Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் மாலிகா ராஜயோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
Sun Transit Make Malika Rajyog: வேத ஜோதிடத்தின் படி, புத்திகாரகனான புதன் ஜூன் 14 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குடள நுழைந்தார். இந்த மிதுன ராசியில் புதன் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார்.
அதைத் தொடர்ந்து ஜூன் 15 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சூரிய பெயர்ச்சியால் புதாதித்ய ராஜயோகம், பத்ர யோகம், லட்சுமி நாராயண யோகம் போன்றவை உருவாகவுள்ளன. அத்துடன் அனைத்து கிரகங்களும் ஒரே வரிசையில் வருவதால் மாலிகா ராஜயோகமும் உருவாகவுள்ளது.

இந்த மாலிகா ராஜயோகம் ஒரு சுப யோகம். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் பம்பர் பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது மாலிகா ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மாலிகா ராஜயோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்களை வழங்கும். குறிப்பாக வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த யோக காலத்தில் தொடங்கினால் நல்ல வெற்றியையும், லாபத்தையும் தரும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மாலிகா ராஜயோகமானது சிறப்பான பலன்களை அளிக்கும். அதுவும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வக்கீல்கள், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறும். மேலும் உங்களின் பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். முக்கியமாக உயர் அதிகாரிகளின் உதவியால இலக்கை எளிதில் அடைவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மாலிகா ராஜயோகமானது நல்ல பொருள் இன்பத்தை வழங்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகள் சமூகத்தில் உங்கள் நிலையை உயர்த்தும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications