Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
18 ஆண்டுகளுக்கு பின் கன்னியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது
Trigrahi Yog In Virgo 2024 After 18 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஒவ்வொரு முறை நிகழும் போதும், அது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் சில கிரகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே ராசியில் ஒன்றிணைந்து, சுப யோகங்களை உருவாக்கலாம்.
அப்படி தான் 18 ஆண்டுகள் கழித்து கன்னி ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் திரிகிரக யோகமும் உருவாகவுள்ளது. அதாவது, கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், செல்வத்தைத் தரும் சுக்கிரன் மற்றும் நிழல் கிரகமான கேது ஆகிய மூன்றின் சேர்க்கையால் கன்னி ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

ஏற்கனவே கன்னி ராசியில் கேது மற்றும் சுக்கிரன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்துடன், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இப்போது கன்னி ராசியில் உருவாகவுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலம் பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோருடன் நல்லுறவைப் பேணுவார்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அதுவும் இந்த லாபம் எதிர்பாராத அளவில் பெரிய தொகையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாரா நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். நல்ல நட்புக்களை இக்காலத்தில் பெறும் வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களின் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நடக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபுவர்கள் அலுவலகத்தில் உயர்அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் நல்லுறவை கொண்டிருப்பார்கள். இது அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை அளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications