Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
12 மாதம் கழித்து உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Sun Venus Make Vipreet Rajyog 2026: ஜோதிடத்தைப் பொறுத்தவரை, 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ஒரே ராசியில் நுழைந்து, ஒன்றிணைந்து பயணிப்பதோடு, பல ராஜயோகங்களையும் உருவாக்கவுள்ளன. அந்த வகையில் சனி பகவானின் கும்ப ராசியில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் ஒன்றிணையவுள்ளனர்.
அதில் முதலாவதாக சுக்கிரன் பிப்ரவரி 06 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைவார். இதனால் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் புதனுடன் சேர்ந்து லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். மேலும் இந்த ராசியில் ராகுவும் இருப்பதால், மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகும். அதன் பின் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்து, சுக்கிரனுடன் சேர்வதால் சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்குவதோடு, மீன ராசியில் விபரீத ராஜயோகத்தை உருவாக்கும்.

இப்படி சூரியனும் சுக்கிரனும் உருவாக்கும் விபரீத ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் நிதி நிலையில் நல்ல உயர்வையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. இப்போது விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சூரியன் சுக்கிரனால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்தியைப் பெறக்கூடும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். செல்வம் பெருகும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
கும்பம்
சூரியன் சுக்கிரனால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் இந்த ராசியின் அதிபதி சனி பகவான். அதோடு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த விபரீத ராஜயோகத்தால் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
மீனம்
சூரியன் சுக்கிரனால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களின் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நிறைய பணத்தை செலவிடுவீர்கள். இருப்பினும் பண வரவு சிறப்பாக இருக்கும். சனியின் நிலையால் மன அழுத்தத்தில் இருந்தாலும், இந்த ராஜயோக காலத்தில் மன அமைதியைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஜோதிடம், மந்திரம், ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் கணிசமான பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications