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். மேலும் இந்நாளில் சச ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம், விஷ ராஜயோகம் போன்ற அற்புதமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனால் ஜோதிடத்தின் படி, இந்த ரக்ஷா பந்தன் மற்றும் ப்ளூ மூன் நாளானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது ப்ளூ மூன் நிகழ்வால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம கிடைக்கும். இதனால் பணப் பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கூட்டு தொழில் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஆனால் பண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. நெருக்கமான ஒருவருடன் விரிசல் ஏற்பட்டால், எல்லா கசப்புகளும் போய்விடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது விவேகமாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் கனவு நிறைவேறும். பணிபுரிபவர்களின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீராக நடக்கும். சில பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். திட்டமிட்டபடி வேலையை முடிக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் முக்கியமான வேலைகளில் கவனத்தை செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் நம்பிக்கையும், நேர்மையும் நல்ல வெற்றியைத் தரும். அனுபவமிக்க ஒருவரின் வழிகாட்டுதல்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உறவுகளில் அதிக கவனத்தை செலுத்துவீர்கள். அனைத்து குறைகளையும் நீக்க முயற்சிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் மாற்றம் ஏற்பட்டு உங்களின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சில புதிய நண்பர்களையும் உருவாக்கலாம். பணியிடத்தில் சவால்கள் இருக்கும், ஆனால் உங்கள் தைரியம் மற்றும் விவேகத்தால் ஒவ்வொரு சிரமத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தேவையற்ற கவலைகளால் முக்கியமான வேலைகளில் கவனத்தை செலுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். கடினமாக உழைக்க வேண்டும். இதனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மன அமைதியைப் பராமரிக்க தினமும் தியானம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











